Just In
- 3 hrs ago
இன்றைய ராசிப்பலன் (26.02.2021): இன்று இந்த ராசிக்காரங்க ஆரோக்கியத்துல ரொம்ப கவனமா இருக்கணும்...
- 13 hrs ago
இந்த அறிகுறிகள் உங்க கணவன் அல்லது காதலனிடம் இருந்தால் அவர் உங்களுடன் வாழும் ஆர்வத்தை இழந்துட்டாராம்!
- 15 hrs ago
நிச்சயிக்கப்பட்ட திருமணம் செய்வது உண்மையில் நல்லதா? அதிலிருக்கும் நன்மைகள் மற்றும் ஆபத்துகள் என்ன?
- 17 hrs ago
பெண்களின் முக்கியமான முடி பிரச்சினையை குணப்படுத்த உதவும் வீட்டு வைத்தியங்கள் என்னென்ன தெரியுமா?
Don't Miss
- News
இன்று பாரத் பந்த்.. அகில இந்திய வர்த்தக கூட்டமைப்பு நாடு தழுவிய முழு அடைப்பு போராட்டம்
- Automobiles
விற்பனைக்கு வரவிருக்கும் 3 புதிய சீன எலக்ட்ரிக் மோட்டார்சைக்கிள்கள்!! சூப்பர் சோகோ பிராண்டில் வருகின்றன...
- Movies
48வது பிறந்தநாள் காணும் கௌதம் மேனன்..குவியும் வாழ்த்து !
- Finance
Mphasis நிறுவன பங்குகள் விற்பனை.. தனி ஆளாக களத்தில் இறங்கும் கார்லைல்..!
- Sports
2 நாளில் முடிவிற்கு வந்த டெஸ்ட்.. இங்கிலாந்தை தூசி தட்டிய இந்திய அணி.. அசர வைக்கும் "ஸ்பின்" வெற்றி!
- Education
ரூ.67 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
நாய்களுக்கு முடி உதிர்வை ஏற்படுத்தும் உணவுப் பொருட்கள்!!!
எப்படி மனிதர்களுக்கு கூந்தல் உதிர்வு ஏற்படுகிறதோ, அதே போன்று வீட்டில் வளர்க்கும் செல்ல பிராணியான நாய்களுக்கும் முடி உதிர்வு ஏற்படும். இதற்கு முக்கிய காரணம் நாய்கள் சாப்பிடும் உணவுகள் தான். எப்போது நாய்களின் உணவுகளில் சோடியம் அதிகப்படியாக உள்ளதோ, அப்போது அதற்கு முடி உதிர்வு ஏற்படும். அதுமட்டுமின்றி, வேறு சில உணவுகளும் நாய்களுக்கு முடி உதிர்வை ஏற்படும்.
பொதுவாக அனைத்து வீடுகளிலும் வீட்டில் மிஞ்சிய உணவுகளை நாய்களுக்கு போடுவார்கள். ஆனால் அப்படி நாய்களுக்கு போடும் போது, மிகவும் கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில் அப்படி நாய்களுக்கும் போடும் உணவுகளானது அவற்றிற்கு அரிப்புக்களை ஏற்படுத்தி, முடி உதிர்வை ஏற்படுத்தும்.
உங்க நாய்க்கு உடம்பு சரியில்லையா? இந்த உணவுகளைக் கொடுங்க...
எனவே வீட்டில் செல்லமாக நாயை வளர்த்தால், அதன் ஆரோக்கியத்தைப் பாதுகாப்பது அதனை வளர்ப்போரின் கடமையாகும். ஆகவே நாய்களுக்கு உணவைக் கொடுக்கும் போது, அதற்கு எந்த உணவுகள் ஆரோக்கியம் என்பது பற்றி நாயை வளர்க்கும் ஒவ்வொருவரும் தெரிந்து கொள்ள வேண்டும்.
இங்கு நாய்க்கு முடி உதிர்வை ஏற்படுத்தும் உணவுகள் கொடுக்கப்பட்டுள்ளன. அந்த உணவுகள் என்னவென்று படித்து, அவற்றை நாய்களுக்கு கொடுப்பதை தவிர்த்திடுங்கள்.

