For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வேட்டையாடி விளையாடும் ராஜபாளையத்து நாய்கள்!

By Mayura Akilan
|

Rajapalayam Dog
செல்லப்பிராணிகளில் நாய் வளர்ப்பு என்பது தனி கலை. நாய்களை விரும்புபவர்கள் மட்டுமே தனி சிரத்தை எடுத்து அதனை வளர்ப்பார்கள். தமிழ்நாட்டில் ராஜபாளையம் ரக நாய்கள் பெரும்பாலான வீடுகளில் வளர்க்கப்படுகின்றன. இவை புதியவர்களை அண்டவிடாமல் பாய்ந்து குரைத்து விரட்டும் வீர குணம் உடையது. வேட்டைக்கு உகந்தது. வீட்டுக் காவலுக்கு ஏற்ற வகை என்பதால் பெரும்பாலானோர் ஆர்வத்துடன் வளர்க்கின்றனர்.

அழகான நாய்கள்

ராஜபாளையம் வகை நாய்கள் வெண்ணிறத்தில் பழுப்பு நிற புள்ளிகளுடன் உயர்ந்து மெலிந்ததாக இருக்கும். இதன் தலையில் மேல்பாகம் சிறிது குவிந்திருக்கும். தலை கூடுதல் பகுதியில் தோல் சுருக்கம் தென்படும். இதன் நுனி மூக்கும் வாயும் இளம்சிவப்பு நிறத்தில் இருக்கும். ஆண்கள் அடர்ந்த பழுப்பு நிறம் கொண்டிருக்கும்.

வேக வைத்த மாமிசம்

நாய்க்குட்டி பிறந்த 40வது நாள் வரை காய்ச்சி ஆறவைத்த பாலைக் கொடுக்கலாம். இரவில் பாலுடன் ஒரு ஸ்பூன் கிரைப் வாட்டர் கலந்து தந்தால் நல்லது.

நாற்பது நாட்களுக்குப் பின் பால்சோறு, முட்டைச்சோறு (அல்லது) காய்கறி கலந்த சோறு கொடுக்கலாம். ஆறு மாதம் வரைக்கும் மாமிசம் தரக்கூடாது. ஆறு மாதத்திற்கு பிறகு மாமிசம் கொடுப்பதாக இருந்தால் எலும்புடன் கூடியதாக 100கிராம் மாமிசத்தை மசாலா சேர்க்காமல் வேகவைத்து கொடுக்கலாம். பச்சை மாமிசம், பச்சை முட்டை, பச்சைப்பால் ஆகியவற்றை தரக்கூடாது. மீன் கொடுத்தால் அதிலுள்ள முட்களை நீக்கிவிட்டுத்தான் கொடுக்கவேண்டும். கேக், ஸ்வீட், காரம் ஆகியவற்றை தரக்கூடாது.

தடுப்பூசி மருந்துகள்

35வது நாளில் குடல்புழு அகற்றும் மருந்து தரவேண்டும். இம்மருந்தை மாதம் ஒரு முறை கடைசிவரை தர வேண்டும். 55ம் நாளில் வைரஸ் தடுப்பூசியும் 60வது நாளில் ஆஸ்ட்டோ - கால்சியம் டானிக்கும் , 75ம் நாளில் மீண்டும் ஆறுவகை நோய் தடுப்பூசியும் போடவேண்டும். பின் ஆண்டுதோறும் வெறிநாய் தடுப்பூசி மட்டும் போட்டால் போதுமானது. குளிர்காலத்தில் வாரம் ஒரு முறையும் கோடை காலத்தில் வாரம் இருமுறையும் குளிப்பாட்டுவது சிறந்தது.

கட்டிப்போடக்கூடாது

நாய்க்குட்டியை பகலில் உலவவிட்டு இரவில் கூண்டு அல்லது கூடை போன்ற ஒன்றில் அடைத்து வைக்க வேண்டும். மொட்டைமாடியில் கூட விடலாம். நான்கு மாதம் வரைக்கும் கட்டிப்போடக்கூடாது. அப்படிச் செய்தால் கால்கள் வளைய ஆரம்பித்துவிடும். பின்னர் கட்டிப்போடும் வயது வந்த பின்னரும் நாள் முழுவதும் கட்டிப்போட்டு வளர்க்கக்கூடாது. பகல் அல்லது இரவு ஏதாவது ஒரு பொழுது அவிழ்த்துவிட வேண்டும். முக்கியமான விசயம் நாயை அடிக்கடி சீண்டி விளையாடக்கூடாது. குச்சிகளை வைத்து மிரட்டக்கூடாது.

English summary

Pet care : Rajapalayam dog care | வேட்டையாடி விளையாடும் ராஜபாளையத்து நாய்கள்!

Rajapalayam Dog is a formidable hunter of wild boar. The breed was favored by Indian aristocracy because of its heightened scenting ability. A Rajapalayam though has one flaw... this breed is easily distracted. It is not uncommon for this breed to lose interest and abandon a scent if a rabbit or another prey is seen. The dogs are often seen accompanying the royalty in hunting expeditions.
Story first published: Saturday, March 3, 2012, 16:31 [IST]
Desktop Bottom Promotion