For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

திருமண வாழ்க்கையில் ஏற்படும் தொடர் பிரச்சனைகளை தீர்க்க உதவும் வாஸ்து குறிப்புகள்!

|

திருமணம் என்பது சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுவதாக முன்னோர்கள் கூறியுள்ளனர்; அது உண்மையா என்று ஆராய்ந்து பார்த்தால், பல வகையில் முன்னோரின் கூற்று உண்மை என்ற விடையே கிடைக்கிறது. எப்படி தெரியுமா? யார் எவர் என்றே அறியாத இரு நபர்கள், அரேஞ் மேரேஜ் மூலம் அறிமுகமாகி காலம் முழுக்க இணைந்து வாழ சம்மதித்து வாழ்ந்தும் காட்டுகின்றனர்; அதே போல் காதல் திருமணத்திலும் கோடான கோடி மக்கள் சூழ நகரும் வாழ்க்கையில் சரியாக அந்த இரு உள்ளங்கள் மட்டும் தங்கள் மனதை பரிமாறி காதலில் விழுகிறது; இப்படி இந்த இரு உள்ளங்கள் தான் இணைய வேண்டும் என்று தீர்மானிப்பது யார்.?

Vastu tips for happy marriage life in tamil

கடவுள் அல்லது விதி என்று நம்பப்படும் ஒரு அற்புத சக்தியால், இந்த நிகழ்வுகள் நடந்தேறுகின்றன. திருமணம் ஆன தருணம் முதல் வாழ்வின் கடைசி நொடி வரை பிரச்சனையின்றி, சண்டை சச்சரவு இன்றி வாழ்ந்த தம்பதியர் யாரும் உண்டோ? அனைவரின் வாழ்விலும் பிரச்சனைகள் ஏற்படத்தான் செய்யும்; அப்படி ஏற்பட்டால் தான் அது வாழ்க்கை. ஆனால், திருமண உறவில் சுமூக தன்மை அவசியம்; பிரச்சனைகள் ஏற்பட்டாலும் அதை கடந்து வருதல் அல்லது பிரச்சனைகளை தவிர்ப்பது என்பது மிகவும் அவசியம்.

இந்த பதிப்பில் திருமண வாழ்வில், இல்லறம் இனித்து நல்லறமாக வாழ உதவும் வாஸ்து குறிப்புகள் குறித்து படித்தறியலாம் வாருங்கள்!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
படுக்கை அறை - Bedroom

படுக்கை அறை - Bedroom

தம்பதியரின் அறை வீட்டின் தென்கிழக்கு திசையில் இல்லாதவாறு அமைக்க வேண்டும்; ஏனெனில் வாஸ்துவின் சாஸ்திரப்படி அது நெருப்பிற்கான மூலை. தென்கிழக்கு மூலையில் அறையை அமைத்தால், அது கணவன் மற்றும் மனைவியிடையே வாக்குவாதம், மனஸ்தாபம், விரிசலைக் கொண்டு வரும். ஆகையால், அறையை தென்மேற்கு மூலையில் அமைக்கவும்.

பொருட்கள் - Things

பொருட்கள் - Things

வீட்டின் சுவர்களில் சாவு, சண்டை, போர், பிற நெகட்டிவ் அலைகளை உண்டாக்கக்கூடிய படங்களை மாட்டி வைப்பதை தவிர்க்க வேண்டும். மேலும் கத்தி, கத்தரிக்கோல் என வீட்டின் சமையல் அறை மற்றும் உணவருந்தும் மேஜையில், வீட்டின் எந்த இடத்தில் இவை வைக்கப்பட்டிருந்தாலும், அவற்றை பயன்படுத்தும் நேரம் தவிர பிற நேரங்களில், மூடி வைத்தல் வேண்டும்.

ஊறுகாய் போன்ற உணவு பொருட்களை பயன்படுத்தும் நேரம் தவிர பிற நேரங்களில் மூடி வைத்திருத்தல் வேண்டும்; ஏனெனில் அதன் புளிப்பு தன்மை, உங்கள் வாழ்வை புளிப்படைய செய்து விடும் என வாஸ்து சாஸ்திரம் கூறுகிறது.

வடிவம் மற்றும் நிறங்கள்!