உப்பு
சமைக்கும் போது உணவில் சேர்க்கப்படும் பொருட்களில் முக்கியமான ஒன்று தான் உப்பு. ஆனால் நாய்க்கு கொடுக்கப்படும் உணவுகளில் உப்பு அதிகமாக இருந்தால், அது அவைகளுக்கு முடி உதிர்வை ஏற்படுத்தும். எனவே அதன் உணவில் உப்பு சேர்ப்பதை தவிர்த்திடுங்கள்.

இனிப்புகள்
எப்படி மனிதர்களுக்கு இனிப்பின் மீது ஆசை உள்ளதோ, அதேப் போன்று நாய்களுக்கும் இருக்கும். ஆனால் அதனை நாய்கள் சாப்பிட்டால், முடி உதிர்வு தான் ஏற்படும். ஆகவே இதனை நாய்களுக்கு கொடுக்காதீர்கள்.

சோளம்
சில நாய்களுக்கு சோளம் அலர்ஜியை ஏற்படுத்தும். ஆனால் இந்த விஷயம் பலருக்கு தெரிய வாய்ப்பில்லை. எனவே உங்கள் நாய்க்கு சோளம் அலர்ஜி என்றால், அதற்கு திடீரென்று முடி உதிர்வது அதிகமாக இருக்கும். ஏனெனில் சோளத்தில் உப்பு மற்றும் இனிப்பு உள்ளது. ஆகவே இந்த உணவுப் பொருளை கொடுக்கவே கூடாது.

கோதுமை
கோதுமையில் உப்பு உள்ளது. ஆகவே உங்கள் நாய்க்கு இதனை கொடுக்க வேண்டாம். ஒருவேளை உங்கள் நாய்க்கு ரொட்டி கொடுக்க வேண்டுமானால், மைதாவால் செய்த ரொட்டியைக் கொடுங்கள்.

பார்லி
பார்லி கூட நாய்களுக்கு முடி உதிர்வை ஏற்படுத்தும். ஏனெனில் பார்லியில் இயற்கையாகவே இனிப்புகளானது நிறைந்துள்ளது. எனவே நாய்களின் உணவுகளில் இதனை சேர்க்க வேண்டாம்.

காரமான உணவுகள்
நாய்களுக்கு காரமான உணவுகள் என்றால் மிகவும் இஷ்டம். ஆனால் இந்த உணவுகள் நாய்களுக்கு சிறந்தது அல்லது. மாறாக அவை நாய்களுக்கு அதிகப்படியான முடி உதிர்வை ஏற்படுத்தும். எனவே உங்கள் நாய்க்கு நீங்கள் காரமான உணவுகள் கொடுத்துக் கொண்டிருந்தால், உடனே நிறுத்திவிடுங்கள்.

முட்டை
சில நாய்களுக்கு முட்டையின் மஞ்சள் கருவானது அலர்ஜியை ஏற்படுத்தும். எனவே அவற்றறை கொடுப்பதை தவிர்த்திடுங்கள்.

நெய்
நிறைய வீடுகளில் உணவில் நெய்யை அதிகம் சேர்ப்பார்கள். ஆனால் நாய்களுக்கு நெய் கொடுக்கக்கூடாது.

வெங்காயம்
நாய்களின் உணவுப் பட்டியலில் சேர்க்கக்கூடாத உணவுப் பொருட்களில் முதன்மையானது தான் வெங்காயம். வெங்காயமானது நாய்களுக்கு முடி உதிர்வை ஏற்படுத்தும்.

பேரிச்சம் பழம்
பேரிச்சம் பழமும் நாய்களின் முடிக்கு பாதிப்பை ஏற்படுத்தும். எனவே இவற்றையும் உங்கள் நாய்க்கு கொடுக்காதீர்கள்.