சிவப்பு கலர் பெட்ஷீட் யூஸ் பண்ணா மூட்டைப்பூச்சி வருமா என்ன?

Posted By:
Subscribe to Boldsky

மூட்டைப்பூச்சி என்பது சாதாரணமானது அல்ல என்பது, அதனால் தூக்கம் இழந்த நபர்களுக்கு மட்டுமே தெரியும். ஐந்து நிமிடங்கள் சேர்ந்தார் போல தூங்க விடாமல் தொல்லை செய்து செம்மையாக காண்டாக்கும் குணாதிசயம் கொண்டுள்ள பூச்சி.

அடிக்கடி விசித்திரமாக ஆய்வு செய்வதில் ஆராய்ச்சியாளர்களுக்கு ஒரு அலாதியான பிரியம் உண்டு. அந்த வகையில் மூட்டைப்பூச்சிகளுக்கு எந்த வண்ணத்தின் மீது அதிக ஈர்ப்பு என்ற ஆய்வின் முடிவுகள் பற்றி தான் இங்கு கூறப்பட்டுள்ளன...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
புளோரிடா பல்கலைக்கழகம்!

புளோரிடா பல்கலைக்கழகம்!

புளோரிடா பல்கலைக்கழகத்தை சேர்ந்த சில ஆய்வாளர்கள், மூட்டைப்பூச்சிகளை வைத்து ஒரு ஆய்வு நடத்தினர். இந்த ஆய்வில், எந்த வண்ணங்களில் மூட்டைப்பூச்சிகள் அதிக ஈர்ப்பு கொள்கின்றன என கண்டறியப்பட்டது.

சிவப்பு, கருப்பு!

சிவப்பு, கருப்பு!

இந்த ஆய்வில் ஆச்சரியப்படும் வகையில் சிவப்பு மற்றும் கருப்பு நிறங்களில் மூட்டைப்பூச்சிகள் அதிக ஈர்ப்புக் கொள்வதை கண்டறிய முடிந்தது. மேலும், பச்சை மற்றும் மஞ்சள் நிறங்களை தவிர்ப்பதையும் அவர்கள் கண்டறிந்தனர்.

வண்ணங்கள் எப்படி?

வண்ணங்கள் எப்படி?

ஆராய்ச்சியாளர்கள், சிவப்பு மீது மூட்டைப்பூச்சிகள் ஈர்ப்பு கொள்வதற்கு அவற்றின் வெளிப்புற ஓடு காரணமாக இருக்கலாம். ஏனெனில், அதுவும் சிவப்பு நிறம் தான், என கருதுகின்றனர். இதனால், அவை மூட்டைப்பூச்சிகள் கூட்டமாக இருக்கும் இடம் என கருதி அதிக ஈர்ப்பு கொள்ளலாம் எனவும் தெரிவித்துள்ளனர்.

மாற்றுவீர்களா?

மாற்றுவீர்களா?

மூட்டைப்பூச்சியே பெரும் தொல்லை. இதில் இந்த வண்ணம் அதற்கு பிடித்தது எனில் யார் தான் அதை வைத்திருப்பார்கள். மூட்டைப்பூச்சி இல்லாத வீடுகளுக்கு எந்த பிரச்சனையும் இல்லை.

சந்தேகம்!

சந்தேகம்!

மூட்டைப்பூச்சிக்கு கண்கள் இருக்கின்றன என்ற சந்தேகம் சிலருக்கு எழலாம். ஆனால் அவற்றுக்கு ஆண்டென்னாவை போன்று சிறிய கண்கள் இருக்கிறது. (ஆனால், அவற்றுக்கு சிவப்பு, கருப்பு வேறுபாடு அறியும் அளவிற்கு பார்வை திறன் இருக்கிறதா என்ன?)

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
Read more about: home improvement வீடு
English summary

If You Have Red or Black Bed Sheets Change Them Immediately

If You Have Red or Black Bed Sheets Change Them Immediately