வடிவம் மற்றும் நிறங்கள்!

நீங்கள் உறங்கும் அறையின் வடிவம் செவ்வகம் அல்லது சதுரமாக இருத்தல் வேண்டும்; பிற வடிவங்களில் அல்லது ஏனோதானோ என வடிவமற்றதாக அறையை அமைக்க கூடாது. அறையை பச்சை, இள நீலம், றோஸ் பிங்க் போன்ற நிறங்களைக் கொண்டு வண்ணம் தீட்ட வேண்டும்; வெள்ளை நிற மற்றும் கண்ணை உறுத்தாத வண்ணங்களை பயன்படுத்துதல் வேண்டும்; சிவப்பு நிறத்தை தவிர்க்கவும்.

கூடாதவை - விவரம்

கூடாதவை - விவரம்

வீட்டில் தனியாக இருக்கும் பறவைகளை வளர்க்காமல், ஜோடியாக இருக்கும் பறவைகளை வளர்த்தல் வேண்டும். அலுவலக வேலையை அறைக்குள் செய்வதை தவிர்க்க வேண்டும்; அலுவலக பொருட்களை வைப்பதையும் தவிர்த்தால் நல்லது. தம்பதியரின் அறையில் கண்ணாடி, கம்ப்யூட்டர் அதாவது கணினி, தொலைக்காட்சி பெட்டி - டிவி போன்றவற்றை வைப்பது தவிர்த்தல் நல்லது; அறையில் அவை இடம் பெற்றிருந்தாலும், அவற்றை இரவில் மூடி வைப்பது அவசியம்.

குழந்தையை வேண்டும் தம்பதியருக்காக!

குழந்தையை வேண்டும் தம்பதியருக்காக!

குழந்தையை பெற்றுக்கொள்ள விரும்பும் தம்பதியர்கள், எப்பொழுதும் வடகிழக்கு திசையில் அமைந்த அறையில் உறங்க கூடாது; அறையில் படுக்கையை தென்மேற்காக அமைத்தல் வேண்டும்; தலையை தெற்காக வைத்து உறங்க வேண்டும். மரத்தால் ஆன படுக்கையை அதாவது மரக்கட்டிலை பயன்படுத்துதல் அவசியம். அறையில் அடர்ந்த நிறமோ, கூரிய பொருள்களோ இடம்பெறாமல் பார்த்துக் கொள்ளுங்கள். அறையின் கூரை பீம் போன்றதாக இல்லாமல், பால்ஸ் சீலிங்காக இருக்கும் வண்ணம் அமைப்பது நல்லது; ஏனெனில் பீம் கூரை ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல மற்றும் தேவையில்லா மனஅழுத்தத்தைக் கொடுக்கும்.

சமையல் அறை

சமையல் அறை

தம்பதியரிடையே தொடர்ச்சியாக சண்டை ஏற்பட்டால், சமையல் அறையின் கேஸ் மற்றும் சிங்க் இவற்றின் இடங்கள் சரியாக அமைக்கப்படவில்லை என்று பொருள். கேஸ் நெருப்பையும், சிங்க் நீரையும் குறிப்பதால், அவை சரியாக அமைய வேண்டும்; இல்லையேல் தம்பதியரிடையே தேவையற்ற மனக்கசப்புகளும், சண்டைகளும் ஏற்படும். தம்பதியர் மட்டுமன்றி குடும்பத்தில் அதிக பிரச்சனைகள் ஏற்படுவதற்கும் இந்த கேஸ் மற்றும் சிங்க் அமைப்பே முக்கிய காரணம்.

நீங்கள் படித்தறிந்த இந்த பதிப்பு, பல தம்பதியரின் வாழ்க்கையில் பிரச்சனைகளை தீர்த்து, மகிழ்ச்சியை ஏற்படுத்த இதனை பகிர்ந்து உதவுங்கள்; நீங்களும் சந்தோசமாய் வாழ்ந்து மற்றவரையும் மகிழ்ச்சிப்படுத்த பதிப்பை பரப்பி, மகிழ்ச்சி அலைகள் உருவாக உதவுங்கள்!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Vastu tips for happy marriage life in tamil.

Vastu tips for happy marriage life in tamil.
Story first published: Wednesday, July 25, 2018, 11:30 [IST]
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more