உங்கள் சமையலறையை 24/7 சுத்தமாக வைத்திருக்க உதவும் ஐந்து குறிப்புகள்!

By: Batri Krishnan
Subscribe to Boldsky

உங்கள் வீட்டின் சமையலறை சுத்தமாக இருந்தால் நீங்கள் உங்கள் வீட்டில் மகிழ்ச்சியை உணர முடியும். உங்கள் வீட்டின் சமையலறையை சுத்தமாக வைத்திருக்க வேண்டுமெனில், நீங்கள் தினசரி அடிப்படையில் பின்பற்ற வேண்டிய சில எளிய விதிகள் உள்ளன.

சமையல் முடிந்த பிறகு உங்கள் சமையலறையை சுத்தம் செய்வது மிகவும் முக்கியம். சமையலறையில் உருவாகும் குப்பைகளை உடனுக்குடனே நீக்கி அவை குவிந்து விடுவதை தடுப்பது உங்களின் பல்வேறு பிரச்சனைகளை தீர்க்கும். மறுபுறம், உங்கள் சமையல் பலகை, அடுப்பு, நுண்ணலை அடுப்பு மற்றும் நீங்கள் ஒவ்வொரு நாளும் பயன்படுத்தும் மற்ற பொருட்களை சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.

5 Things You Should Keep Clean In Your Kitchen 24/7

உங்கள் சமையலறையை சுத்தம் செய்ய எலுமிச்சை சாறு மற்றும் பேக்கிங் சோடா போன்ற வீட்டில் கிடைக்கும் சில இயற்கை பொருட்களை பயன்படுத்துவது மிகவும் சிறந்தது. இவைகள் விலை மலிவானவை மற்றும் எளிதில் கிடைக்கக்கூடியவை.

எனவே, நீங்கள் எதற்காகக் காத்திருக்கிறார்கள், நீங்கள் உங்கள் சமையலறையை சுத்தமாக வைத்திருக்க உதவும் சில மிக முக்கியமான விஷயங்களை நாங்கள் பட்டியலிட்டுள்ளோம். அவற்றைப் பயன்படுத்தி உங்கள் சமயலறையை 24/7 சுத்தமாக வைத்திருங்கள்.

சமையல் பலகையை சுத்தம் செய்யுங்கள்:

5 Things You Should Keep Clean In Your Kitchen 24/7

நீங்கள் உங்களின் சமையல் வேலையை முடித்த பின் உங்கள் சமையல் பலகையை லேசாக துடைத்து அதனை சுத்தப்படுத்துங்கள். உங்களின் சமையல் பலகையின் மேலுள்ள கறை மற்றும் நாற்றத்தை நீக்க, வீட்டிலுள்ள எலுமிச்சை சாறு அல்லது சோப்பு போன்றவற்றுடன் ஒரு மென்மையான துணியை பயன்படுத்தி லேசாக துடைத்து சுத்தப்படுத்துங்கள்.

எரிவாயு அடுப்பை சுத்தம் செய்யுங்கள்:

5 Things You Should Keep Clean In Your Kitchen 24/7

உங்களின் எரிவாயு அடுப்பைக் கூட ஒவ்வொரு நாளும் சுத்தம் செய்ய வேண்டும். நீங்கள் சமையல் செய்யும் போது அடுப்பில் எதையேனும் சிந்தி விட்டால், உடனடியாக அடுப்பில் இருக்கும் சிந்தல் சிதறல்களை துடைத்து எடுங்கள். இது உணவுச் சிதறல்கள் உங்கள் அடுப்பில் கறையை உருவாக்கி அடுப்பின் தோற்றத்தை அழிப்பதை தவிர்க்க உதவும்.

மைக்ரோ ஓவன் அடுப்பை சுத்தம் செய்யுங்கள்:

5 Things You Should Keep Clean In Your Kitchen 24/7

மைக்ரோ ஓவன் அடுப்பை நீங்கள் உபயோகித்து முடித்த பின் மிக விரைவாக சுத்தம் செய்ய வேண்டும். இது உங்கள் மைக்ரோ ஓவன் அடுப்பில் வாசனை தங்கி இருப்பதை தடுப்பதுடன் அங்கு சிதறி இருக்கும் எண்ணெயை சுத்தம் செய்ய உதவும். மைக்ரோ ஓவன் அடுப்பை சுத்தம் செய்ய சமையல் சோடா உப்பு மற்றும் ஒரு மென்மையான துணியைப் பயன்படுத்தவும்.

சின்க்கை சுத்தம் செய்யுங்கள்:

5 Things You Should Keep Clean In Your Kitchen 24/7

உணவுகள் தயாரித்து முடித்த பிறகு, சின்க்கில் சிறிய அளவு கல் உப்பை போடுங்கள். உப்பு மீது சிறிது அளவு கருப்பு வினிகர் ஊற்றி, ஒரு பிரஷ் பயன்படுத்தி, மெதுவாக சின்க்கை தேய்த்து விடுங்கள். வினிகர் துர்நாற்றத்தை நீக்கவும், உப்பு கறையை நீக்கவும் பயன்படுகின்றது.

பாத்திரங்களை சுத்தம் செய்யுங்கள்:

5 Things You Should Keep Clean In Your Kitchen 24/7

ஒருபோதும் சமைத்த பாத்திரங்களை சின்க்கில் தங்கிவிட அனுமதிக்காதீர்கள். பாத்திரங்களைப் பயன்படுத்திய பின் அவற்றை உடனடியாக சுத்தம் செய்ய மறவாதீர்கள்.

English summary

5 Things You Should Keep Clean In Your Kitchen 24/7

Ladies, if your newly married, living in a new home can be a task. Here are 5 Things You Should Keep Clean In Your Kitchen 24/7. Take a look.
Subscribe Newsletter