வீட்டில் கரப்பான் பூச்சி தொல்லை தாங்க முடியவில்லையா? இந்த ட்ரிக்கை ட்ரை பண்ணுங்க...

Posted By:
Subscribe to Boldsky

உங்கள் வீட்டில் கரப்பான் பூச்சி தொல்லை தாங்க முடியவில்லையா? சமையலறையில் எந்த ஒரு பொருளையும் நிம்மதியாக வைக்க முடியவில்லையா? உங்கள் வீட்டை குத்தகைக்கு எடுத்து கரப்பான் பூச்சிகள் குடும்பம் நடத்திக் கொண்டிருக்கிறதா? கவலையை விடுங்கள். அதனை வீட்டினுள் நுழைய விடாமல் செய்ய ஓர் அற்புத வழி உள்ளது.

கடைகளில் விற்கப்படும் கண்ட கெமிக்கல் கலந்த ஸ்ப்ரேக்களைப் பயன்படுத்தி கரப்பான் பூச்சியை அழிக்காமல், வீட்டின் சமையலறையில் உள்ள பொருட்களைக் கொண்டு ஒரு கரப்பான் பூச்சி விரட்டியைத் தயாரித்து, அதனைக் கொண்டு அழியுங்கள்.

Get Rid Of Cockroaches Forever With This Trick!

தேவையான பொருட்கள்:

சர்க்கரை - 1 1/2 கப்

100% போரிக் அமிலம் - 1/4 கப்

முட்டை - 3-4

செய்யும் முறை:

Get Rid Of Cockroaches Forever With This Trick!

* முதலில் முட்டையை நீரில் போட்டு 12-15 நிமிடம் நன்கு வேக வைத்து இறக்கி, அதன் ஓட்டை நீக்கி விட வேண்டும்.

* பின் முட்டையின் வெள்ளைக்கருவையும் அகற்றிவிட்டு, ஒரு கிண்ணத்தில் மஞ்சள் கருவைப் போட்டு, அத்துடன் போரிக் அமிலத்தை ஊற்றி, சர்க்கரை சேர்த்து கரண்டியால் கலந்து, பின் சிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ள வேண்டும்.

* உருண்டைகளைத் தயாரித்தப் பின், அவைகளை கரப்பான் பூச்சி வரும் அறைகளில் ஆங்காங்கு வைத்து அறைகளை மூடி விட்டு, சிறிது நேரம் கழித்துப் பாருங்கள். கரப்பான் பூச்சிகள் இறந்திருப்பதைக் காணலாம்.

English summary

Get Rid Of Cockroaches Forever With This Trick!

Want to know how to get rid of cockroaches forever? Check out and give it a try...
Story first published: Tuesday, June 21, 2016, 16:00 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter