வீட்டை ஆசிட் வச்சு சுத்தம் செய்யறீங்களா? அதுக்கு முன்னாடி நீங்க தெரிஞ்சுக்க வேண்டியவை!!

By: Bala latha
Subscribe to Boldsky

முரியாடிக் ஆசிட் என்றும் குறிப்பிடப்படும் ஹைட்ரோ குளோரிக் சந்தேகத்திற்கிடமின்றி ஆசிட் வீட்டு உரிமையாளர்களுக்குக் கிடைக்கக்கூடிய மிக வலுவான கடினமான தூய்மையாக்கும் பொருளாகக் கருதப்படுகிறது. பெரும்பாலான மக்கள் தரையை சுத்தமாக வைத்திருக்க பினாயிலை பயன்படுத்துகின்றனர்.

மேலும் தரை துடைக்கும் திரவங்கள் வீட்டுபயோகப் பொருட்களை சுத்தம் செய்யவும் பளபளப்பாக வைத்திருக்கவும் பயன்படுத்தப்படுகிறது. ஹைட்ரோ குளோரிக் அமிலம் மிகுந்த வலிமையானது. சரியான முறையில் பயன்படுத்தாவிட்டால் கடுமையான சேதங்களை ஏற்படுத்தும்.

Precautions To Take While Using Acid For Cleaning

இந்த அமிலங்கள் டைல்ஸ் மற்றும் பல இதர வீட்டுபயோகப் பொருட்களை சுத்தம் செய்வதற்கும் மற்றும் அகற்ற சாத்தியமே இல்லை என்று நீங்கள் நினைத்த பல கறைகளை நீக்கவும் உதவுகிறது. ஆனால், முறையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியது அவசியமாகும் இல்லையெனில் அதிக தீமைகளை ஏற்படுத்தும்.

முரியாட்டிக் அமிலம் தற்செயலாக சருமத்தில் அல்லது கண்களில் பட்டு விட்டால் தீவிர காயங்களை ஏற்படுத்தக்கூடும். அதனால், அதிகபட்ச முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும், மேலும் சுத்தம் செய்யப்படும் இடங்களிலிருந்து குழந்தைகளை விலக்கி தூரமாக வைக்க வேண்டும். அத்துடன் ஹைட்ரோ குளோரிக் அமிலத்திலிருந்து வெளிப்படும் ஆவி சிலருக்கு சுவாசப் பிரச்சனைகளை ஏற்படுத்தக்கூடும்.

முரியாட்டிக் அமிலம் மிகவும் ஆபத்தானது மேலும் மிகக் கடுமையான தூய்மையாக்கும் பொருளாகும். இதர சுத்தப்படுத்தும் திரவங்கள் தங்கள் வேலையை செய்வதில் தோல்வி அடையும் பட்சத்தில் இறுதியான மற்றும் அறுதியான நடவடிக்கையாக ஹைட்ரோ குளோரிக் அல்லது முரியாட்டிக் அமிலத்தை பயன்படுத்துவதை வைத்துக் கொள்ளுங்கள் என்று நிபுணர்கள் பரிந்துரைக்கிறார்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
நினைவில் கொள்ள வேண்டிய குறிப்புகள்

நினைவில் கொள்ள வேண்டிய குறிப்புகள்

குளியலறை அல்லது சமையலறை டைல்சில் உள்ள சோப்பு அழுக்கு மற்றும் கடின நீர் படிமங்கள் அல்லது விடாப்பிடியான கறைகள் போன்றவற்றை நீக்குவதற்கு ஒரு பங்கு முரியாட்டிக் அமிலத்துடன் ஐந்து அல்லது ஆறு பங்கு தண்ணீரை கலந்து பயன்படுத்த வேண்டும்.

அமிலம் மிகவும் கடுமையானது என்பதால் இதைக் கலக்கும் போது திறந்த மேற்கூரையற்ற வெளிகளில் கலக்க வேண்டும். அமில புட்டியின் மேல் கொடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை அறிகுறிகள் மற்றும் அறிவுறுத்தல்களைப் பின்பற்ற வேண்டியது மிகவும் முக்கியமாகும்.

கை உறை :

கை உறை :

மேலும் ரப்பர் கையுறைகள் அணிய வேண்டியது கட்டாயமாகும். தரையிலோ அல்லது நீங்கள் சுத்தம் செய்ய விரும்பும் பொருளின் மீதோ இந்தக் கலவையை நைலான் பட்டைகளின் உதவியோடு முழுவதுமாக பூச வேண்டும். அப்போது நீங்கள் நினைவில் கொள்ள வேண்டிய சில குறிப்பிட்ட விஷயங்கள் இருக்கின்றன.

