உங்கள் துணிகள் வாசனையாக இருக்க நீங்கள் இதை ஃபாலோ பண்ணுங்க!!

Posted By: R. SUGANTHI Rajalingam
Subscribe to Boldsky

நறுமணம் என்பது எல்லோருக்கும் பிடித்தமான ஓன்றாகும். இது மனதிற்கும் ஒரு விதமான புத்துணர்வை உண்டாக்கும். ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் மேற்கொண்ட ஆராய்ச்சி படி பார்த்தால் நறுமணம் என்பது செக்ஸஷூவல் விருப்பத்தையும் ஏற்படுத்தும் என்று சொல்லப்படுகிறது.

எனவே தான் நமது உடைகளுக்கும் சிறந்த நறுமணத்தை கொடுக்க வேண்டியது உள்ளது. நமது வியர்வை நாற்றத்திலிருந்து மற்றவர்களை முகம் சுளிக்க வைக்க விடாமல் இருப்பதற்கும் நமது ஆடையின் நறுமணம் முக்கியத்துவம் பெறுகிறது.

Easy ways to make your clothes smell good

இதற்காக நீங்கள் ரெம்ப கஷ்டப்பட்டு துவைத்து நிறைய மெனக்கெடல்களை செலவழிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை.

நாங்கள் கூறும் 8 எளிதான வழிகளை பின்பற்றினாலே போதும் உங்கள் உடைகளில் நறுமணம் கமழும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
காபி கொட்டைகள்

காபி கொட்டைகள்

காபி பவுடர் இயற்கையாகவே கெட்ட துர்நாற்றத்தை போக்க வல்லது. எனவே இந்த காபி பவுடர்பளை ஒரு மூட்டை கட்டி அல்லது துளையுள்ள டப்பாக்களில் அடைத்து உங்கள் துணி அலமாரியில் போட்டு வைத்தால் கெட்ட துர்நாற்றம் போய் நறுமணம் கமழும். மாதத்திற்கு ஒரு முறை இதை புதுப்பித்து கொள்ள வேண்டும்.

 பார் சோப்பு

பார் சோப்பு

பார் சோப்புகள் உங்களுக்கு ரொம்ப அழகான வாசனையை கொடுக்கக் கூடியது.

மடித்த துணிகளை ஒரு பெரிய பெட்டியில் வைக்க வேண்டும். பிறகு துணிகளை நாப்கின் துணியால் மூடி அதன் மேல் சோப்பை வைக்க வேண்டும். இப்பொழுது சோப்பில் உள்ள வாசனை துணிகளுக்கு பரவி நல்ல வாசனை வரும். பிறகு பெட்டியை மூடி விட வேண்டும். ஒரு 4 மணி நேரம் கழித்து பார்த்தால் பெட்டியில் உள்ள துணிகளில் நறுமணம் கமழும்.

காட்டன் பஞ்சு மற்றும் பெர்ம்யூம்

காட்டன் பஞ்சு மற்றும் பெர்ம்யூம்

பெர்ம்யூம் கெட்ட துர்நாற்றத்தை போக்காது ஆனால் கெட்ட துர்நாற்றத்தை மறைக்க உதவுகிறது. காட்டன் பஞ்சில் உங்களுக்கு விருப்பமான வாசனை திரவியத்தை எடுத்து துணி அலமாரியில் சில இடங்களில் போட்டு வையுங்கள் நல்ல நறுமணம் கமழும்.

மூலிகை காட்டன் பேக்

மூலிகை காட்டன் பேக்

காட்டன் கேக்கில் உங்களுக்கு விருப்பமான மூலிகைகளை எடுத்து கொள்ளவும். லாவண்டர் அல்லது லெமன் கிராஸ் பயன்படுத்தலாம். உங்கள் துணி அலமாரியின் உள்ளே இந்த காட்டன் பேக்குகளை போட வேண்டும்.

குறிப்பு : சில பேக்கெட்டுகளை உங்கள் உடையின் பாக்கெட்களில் போட்டு வைத்தால் எடுத்து எப்போது உடுத்தினாலும் ப்ரஷ்ஷான நறுமணம் கிடைக்கும்

லைனன் ஸ்பிரே

லைனன் ஸ்பிரே

ஒரு ஸ்பிரே பாட்டிலில் உங்களுக்கு விருப்பமான எஸன்ஷியல் ஆயிலை எடுத்து கொள்ளவும். அந்த பாட்டிலின் மேல் பகுதியில் தண்ணீர் கொண்டு நிரப்பவும். பிறகு எப்பொழுது எல்லாம் உடுத்தும் போதோ அல்லது துணி அலமாரியில் அந்த ஸ்பிரேவை தெளித்தால் போதும் வாசனை கமழும். லாவண்டர் ஸ்பிரே கூட வாங்கி பயன்படுத்தலாம்.

நறுமணம் மிகுந்த மரக்கட்டை

நறுமணம் மிகுந்த மரக்கட்டை

சில மரக்கட்டைகள் நல்ல நறுமணத்தை கமழும். சந்தன கட்டை ஒரு அற்புதமான வாசனை கமழும் பொருளாகும். எனவே இதற்கு சில துண்டுகள் சந்தன கட்டையை உங்கள் துணி அலமாரியில் போட்டு வையுங்கள்.

வெப்பிரீஸ்

வெப்பிரீஸ்

கெட்ட துர்நாற்றத்தை போக்கும் வெப்பிரீஸ் போன்றவற்றை பயன்படுத்தலாம். இது உங்கள் அலமாரியில் உள்ள கெட்ட துர்நாற்றத்தை நடுநிலையாக்கி விடும். மேலும் செலவு குறைந்த முறையும் கூட.

வினிகர்

வினிகர்

நீங்கள் மறுநாளும் அழுக்கு சட்டையை போட வேண்டிய நிலை ஏற்பட்டால் அதற்கு வினிகர் ஒரு நல்ல சாய்ஸ் ஆக இருக்கும். ஒரு ஸ்பிரே பாட்டிலில் வினிகர் மற்றும் சமமான அளவு தண்ணீர் சேர்த்து கொள்ள வேண்டும்.

இப்பொழுது வேர்வை நாற்றம் அதிகமாக அடிக்கும் உங்கள் சட்டையின் அக்குள் பகுதி போன்ற இடங்களில் ஸ்பிரே பண்ணினாலே போதும் இனி வாடையை பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டாம். சில நிமிடங்களில் காய்ந்த பிறகு நீங்கள் கவலை இல்லாமல் கிளம்பலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Easy ways to make your clothes smell good

Easy ways to make your clothes smell good
Story first published: Wednesday, November 29, 2017, 20:00 [IST]