Latest Updates
-
இன்றைய ராசிபலன் 24 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ரொம்ப துக்கமான நாளாக இருக்குமாம் -
August Month Rasi Palan 2026: உங்க ராசியை சொல்லுங்க.. ஆகஸ்ட் மாதம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்... -
சந்திரன் விருச்சிக ராசிக்கு செல்வதால் தொந்தரவுகளையும், துன்பங்களையும் அனுபவிக்கப்போகும் 3 ராசிகள் -
செட்டிநாடு கொண்டைக்கடலை குருமா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - தோசை, சப்பாத்திக்கு அட்டகாசமா இருக்கும் -
ஆடி வெள்ளி ஸ்பெஷல் தேங்காய் பாயாசம் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
சருமம் அதிகமா வறண்டு போகுதா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க.. -
சிவன் கோவிலில் ஏன் பக்தர்கள் தங்கள் வேண்டுதல்களை நந்தியின் காதில் மெதுவாக கூறுகிறார்கள் தெரியுமா? -
வக்ர நிவர்த்தி அடையும் புதன்: நாளை முதல் இந்த 3 ராசிக்கு பணம், புகழ், வெற்றி தேடி வரப்போகுது! -
ராகு-கேது ஆசியால் டிசம்பர் மாதம் வரை கொடிகட்டி பிறக்கப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
கிராமத்து ஸ்டைல் முருங்கைக்காய் பொரிச்ச குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க..
உங்க வீட்டில் எலி அட்டகாசம் பண்ணுதா? அப்ப அதை விரட்ட இந்த வழிகளை முயற்சி பண்ணுங்க..
உங்கள் வீட்டில் எலி அதிகமாக உள்ளதா? குறிப்பாக இரவு நேரத்தில் வீட்டில் எலி ஜாலியாக சுற்றிக் கொண்டிருக்கிறதா? அதை ஒழிக்க வழிகளைத் தேடிக் கொண்டிருக்கிறீர்களா? அப்படியானால் இக்கட்டுரை உங்களுக்கானது.
எலி பார்க்கத் தான் சிறிதாக உள்ளது. ஆனால் அது செய்யும் அட்டகாசமோ பலருக்கு எரிச்சலையும், கோபத்தை வரவழைக்கும். ஒருவர் என்ன தான் வீட்டை பார்த்து பார்த்து பாதுகாப்பாக கட்டினாலும், அந்த வீட்டில் எலி எளிதில் புகுந்து, அதன் கைவரிசையைக் காட்டிவிடும். எலிகள் வெறும் உண்ணக்கூடிய பொருட்களை மட்டும் சாப்பிடாது, உடைகள், பெட்கள் என்று கிடைக்கும் அனைத்தையும் கொறித்துவிடும். இந்த எலி ஆபத்தானதும் கூட. ஏனெனில் இது ஆபத்தான நோயைப் பரப்பக்கூடியது.

உங்கள் வீட்டில் எலி அதிகமாக உள்ளதா? குறிப்பாக இரவு நேரத்தில் வீட்டில் எலி ஜாலியாக சுற்றிக் கொண்டிருக்கிறதா? வீட்டில் எந்த பொருளையும் ப்ரீயா வைக்க முடியலையா? அதை ஒழிக்க வழிகளைத் தேடிக் கொண்டிருக்கிறீர்களா? அப்படியானால் இக்கட்டுரை உங்களுக்கானது. ஏனெனில் கீழே எலிகளை அடியோடு விரட்டும் சில இயற்கை வழிகள் கொடுக்கப்பட்டுள்ளன.

புதினா எண்ணெய்
எலிகளுக்கு புதினா எண்ணெயின் நறுமணம் பிடிக்காது. புதினாவின் மணம் வீசும் இடத்தில் எலிகள் வரவே வராது. எனவே உங்கள் வீட்டில் எலி அதிகமாக இருந்தால், ஒரு பஞ்சுருண்டையில் புதினா எண்ணெயை நனைத்து, எலி வரும் இடங்களில் வையுங்கள். இதனால் இந்த மணத்திற்கு எலி வராது.

சில்லி ப்ளேக்ஸ்/மிளகாய் தூள்
சில்லி ப்ளேக்ஸ் மூக்கில் ஏறினால் மனிதர்களுக்கே தும்மல் வருவதோடு, மூக்கில் எரிச்சலை அனுபவிக்கக்கூடும். அப்படியிருக்க எலி வரக்கூடிய இடங்களில் சில்லி ப்ளேக்ஸை தூவி விடுங்கள். இதனால் எலி வீட்டிற்குள் நுழையவே நுழையாது.

வெங்காயம்
உங்கள் வீட்டின் சிறு ஓட்டைகள் இருந்தால், அந்த ஓட்டைகளில் வெங்காயத்தை நறுக்கி வையுங்கள். ஏனெனில் வெங்காயத்தின் மணமும் எலிகளுக்கு பிடிக்காது. உங்கள் வீட்டில் எலி அதிகம் இருந்தால், இந்த எளிய வழியை முயற்சித்துப் பாருங்கள்.

பூண்டு
பூண்டின் அடர்த்தியான நறுமணம் எலிகளுக்கு பிடிக்காதாம். ஆகவே நீங்கள் வீட்டில் எலித் தொல்லையை அதிகம் சந்தித்தால், பூண்ட பற்களை பொடியாக நறுக்கி, நீரில் போட்டு அந்நீரை எலி வரும் இடங்களில் தெளித்துவிடுங்கள். இதன் மூலம் எலித்தொல்லையில் இருந்து விடுபடலாம்.

கிராம்பு
சிறிது கிராம்புகளை எடுத்து ஒரு மெல்லிய மஸ்லின் துணியில் கட்டி, அதை எலி வரும் இடங்களில் வையுங்கள். கிராம்பின் மணமும் எலிகளுக்கு பிடிக்காது என்பதால், இந்த கிராம்பு மூட்டையை எலி வரும் இடத்தில் வையுங்கள். இதனால் எலி மீண்டும் வீட்டிற்குள் வராது.

பிரியாணி இலை
பிரியாணி இலையின் மணம் எலிகளை ஈர்ப்பதோடு, அவற்றை தங்களின் உணவாக நினைக்க வைக்கும். ஆனால் எலிகள் அவற்றை சாப்பிடும் போது, பிரியாணி இலையானது எலிகளுக்கு மூச்சுத்திணறலை ஏற்படுத்தி, இறக்க செய்யும். எனவே வீட்டில் எலி அதிகம் இருந்தால், இந்த வழியை ஒருமுறை முயற்சித்துப் பாருங்கள்.



Click it and Unblock the Notifications