Latest Updates
-
வக்ரமாகும் சனிபகவான்: ஜூலை முதல் 138 நாட்களுக்கு இந்த 4 ராசிக்கு தொழில் வளரும், வருமானம் அதிகரிக்கும்! -
வெயில் காலத்தில் ஏன் அடிக்கடி சண்டை வருது? தம்பதிகளே, இந்த ஒரு விஷயத்தை கவனிங்க! -
திருமண சீசன்ல வெயில், மழையால் கவலையா? பட்ஜெட் வீணாகாம இருக்க இந்த 5 டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க! -
வயசானாலும் இளமையா தெரியணுமா? அப்ப இந்த நேச்சுரல் ஃபேஸ் பேக்குகளை போடுங்க.. -
1 கப் உளுந்து இருந்தா, ஈவ்னிங் டைம்-ல இப்படி செஞ்சு குடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
பாபா வாங்கா கணிப்புப்படி, அடுத்த 6 மாதம் இந்த 5 ராசிக்கு ராஜவாழ்க்கை தான்.. உங்க ராசி இதுல இருக்கா? -
ஜூன் மாத வானிலை மாற்றமா? இந்த 5 வாஸ்து செடிகள் இருந்தா வீடே குளிர்ச்சியாகவும் அதிர்ஷ்டமாகவும் மாறும்! -
அடிக்குற வெயிலுக்கு மாம்பழத்தை இப்படி சர்பத் செஞ்சு குடிங்க.. குளுகுளுன்னு இருக்கும்.. -
உங்களுக்கு மாரடைப்பு வரக்கூடாதா? அப்ப டாக்டர் சொல்ற இந்த டயட்டை ஃபாலோ பண்ணுங்க.. -
சுக்கிர பெயர்ச்சியால் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 5 ராசிக்காரர்களுக்கு செல்வம் இரட்டிப்பாகும்..
வெங்காயம் வெட்டும் போது கண்ணீர் வராமல் இருக்கணுமா? அப்ப இந்த வழிகளை ட்ரை பண்ணுங்க...
Onion Cutting Tips In Tamil: நமது தினசரி சமையலில் பயன்படுத்தப்படும் ஒரு முக்கியமான காய்கறி தான் வெங்காயம். இப்படிப்பட்ட வெங்காயம் என்ன தான் ஈஸியாக வெட்டக்கூடிய காய்கறியாக இருந்தாலும், இது எப்பேற்பட்ட தைரியசாலியின் கண்களில் இருந்தும் கண்ணீரை வரவழைத்துவிடும்.
இதற்கு வெங்காயத்தில் உள்ள சல்பர் தான் காரணம். இந்த சல்பர் காற்றில் கலந்து, நம் கண்களுடன் தொடர்பு கொள்ளும் போது, அவை ஒருவிதமான அமிலங்களை உருவாக்கி, கண்களில் இருந்து கண்ணீரையும், கடுமையான எரிச்சலையும் ஏற்படுத்துகின்றன.

இப்படிப்பட்ட அசௌகரியத்தை சமைக்கும் ஒவ்வொருவரும் காலம் காலமாக அனுபவித்து தான் வருகிறார்கள். வெங்காயத்தை வெட்டும் போது கண்ணீர் வராமல் இருக்கவும், கண் எரிச்சல் ஏற்படாமல் இருக்கவும் ஏதாவது வழிகள் உள்ளதா என்று நீங்கள் தேடிக் கொண்டிருக்கிறீர்களா? அப்படியானால் இக்கட்டுரை உங்களுக்கானது. ஏனெனில் கீழே வெங்காயம் வெட்டும் போது கண் எரிச்சல் மற்றும் கண்ணீர் வருவதைத் தடுக்கும் சில வழிகள் உள்ளன. அந்த வழிகளை ட்ரை செய்து வெங்காயத்தை உரித்துப் பாருங்கள்.
டிப்ஸ் #1
வெங்காயத்தை வெட்டும் போது கண்ணீர் வராமல் இருக்கணுமா? அப்படியானல் வெங்காயத்தின் தோலை உரித்த பின், அதை குளிர்ந்த நீரில் 10-15 நிமிடங்கள் ஊற வைத்து, பின் வெங்காயத்தை வெட்டுங்கள். இப்படி குளிர்ந்த நீரில் ஊற வைக்கும் போது சல்பரின் வீரியம் குறைந்து, கண்ணீர் வருவது தடுக்கப்படும்.
டிப்ஸ் #2
வெங்காயத்தால் கண் எரிச்சல் மற்றும் கண்ணீர் வராமல் இருக்க, அதை உரிக்கும் முன் ஃப்ரிட்ஜ்ஜில் சுமார் 10 நிமிடங்கள் வைத்து, அதன் பின் எடுத்து தோலை உரித்து வெட்டுங்கள். இப்படி செய்தாலும் வெங்காயத்தால் அழுவதைத் தடுக்கலாம்.
டிப்ஸ் #3
கிராமப்புறங்களில் வெங்காயம் கண்ணீர் வராமல் இருக்க, வெங்காயத்தை வெட்டும் போது வாயில் சிறிது நீரை ஊற்றிக் கொள்வர். இப்படி செய்வதனால் வெங்காயத்தால் கண்ணீர் எரிவது ஓரளவு குறையும்.
டிப்ஸ் #4
வெங்காயத்தை நறுக்கியதும், அதை நீரில் போட்டு வைப்பதன் மூலம், அவற்றின் வாசனையும், சல்பரின் தீவிரமும் குறைந்து, வெங்காயத்தின் காட்டம் குறையும். இப்படி செய்வதன் மூலமும் வெங்காயத்தால் அழுவதைத் தடுக்கலாம்.
டிப்ஸ் #5
வெங்காயம் வெட்டும் போது கண் எரிச்சல் மிகவும் அதிகமாக உள்ளதா? அப்படியானால் மிகவும் கூர்மையான கத்தியைப் பயன்படுத்துங்கள். இப்படி பயன்படுத்தும் போது வெங்காயத்தில் இருந்து வெளிவரும் சல்பரின் வெளியீடு குறைந்து, கண் எரிச்சலும் குறையும்.
டிப்ஸ் #6
வெங்காயத்தால் சந்திக்கும் கண் எரிச்சலையும், கண்ணீர் வெளிவருவதையும் குறைக்க வேண்டுமா? அப்படியானால் ஃபேனுக்கு அடியில் அல்லது அருகில் அமர்ந்து வெங்காயத்தை வெட்டுங்கள். இதனால் அதில் உள்ள சல்பர் கண்களில் படாமல் சிதறடிக்கப்படும். இதன் விளைவாக கண்ணீர் வெளிவருவது தடுக்கப்படும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications