Latest Updates
-
மின்விசிறிகளில் ஏன் எப்போதும் மூன்று இறக்கைகள் மட்டுமே உள்ளது தெரியுமா? இதுல இவ்ளோ விஷயம் இருக்கா? -
1 கப் பாஸ்மதி அரிசி இருந்தா இந்த காஷ்மீர் பேமஸ் யக்னி புலாவை செஞ்சு பாருங்க - டேஸ்ட் வேற லெவலில் இருக்கும் -
ஜூலை 16-ல் நிகழும் சூரியன்-சந்திரன் அரிய சேர்க்க: இந்த 3 ராசிகளை கோடீஸ்வரராக்க போகுதாம் - உங்க ராசி என்ன? -
இந்த அறிகுறிகளில் ஒன்று உங்கள் வீட்டில் இருந்தாலும் நீங்க பணக்கஷ்டத்தில் சிக்க போறீங்களாம் - சாணக்கிய தந்திரம் -
சேமியா உப்புமாவும், தேங்காய் சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 15 ஜூலை 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு சவால்கள் நிறைந்த நாளாக இருக்குமாம் -
கடக ராசியில் அஸ்தமனமாகும் குரு பகவான்: இன்று முதல் 12 ராசிக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
வீட்டுல காய்கறி எதுவும் இல்லையா? மீல் மேக்கர் வெச்சு இந்த வெள்ளை சால்னா செய்யுங்க.. அள்ளும்.. -
வெயிலால் கருப்பாகியுள்ள சருமத்தை வெள்ளையாக்கணுமா? அப்ப தக்காளியை இப்படி யூஸ் பண்ணுங்க.. -
ஜூலை இறுதியில் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்கு பண மழை கொட்டப்போகுது...
வாஸ்துப்படி, வீட்டின் இந்த திசையில் கறிவேப்பிலை செடியை வெச்சா.. வீட்டில் செல்வம் இருமடங்கு அதிகரிக்குமாம்..
Vastu Tips In Tamil: ஒவ்வொருவருமே தங்கள் வீட்டை அழகாக வைத்துக் கொள்ள விரும்புவார்கள். வீட்டின் அழகு என்பது வீட்டிற்கு உள்ளே மட்டுமின்றி, வெளியேயும் பொருந்தும். வீட்டின் வெளிப்புறத்தை அழகாக வைத்துக் கொள்ள பலர் செடிகளை வாங்கி வைப்பார்கள். அப்படி செடிகளை வைப்பதாக இருந்தால், ஒவ்வொரு செடியையும் வாஸ்து சாஸ்திரத்தின் படி சரியான திசையில் வைக்க வேண்டும்.
ஏனெனில் தவறான திசையில் செடிகளை வைத்து வளர்த்து வந்தால், அது வாஸ்து தோஷங்களை ஏற்படுத்தி, வீட்டில் பல பிரச்சனைகளை கொண்டு வருவதோடு, வீட்டின் மகிழ்ச்சியையே அழிக்கும். என்ன தான் செடிகள் வீட்டிற்கு வெளியே இருந்தாலும், அவை ஒருவரது வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.

வீட்டில் செடிகளை வளர்க்க விரும்பும் பலர், பெரும்பாலும் வீட்டிற்கு மற்றும் சமையலுக்கு பயனுள்ளதாக இருக்குமாறான செடிகளைத் தான் வளர்ப்பார்கள். அதில் மிகவும் முக்கியமான செடி தான் கறிவேப்பிலை. தினசரி சமையலில் கட்டாயம் சேர்க்கப்படும் ஒரு பொருள் தான் கறிவேப்பிலை. எளிதில் வளரக்கூடிய கறிவேப்பிலையை வீட்டில் வளர்க்க விரும்பினால், அதை வாஸ்து விதிகளைப் பின்பற்றி வைக்க வேண்டும். இப்போது வாஸ்துப்படி கறிவேப்பிலை செடியை எங்கு வைக்க வேண்டும் என்பதைக் காண்போம்.
எந்த திசையில் கறிவேப்பிலை செடியை வைக்க வேண்டும்?
வாஸ்து சாஸ்திரத்தின் படி, கறிவேப்பிலை செடியை வைக்க சிறந்த திசையாக கருதப்படுவது சந்திரனுக்கு உரிய திசையான மேற்கு திசை தான். இந்த மேற்கு திசையில் கறிவேப்பிலை செடியை வளர்த்து வந்தால், அது அந்த வீட்டில் உள்ளோரின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். மேலும் வீட்டில் உள்ள பிரச்சனைகள் குறைந்து, வீடு மகிழ்ச்சியாக இருக்கும்.
எதிர்மறை ஆற்றலை நீக்க...
வீட்டின் தோட்டத்தில் கறிவேப்பிலையை செடியை ஒருவர் வைத்து வளர்த்து வந்தால், அது அந்த வீட்டில் உள்ள எதிர்மறை ஆற்றலை வெளியேற்றுவதோடு, வீட்டிற்கு நல்ல அதிர்ஷ்டத்தையும் கொண்டு வரும். அதோடு வீட்டில் செல்வமும் பெருகும்.
கறிவேப்பிலையின் நன்மைகள்
கறிவேப்பிலை ஜோதிடத்தில் மட்டுமின்றி, ஆரோக்கியத்தைப் பொறுத்தவரையிலும் பயனுள்ளதாக கருதப்படுகிறது. கறிவேப்பிலை புற்றுநோய் மற்றும் சர்க்கரை நோய்களின் அறிகுறிகளில் இருந்து நிவாரணத்தை அளிக்கிறது. அதுவும் இதில் உள்ள மருத்துவ பண்புகள், வயிற்று புற்றுநோயைத் தடுக்க உதவுகிறது. மேலும் இது இதய நோயைத் தடுக்கவும் உதவுகிறது. கண்களுக்கும் நல்லதாக கருதப்படுகிறது. முக்கியமாக தலைமுடிக்கு மிகவும் நல்லது.
செல்வம் பெருக எந்த திசையில் வைக்க வேண்டும்?
வாஸ்து சாஸ்திரத்தின் படி, கறிவேப்பிலையை செடியை மேற்கு திசையை விட, தென்கிழக்கு மூலையில் வைப்பது இன்னமும் நல்லதாக கருதப்படுகிறது. இந்த திசையில் கறிவேப்பிலை செடியை வைத்தால், அது வீட்டிற்கு செல்வ செழிப்பைக் கொண்டு வரும். எனவே உங்கள் வீட்டில் செல்வம் பெருக விரும்பினால், கறிவேப்பிலை செடியை வீட்டின் தென்கிழக்கு மூலையில் வைத்து வளர்த்து வாருங்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications