For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

செல்ல நாய்களுக்கு தடுப்பூசி போடுங்க!

By Mayura Akilan
|

Dog Health Care
பெரும்பாலான வீடுகளில் இன்றைக்கு பாதுகாப்பு என்பதையும் தாண்டி பாசத்திற்காக செல்லப்பிராணிகளை வளர்க்கின்றனர். நாய்கள்தான் அநேகம் பேர் வீடுகளில் செல்லப்பிராணிகளாக வளர்க்கப்படுகிறது. செல்லப் பிராணிகளை ஒருவர் வளர்க்கும்போது அவரது உயர் ரத்த அழுத்தம் குறைவதுடன் சிந்தனைத் திறனும் மேம்படுகிறது என்று ஆய்வில் தெரியவந்துள்ளது. அந்த செல்லப்பிராணிகளின் உடல் நலனில் அக்கறை கொண்டால் மட்டுமே தொற்றுநோய்களில் இருந்து நம்மை பாதுகாக்க முடியுட் என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். செல்லப்பிராணிகளுக்கு போடவேண்டிய தடுப்பூசி முறைகள் பற்றி கால்நடை மருத்துவர்கள் கூறும் ஆலோசனைகளை படியுங்கள்.

உண்ணி இருக்கலாம்

நம் நாட்டின் தட்பவெப்ப நிலைக்கு நாய்களின் உடலில் உண்ணி அதிகமாகப் பெருகும். இந்த உண்ணி மூலம் நாய்க்கும் நாயிடம் இருந்து மனிதனுக்கும் பலவிதமான நோய்கள் பரவ வாய்ப்பு இருக்கிறது. எனவே, வாரத்துக்கு ஒரு முறையோ அல்லது 15 நாட்களுக்கு ஒரு முறையோ நாயை சுத்தமாகக் குளிப்பாட்ட வேண்டும். அப்படிக் குளிப்பாட்டும்போது, நாம் பயன்படுத்தும் சோப்பை நாய்க்குப் பயன்படுத்தக் கூடாது. நாய்களுக்கு என தனியாக சோப்பு வாங்கி பயன்படுத்த வேண்டும்.

ரொம்ப கொஞ்சாதீங்க

குட்டி நாய்களுக்கு வயிற்றில் உருண்டைப் புழு இருக்கும். அவைகளை கொஞ்சும்போது புழுவின் முட்டை நம் கைகளில் படுவதற்கு வாய்ப்புகள் உண்டு. அவை நம் வயிற்றுக்குள் சென்றால், உடலில் ஆங்காங்கே சின்னச் சின்னக் கட்டிகள் தோன்றும். கண்களைக்கூட இந்தக் கட்டி விட்டுவைக்காது. எனவே, குட்டி பிறந்த 30-வது நாளில் இந்தப் புழு நீக்கத்துக்கான மருந்து கொடுக்க வேண்டும். பின்னர், ஒரு வருடம் வரை மாதத்துக்கு ஒரு முறையும், ஒரு வருடத்துக்குப் பின்னர் அதன் ஆயுட்காலம் வரை இரண்டு மாதங்களுக்கு ஒரு முறையும் இந்தப் புழுவை நீக்குவதற்கான மருந்தைக் கொடுத்துவர வேண்டும்.

தற்போது உருண்டைப் புழு, நாடாப் புழு மற்றும் கொக்கிப் புழு ஆகிய மூன்றுக்கும் சேர்த்தே தடுப்பு மருந்துகள் கிடைக்கின்றன. இந்த மருந்துகளைப் பயன்படுத்தி குடற்புழுக்களை நீக்க முடியும். ஒரு வருடம் வரை மாதத்துக்கு ஒரு முறையும் ஒரு வருடத்துக்குப் பின்னர் அதன் ஆயுட்காலம் வரை இரண்டு மாதங்களுக்கு ஒரு முறையும் குடற்புழு நீக்கத்துக்கான மருந்தைக் கொடுத்துவர வேண்டும்.

வீட்டுக்கு வெளியேதான்

தினசரி ஒரு குறிப்பிட்ட நேரத்தில் நாய்களை வீட்டிற்கு வெளியே கூட்டிப்போய் காலை கடன்களை கழிக்க பழக்கப்படுத்துங்கள். ஒருவேளை வெளியில் அழைத்துச்செல்ல நீங்கள் விரும்பாவிட்டால், வீட்டின் சுற்றுப்புறத்திலேயே நாய் காலைக் கடன் முடித்ததும் உடனடியாக அதனை அப்புறப்படுத்திவிட வேண்டும். இல்லை என்றால், அதன் கழிவுகளில் தெள்ளுப்பூச்சி என்ற ஒரு வகைப் பூச்சி முட்டையிட்டுக் குஞ்சு பொரித்துவிடும். அஜாக்கிரதையின் காரணமாக, இந்த முட்டை மனிதர்களின் வயிற்றுக்குள் செல்லும்போது மூளை, நுரையீரல் போன்ற இடங்களில் கட்டி வளர வாய்ப்பு உள்ளது.

ரேபிஸ் தடுப்பூசி

குட்டி பிறந்த மூன்றாவது மாதத்தில் முதல் ஊசியும், பின்னர் வருடத்துக்கு ஒரு முறையும் வெறிநோய்த் தடுப்பு ஊசி போட வேண்டும். பல்வேறு விலங்குகளுக்கு ரேபீஸ் ஏற்பட்டாலும், நாயின் மூலம்தான் மனிதனுக்கு இந்த நோய் அதிகமாகப் பரவுகிறது. பெரும்பாலும் வெறிநோயானது தெருநாய்களிடம் இருந்தே வீட்டில் வளர்க்கும் நாய்களுக்குப் பரவும். எனவே, தெருநாய்களிடம் வீட்டில் உள்ள நாய்களைப் பழகவிடாமல் பார்த்துக்கொள்வது நல்லது.

இந்த அளவிற்கு சுகாதாரத்தோடு வளர்க்கப்படும் நாய் கடித்தாலும் பயப்படத் தேவை இல்லை. ஒருவேளை அந்த நாய் வெறிநோயால் பாதிக்கப்பட்டு இருக்கலாம் என்ற சந்தேகம் உங்களுக்கு இருந்தால், மருத்துவரிடம் சென்று தடுப்பு ஊசி போட்டுக்கொள்வது நல்லது. அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் இதற்கானத் தடுப்பு ஊசி இலவசமாக போடப்படுகிறது. இதனால் உங்களுக்கும் உங்கள் வீட்டு குட்டீஸ்களுக்கு தொற்றுநோய்கள் பாதிப்பு ஏற்படாமல் தப்பிக்கலாம்.

English summary

Dog Health Care | செல்ல நாய்களுக்கு தடுப்பூசி போடுங்க!

Your pet dog needs equal extent of health care as that of any other member in your family. He is also susceptible to diseases like cancer, diabetes, arthritis, and even emotional depression along with added diseases like heartworms and kennel cough. Being a responsible owner of a pet you are required to be a cautious observer of the behavioral changes and physical movements of your dog to ensure dog health care.
Story first published: Wednesday, April 4, 2012, 14:41 [IST]
Desktop Bottom Promotion