Latest Updates
-
ரவா இட்லியும், மல்லி சட்னியும் - சட்டுன்னு 15 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அள்ளும்! -
இன்றைய ராசிபலன் 18 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் கதவை தட்டுமாம் -
100 ஆண்டுக்கு பின் மேஷ ராசியில் உருவாகும் திரிகிரக யோகம் இந்த 3 ராசிக்காரர்களை கோடீஸ்வரராக்கப் போகுதாம் -
வாஸ்து படி இந்த செடிகளில் ஒன்றை உங்கள் வீட்டில் வளர்த்தால் பணமும், அதிர்ஷ்டமும் தேடிவருமாம் -
சந்திரன்-சுக்கிரனால் உருவாகும் அரிய லட்சுமி ராஜயோகம்: நாளை முதல் இந்த 3 ராசிக்கு பண மழை கொட்டும்! -
சிக்கன் குருமா சுவையில் தக்காளி குருமா- எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.. -
ஆந்திரா ஸ்டைல் பச்சை மாங்காய் சட்னி ரெசிபி - செஞ்சு பாருங்க டேஸ்ட் தரமா இருக்கும் -
கோடையில் உங்க வீட்டை குளுகுளு-ன்னு வெச்சுக்கணுமா? அப்ப இந்த 5 டிப்ஸை கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க! -
இந்தியாவில் இரண்டு தலைநகரங்கள் உள்ள தனித்துவமான மாநிலங்கள் என்னென்ன தெரியுமா? -
அட்டகாசமான வாழைக்காய் புளி கூட்டு ரெசிபி: ட்ரை பண்ணி பாருங்க - சூப்பரா இருக்கும்
நாயின் உடல்மொழியை அறிய சில சூப்பர் டிப்ஸ்...
வீட்டில் வளர்க்கும் செல்ல பிராணி என்றால் முதலில் நமக்கு நினைவில் வருவது நாய் தான். பல பேர் வீட்டில் நாயும் ஒரு உறுப்பினராகவே வாழ்கிறது. அந்த அளவில் நாயின் மீது அன்பும், அதன் பராமரிப்பும் இருக்கும். நாய்கள் பேசினால் எவ்வளவு நன்றாக இருக்கும், அதுவும் மனித மொழியில். அப்படி பேசாததால் அவற்றிற்கு மொழி இல்லையென்றில்லை. அது தங்கள் சத்தத்தையும், உடல்மொழியையும் (Body Language) வைத்து தகவலைத் தெரிவிக்கிறது. இதை வைத்து அவற்றிற்கு பிடித்த உணவு, பிடித்த நபர் அல்லது விரட்டிச் செல்ல பிடித்த பூனை போன்றவற்றை எளிதில் கூறலாம்.
இதன் செய்கையால் அதன் தன்முனைப்பு நடத்தையை அறிந்து அதை கட்டுப்படுத்த முடியும். நாய் எப்போது பயமுறுத்தப்பட்டு பாய்வதற்கு முற்படுகிறது என்பதை அதன் உடல்மொழியை வைத்தே அறிந்து, நம்மையும், நாயையும் பாதுகாத்துக் கொள்ளலாம். நாயின் உடல்மொழியை படிக்கும் போது, அதன் ஒட்டு மொத்த உடல்மொழியையும் எடுத்து, தனி தனி வகைகளாக பிரித்து பார்த்தால். அதன் உடல்மொழியை வேகமாக கற்கலாம் என்று அமெரிக்காவை சேர்ந்த மிருகவதை சங்கம் கூறுகிறது.

குரல்
நாயின் குரலை கூர்ந்து கவனிக்க வேண்டும். நாய் பலத்தரப்பட்ட சப்தங்களில் குரைக்கவும், பலமின்றிச் சிணுங்கவும் செய்யும். நாய் சிணுங்கினால், அது பயந்தோ அல்லது உடம்பு சரியில்லாமலோ அல்லது மிகுந்த ஆவலோடு உள்ளதாக அர்த்தமாகும். சில நாய்கள் அதிக சந்தோஷத்தில் இருக்கும் போது சிணுங்கும். அதே போல் தன் குரலை உயர்த்தியோ அல்லது அதிகமாக குரைத்தோ தன் உணர்ச்சியை வெளிப்படுத்தும். ஒரு நாய் தன் கோபத்தை வெளிப்படுத்தவே குரைக்கும் என்றில்லை. தன் குதூகலத்தை, சந்தோஷத்தை, சலிப்புத்தனத்தை, வெறுப்பை காட்டுவதற்கும் அது குரைக்கும். ஒரு உறுமும் நாய் தன் கோபத்தை காட்டவே அப்படிச் செய்யும். ஆனால் ஒரு குட்டி நாயின் உறுமல் இதில் அடங்காது, அது விளையாட்டுத்தனமான உறுமலாகும்.

வாய்
நாயின் வாயை கவனிக்கவும். ஒரு நாய் தன் மேல் உதட்டை மடித்து தன் பயமுறுத்தும் பற்களை காட்டலானால், அது மிகுந்த கோபத்தில் கடிப்பதற்கு தயாராக இருக்கிறது என்று அர்த்தம். வெற்று பற்களுடன் ஒரு சின்ன சிணுங்கலும் சேர்ந்து இருக்கும். சந்தோஷமாக இருக்கும் நாய் அமைதியாகவும் வாயை மூடியும் அல்லது சிறிது திறந்தும் இருக்கும். அந்த நேரம் சிறிது மூச்சிரைக்கவும் செய்யும். மிகுந்த உற்சாகத்தில் இருக்கும் நாயும் மூச்சிரைக்கும். சில நாய்கள் பணிவாக போகின்ற நேரத்தில் பற்களை காட்டிச் சிரிக்கவும் செய்யும் என்று சொல்கிறார் நாய் நடத்தையின் வல்லுநர் டேவிட் டெய்லர்.

கண்
நாயின் கண்களை பார்க்க வேண்டும். சந்தோஷமாக இருக்கும் நாய்களின் கண்கள் இயல்பான நிலையில் பளிச்சென்று இருக்கும். குழம்பிய நிலையில் இருக்கும் நாய்கள், கண் இமைகளை உயர்த்தி தலையை சாய்த்து தன் உணர்வை காட்டும். பயத்துடன் இருக்கும் நாய், மூர்க்கத்தனமான கண்களுடன், தோள்கள் பின்னடைந்து, வெண்ணிற கண்கள் கலங்கியும் இருக்கும். மூர்க்கத்தனமான கோபத்துடன் இருக்கும் நாய்கள், எதிராளியான மனிதனிடமோ அல்லது மிருகமிடமோ துணிச்சலுடன் கண்ணை நோக்கி பார்க்கும். நாயின் கண்கள் இயல்பு நிலையை விட சின்னதாக இருந்தால், அது பயந்தோ அல்லது உடல் நிலை சரியில்லாமலோ இருக்கும் என்று ASPCA சொல்கிறது.

வால்
நாயினுடைய வாலின் நிலையை பார்க்கவும். சந்தோஷமான தருணத்தில் அது தன் வாலை ஆட்டிக் கொண்டிருக்கும். ஆனால் அதற்காக வாலை ஆட்டினால் அது எப்போதும் சந்தோஷமாகத் தான் இருக்கிறது என்று சொல்ல முடியாது. அது கோபத்தின் வெளிப்பாடாகக் கூட இருக்கலாம். அதனால் வாலை ஆட்டும் போது, அதன் உடல்மொழியுடன் சேர்த்து முடிவு செய்ய வேண்டும்.
நாயின் வால் அதன் கால்களுக்கு நடுவில் இருந்தால் அது பயந்தோ அல்லது பணிந்தோ உள்ளது என்று அர்த்தம். பயத்துடன் இருக்கும் நாயின் வால் தரையை நோக்கி இறுகி போய் இருக்கும். அதுவே அது மிகுந்த கோபத்துடன் இருந்தால் அதன் வால் வானத்தை நோக்கி இறுகி போய் இருக்கும். இப்படி வால் இருக்கும் நேரம், இறுகிய உடம்புடன், கூர்மையாக்கிய காதுகளுடன், பற்கள் தெரிய அது இருந்தால், அது யாரையாவது தாக்கப் போகிறது என்று நமக்கு தரும் எச்சரிக்கை.

காது
நாயின் காதுகளை கவனிக்க வேண்டும். சுகமாக இருக்கும் நாய்களின் காதுகள் இயல்பாக இருக்கும். நாய் எதையாவது கவனிக்கும் போது அல்லது விழிப்பாக இருக்கும் போது காதுகள் தலையின் மேல் கூர்மையாக இருக்கும். அதுவே சற்று பின்னோக்கி இருந்தால், அது நட்புடைய உணர்வோடு இருக்கிறது என்று அர்த்தம். பணிந்து அல்லது பயந்து போன நாய்களின் காதுகள் தலையோடு தட்டையாக அல்லது ஓரமாக இருக்கும்.

ஒட்டுமொத்த உடல்
நாயின் ஒட்டுமொத்த உடல் தோரணையை கவனிக்கவும். அது விளையாட வேண்டுமானால், கீழே குனிந்து, முன்னங்காலை கூனிக் குறுகும். சந்தோஷமாக இருக்கும் நேரம், அதன் தசைகள் லேசாகி ஓய்வெடுக்கும். இதுவே பயந்த நிலையில் இருந்தால், தன் உடலை பின்னோக்கிச் சென்று தன்னை சிறியதாக காட்டச் செய்யும். மேலும் தரையை நோக்கி பதுங்கும். ஆளுமை அல்லது விழிப்புடன் இருக்கும் நேரத்தில், அது தன் தசைகளை இறுக்கமாக்கி, நிமிர்ந்து நிக்கும். பணிந்து போகும் நாய்கள் பின்னங்காலை தூக்கி, பின்பக்கமாக சுற்றிக் கொள்ளும்.



Click it and Unblock the Notifications











