Latest Updates
-
ஆகஸ்ட் 05-ல் உருவாகும் புதாதித்ய ராஜயோகம்: இந்த 4 ராசிக்கு அதிர்ஷ்டம் பிரகாசிக்கப்போகுது! -
உலகில் அதிக மின்சாரத்தை உபயோகிக்கும் டாப் 5 நாடுகள் - இந்தியா எத்தனாவது இடத்தில் இருக்கு தெரியுமா? -
காரைக்குடி செட்டிநாடு சாம்பார் - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருவாட்டி ட்ரை பண்ணுங்க.. -
ஆடிப் பெருக்கு ஸ்பெஷல் மிளகு புளியோதரை ரெசிபி - இந்த மாதிரி புளி சாதம் செஞ்சு பாருங்க - அட்டகாசமா இருக்கும் -
எந்த நோய்க்கு எந்த ஜூஸ் குடிப்பது நல்லது? - விளக்கும் டாக்டர்.பிள்ளை! -
நாஸ்ட்ராடமஸ் கணிப்பு படி 2027 வரை சகல நன்மைகளையும், ராஜயோகத்தையும் அடையப்போகும் ஒரே ராசி எது தெரியுமா? -
சனி மங்கள யோகம்: இன்று முதல் 3 ராசிக்காரர்களுக்கு கூரைய பிச்சுக்கிட்டு பணம் கொட்டப்போகுது! -
சரவணபவன் ஸ்டைல் வெள்ளை குருமா - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. பூரி, சப்பாத்திக்கு அள்ளும்! -
இன்றைய ராசிபலன் 03 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு சவால்கள் நிறைந்த நாளாக இருக்குமாம் -
குருபகவான் உருவாக்கும் ஹன்ஸ் மகாபுருஷ யோகத்தால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி என்ன?
நீங்க இருக்கறது மேற்கு திசை பார்த்த வீடா?... அப்போ கட்டாயம் நீங்க இத செஞ்சே ஆகணும்...
இந்த வாஸ்துப்படி கிழக்கு மற்றும் வடக்கு திசையை நோக்கிய வீடுகளையே பெரும்பாலும் விரும்புகின்றன. மேற்கு நோக்கிய வீடுகள் நன்மைகள் அளிப்பதில்லை என்று பலரும் எண்ணுகின்றனர்.
"வாஸ்து" என்ற சொல் கட்டிடமொன்று கட்டப்பட்டுள்ள அல்லது கட்டப்படவுள்ள நிலத்தைக் குறிக்கும். "வாஸ்து சாஸ்திரம்" என்பது, ஒரு கட்டிடம் கட்டுவதற்குரிய முறைகளையும் அதன் அம்சங்களையும் பற்றி விளக்கும் வேதம் சார்ந்த அறிவுத்துறையாகும். வாஸ்து சாஸ்திரம் இந்தியாவில் தொன்று தொட்டு பின்பற்றி வரும் முறையாகும்.
கிட்டத்தட்ட 3000 ஆண்டுகளாக இந்த முறையை பின்பற்றி வருகின்றனர் என்று கூறப்படுகிறது. இந்த வாஸ்துப்படி கிழக்கு மற்றும் வடக்கு திசையை நோக்கிய வீடுகளையே பெரும்பாலும் விரும்புகின்றன. மேற்கு நோக்கிய வீடுகள் நன்மைகள் அளிப்பதில்லை என்று பலரும் எண்ணுகின்றனர். ஆனால் வாஸ்து வல்லுநர்கள் என்ன கூறுகிறார்கள் என்றால் இது தவறான கருத்து, மேற்கு நோக்கி முறையான வாஸ்துப்படி கட்டப்படும் வீடுகளும் சகல செளபாக்கியத்தை அள்ளித் தரும் என்கின்றனர் அவர்கள்.

மேற்கு நோக்கி வாஸ்துப்படி எப்படி வீட்டை அமைக்கலாம் அதனால் என்னென்ன பயன்களை அள்ளலாம் என்று இக்கட்டுரையில் காண்போம்.