இடத்தை காற்றோட்டமாக வைத்தல்

இடத்தை காற்றோட்டமாக வைத்தல்

அமிலம் பயன்படுத்தும் இடத்தை காற்றோட்டமாக வைத்திருக்க வேண்டியது முக்கியமாகும். அத்துடன் அங்கு காற்றை வெளியேற்றும் மின்விசிறி இருந்தால் அதை இயங்கச் செய்யவும். மேலும் தேவைப்பட்டால், முறையான காற்றோட்டத்தை உறுதி செய்ய அறை முழுவதிலும் சுற்றிலும் மின்விசிறிகளை வைக்கலாம்.

தேவையான முன்னெச்சரிக்கைகள்

தேவையான முன்னெச்சரிக்கைகள்

முறையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்றால் முரியாட்டிக் அமிலம் கண்கள் அல்லது சருமத்தில் பட்டால் தீவிரமான சேதங்களை ஏற்படுத்திவிடும். எனவே, முகமூடிகள், கண் பாதுகாப்பு கண்ணாடிகள் மற்றும் கையுறைகளை அணிய வேண்டியது கட்டாயமாகும்.

பேக்கிங் சோடாவை பயன்படுத்துதல்

பேக்கிங் சோடாவை பயன்படுத்துதல்

நீங்கள் சுத்தம் செய்யும் பகுதிக்கு அருகாமையில் சமையல் சோடா நிறைந்த பாத்திரத்தை வைத்திருக்க வேண்டியது மிக முக்கியமாகும். ஒருவேளை அமிலம் சிதறி விட்டால் சமையல் சோடாவை அங்கே பரப்புவது சிறந்த தீர்வாகும். சிந்திய அமிலத்தை சமநிலைப்படுத்த தோட்ட சுண்ணாம்பு அல்லது சமையல் சோடா உதவுகிறது.

பரிந்துரைக்கப்பட்ட படி தண்ணீரைச் சேர்த்தல்

பரிந்துரைக்கப்பட்ட படி தண்ணீரைச் சேர்த்தல்

அமில புட்டியின் மீது பரிந்துரைக்கப்பட்டுள்ள படி அந்த அளவுக்கு மட்டுமே தண்ணீரைச் சேர்த்தல் மிகவும் முக்கியமாகும். அறிவுறுத்தல்களின் படி ஒரு பங்கு அமிலத்திற்கு ஐந்து பங்கு தண்ணீரை சேர்க்க வேண்டும். ஆனால் அமிலம் எவ்வளவு வலுவாக இருக்கிறது என்பதைப் பொறுத்து நீரின் அளவு அதிகமாகவோ குறைவாகவோ இருக்கலாம்.

பெரும்பாலான அமிலங்கள் சுமார் முப்பத்தி ஒரு சதவிகிதம் வரை நீர்மமாக்கப்படுகின்றது. அமிலம் எவ்வளவு வலுவானது என்பது முக்கியமல்ல, உங்கள் தனிப்பட்ட பாதுகாப்பிற்காக அமிலங்களை பயன்படுத்துவதற்கு முன்பு எப்பொழுதும் நீர்க்கச் செய்ய வேண்டும். நீங்கள் நீரில் அமிலத்தை கலக்கும் போது மிகுந்த எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இல்லையெனில் அது மிக எளிதாக எதிரிவினை புரிந்து சருமத்திற்கு சேதத்தை ஏற்படுத்தி விடும்.

சுத்தம் செய்யும் வழிமுறை

சுத்தம் செய்யும் வழிமுறை

முதலில் பெரிய பகுதிகள் இலக்காக இருக்கக்கூடாது. சிறிய பகுதிகளை இலக்காக வைக்க வேண்டும். இதனால் சுத்தப்படுத்தும் வேலை நன்றாக நடக்கும். சுத்தம் செய்யும் போது நீங்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும், மேலும் அமிலக் கலவை உங்கள் சருமம் மற்றும் ஆடைகளின் மீது படாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

நீண்ட நேரம் வைத்திருத்தல் :

நீண்ட நேரம் வைத்திருத்தல் :

மேலும் சுத்தம் செய்யும் பகுதியில் அமிலத்தை நீண்ட நேரம் விட்டு வைக்கக்கூடாது. சுத்தம் செய்யும் போது இந்த நடவடிக்கைகளை நீங்கள் மனதில் வைத்துக் கொண்டு சுத்தம் செய்வதில் ஈடுபட்டால், சுத்தப்படுத்துதல் வேகமாக மட்டுமல்ல ஆபத்தற்றதாகவும் இருக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Precautions To Take While Using Acid For Cleaning

Precautions To Take While Using Acid For Cleaning
Story first published: Thursday, November 16, 2017, 19:00 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter