For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நாய்களுக்கு நிச்சயம் கொடுக்கக்கூடாத உணவுகள்!!!

By Maha
|

நாய்களை செல்லமாக வளர்ப்பவர்கள், நாய்களுக்கு எதை வேண்டுமானாலும் கொடுக்கலாம் என்று நினைக்கின்றனர். ஆனால் நாய்களுக்கு அவ்வாறு அனைத்து உணவுகளையும் கொடுத்தால், அதன் உடலுக்கு பிரச்சனை தான் ஏற்படும். ஏனெனில் நாயின் செரிமான மண்டலம் வித்தியாசமானது. இதில் அனைத்து விதமான உணவுகளும் செரிமானமாகாது. அதற்கு பதிலாக அதற்கு வாந்தி, வயிற்று வலி, செரிமானப் பிரச்சனை போன்ற பாதிப்பு தான் ஏற்படும்.

முதலில் நாயை வளர்ப்பவர்கள், நாய்க்கு எந்த மாதிரியான உணவுகளை கொடுக்க கூடாது என்பதை நன்கு தெரிந்து கொள்ள வேண்டும். அத்தகையவர்களுக்காக தான், நாய்க்கு நிச்சயம் கொடுக்கக்கூடாத சில உணவுகளைப் பட்டியலிட்டுள்ளோம். அது என்னவென்று படித்து தெரிந்து, அதனை வீட்டில் செல்லமாக வளர்க்கும் நாய்க்கு கொடுக்காதீர்கள்.

Foods That Your Dog Shouldn't Eat

நாய்களுக்கு கொடுக்கக்கூடாத உணவுகள்:

வெங்காயம் மற்றும் பூண்டு: நிறைய கால்நடை மருந்துவர்கள், நாய்களுக்கு நிச்சயம் வெங்காயம் மற்றும் பூண்டு சேர்த்த உணவுகளைக் கொடுக்கக்கூடாது என்று சொல்கின்றனர். ஏனெனில் இவை நாய்களின் இரத்த சிவப்பணுக்களை அழித்து, இரத்த சோகை மற்றும் சோர்வினை ஏற்படுத்தும். மேலும் இத்தகைய உணவுகளை நாய்கள் சாப்பிட்டால், நாய்கள் சுறுசுறுப்பின்றி எப்போதுமே சோர்வுடன் இருக்கும்.

சாக்லெட்: சாக்லெட்டில் உள்ள கொக்கோ என்னும் பொருள், நாய்களுக்கு வலிப்புகளை ஏற்படுத்தும். சில நேரங்களில் இந்த வலிப்பினால், நாய்களின் உயிருக்கே ஆபத்து ஏற்படும் வாய்ப்புள்ளது. எனவே நாய்களுக்கு சாக்லெட் கொடுப்பதை அறவே தவிர்க்க வேண்டும்.

பால் பொருட்கள்: நாய்கள் குட்டியாக இருக்கும் போது பால் கொடுக்கலாம். ஆனால் நாய் பெரிதானப் பின், அதற்கு பால் பொருட்கள் கொடுப்பதை தவிர்த்துவிட வேண்டும். ஏனெனில் நாயின் செரிமான மண்டலத்தினால், பாலை செரிமானப்படுத்த முடியாது. சொல்லப்போனால், அது நாய்களுக்கான முலைப்பால் சர்க்கரை எதிர்ப்பு குறைபாடு போன்றதாகும்.

திராட்சை மற்றும் உலர் திராட்சை: நாய்கள் திராட்சை மற்றும் உலர் திராட்சை சாப்பிடுவதற்கு மனிதர்களைப் போன்றது அல்ல. அவற்றை நாய்கள் சாப்பிட்டால், நாய்களுக்கு சிறுநீரக செயலிழப்பு ஏற்பட நேரிடும். எனவே இந்த உணவுப் பொருளை தெரியாமல் கூட கொடுக்க வேண்டாம்.

அவகேடோ: மனிதர்களுக்கு அவகேடோ பழம் மிகவும் சிறந்தது. ஆனால் நாய்களுக்கு மிகவும் ஆபத்தான ஒரு உணவுப் பொருள். ஏனெனில் அவகேடோவில் உள்ள பெர்சின் என்னும் பொருள், நாய்க்கு உடல்நலத்தில் பாதிப்பை ஏற்படுத்தும். அதிலும் வாந்தி, குமட்டல் போன்றவற்றை ஏற்படும்.

English summary

Foods That Your Dog Shouldn't Eat

Many dog owners believe that they can feed their dogs almost anything. You must understand that your dog is not like a child. You cannot shape a dog's diet preferences against its digestive system. Your pet is a canine and thus must eat like a canine. Some foods are toxic for dogs. Here are some foods that dogs must not be fed.
Story first published: Tuesday, June 4, 2013, 18:05 [IST]
Desktop Bottom Promotion