எது நல்லது
வாஸ்து சாஸ்திரம் ஒரு வீட்டை அமைக்கும் போது வடக்கு மற்றும் கிழக்கு திசை மட்டும் தான் நல்லது என்று எந்த கருத்தையும் கூறவில்லை. எல்லாத் திசையும் நன்மையளிக்கக் கூடியது என்று தான் வாஸ்து சாஸ்திரம் கூறுகிறது.

மேற்கு நோக்கிய வீட்டின் வாஸ்து
வீட்டின் ஒட்டுமொத்த நீளத்தையும் வடமேற்கு மூலையில் இருந்து தென்மேற்கு மூலையை நோக்கி ஒன்பது சம பாகங்களாக பிரிக்கவும். இது தான் பாதம் என்று அழைக்கப்படுகிறது. வடமேற்கு பாதம் முதல் ஒன்றாகவும் தென்மேற்கு பாதம் ஒன்பதாவது ஆகவும் இருக்க வேண்டும். வீட்டின் நுழைவாயிலை 3, 4,5 அல்லது 6இப்படி எதாவது ஒரு பாதத்தின் மேற்கு திசையை நோக்கி வைத்து கொள்ளலாம். பொதுவாக மேற்கு நோக்கிய வீட்டுக்கு 1 அல்லது 2 வது பாதங்களை கூட நுழைவாயிலாக பயன்படுத்தி கொள்ளலாம். இப்படி அமைப்பதன் மூலம் பெரிய சிக்கல் எதுவும் ஏற்படாது. நடுத்தரமான நன்மைகளுடன் வீடு அமையும். 7,8மற்றும் 9 ஆம் பாதங்களில் வீட்டின் நுழைவாயிலை வைக்கக் கூடாது. மற்ற படி எல்லா வாஸ்து விதிகளும் மேற்கு நோக்கிய வீட்டிற்கும் பொருந்தும்.

வாஸ்து விதிகள்
நீர் ஆதாரம்
நீங்கள் ஆழ்துளை கிணறு அல்லது குழாய் இணைப்பு எதாவது போட நினைத்தாலும் அதை தென்மேற்கு திசையில் ஒரு போதும் போடக் கூடாது. தென்மேற்கு திசையில் எந்த திட்டத்தையும் நீட்டிக்க கூடாது. வடக்கு திசையில் போடும் வீட்டின் வரைபட திட்டம் தெற்கு திசையை விட அதிகமாகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

சமையலறை
வீட்டின் சமையலறை கண்டிப்பாக தென்மேற்கு திசையில் இருக்கக் கூடாது. தெற்கு மற்றும் மேற்கில் உள்ள சுவர்களின் தடிமனானது கிழக்கு மற்றும் வடக்கில் உள்ள சுவர்களைக் காட்டிலும் அதிகமாக இருக்க வேண்டும். நீங்கள் சமையலறையை தென்கிழக்கு அல்லது வடமேற்கு திசையில் வைத்துக் கொள்ளலாம். இருப்பினும் தென்கிழக்கு திசை சமையலறை அமைக்க நல்ல இடமாகும்.

படுக்கையறை
படுக்கையறையை தென்மேற்கு மூலையில் அமையுங்கள். வீட்டில் நிறைய அடுக்கு மாடிகள் இருந்தால் மாஸ்டர் பெட்ரூமை உயர்ந்த மாடியில் வைத்துக் கொள்ளுங்கள்.

பூஜை அறை
வீட்டின் பிரதான அறை மற்றும் பூஜை அறைகளை வடகிழக்கு திசையில் வைத்தால் நன்மைகள் கிடைக்கும்.

குழந்தைகள் அறை
உங்கள் குழந்தைகளுக்கான அறையை தெற்கு, மேற்கு அல்லது வடமேற்கு பகுதியில் அமையுங்கள்.

விருந்தினர் அறை
விருந்தினர்களுக்கான அறையை வடமேற்கு திசையில் அமைத்துக் கொள்ளுங்கள்.

சரிவு
வீட்டின் சாய்வான அமைப்பானது தெற்கிலிருந்து வடக்கு நோக்கி அமைப்பது நன்மைகளை அளிக்கும். குடும்பத்தில் சந்தோஷம் நீடிக்கும்.



Click it and Unblock the Notifications