மரத்தினாலான சமையல் பாத்திரங்களைச் சுத்தப்படுத்துவதற்கான டிப்ஸ்...

By: Ashok CR
Subscribe to Boldsky

நம்மில் பலரும் மரத்தினாலான ஸ்பூன்கள், ஃபோர்க் மற்றும் கரண்டிகளை வீட்டில் பயன்படுத்துவோம் தானே? அப்படியானால் உங்கள் சமையலறைக்குள் சென்று மரத்தினாலான ஸ்பூன் அல்லது ஃபோர்க்கை முகர்ந்து பாருங்கள். மசாலா வாசனை அல்லது நாள்பட்ட வாசனை அடித்து, பார்ப்பதற்கு பழையதாக அசிங்கமாக தெரிகிறதா? கவலையை விடுங்கள்!

வீட்டிலுள்ள மரத்திலான சமையல் பாத்திரங்களை, சமையலறை பொருட்களை கொண்டே சுத்தப்படுத்துவதற்கான சில டிப்ஸ்களை நாங்கள் வைத்துள்ளோம். உதாரணத்திற்கு, எந்த பொருளிலிருந்தும் வாசனையை நீக்க எலுமிச்சை சிறந்த வீட்டு பொருளாக அமையும்.

அதே போல், மரத்திலான சமையலறை பாத்திரங்களை சிறந்த முறையில் சுத்தப்படுத்த வினிகரும் பயன்படும். இன்னும் குழப்பமாக உள்ளதென்றால், சமையலறைப் பாத்திரங்களை சுத்தமாக வைப்பதற்கான கீழ்கூறிய டிப்ஸ்களைப் பின்பற்றவும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
எலுமிச்சை

எலுமிச்சை

சிறந்த சமையலறை பொருட்களில் ஒன்றான எலுமிச்சையை கொண்டு வீட்டிலுள்ள எந்த ஒரு பொருளையும் நாம் சுத்தப்படுத்தலாம். எலுமிச்சை சாற்றை பிழிந்து அதனை கொதிக்கும் நீரில் ஊற்றவும். இப்போது அந்த கொதிக்கும் நீரில் மரத்தினாலான சமையல் பாத்திரங்களை போடவும். இந்த எலுமிச்சை நீரில் அவைகளை 15 நிமிடங்களுக்கு ஊற விடவும். பின் மர பாத்திரங்களை வெளியில் எடுத்து, ஒரு காட்டன் துணியை கொண்டு அவைகளை நன்றாக துடைக்கவும். பின் உலர்த்துவதற்காக வெயிலில் வைக்கவும்.

வினிகர்

வினிகர்

ஒரு கிளாஸ் வினிகரை ஒரு கிண்ணத்தில் ஊற்றவும். அதனுடன் ஒரு தேக்கரண்டி தேனை சேர்த்து, நன்றாக கலக்கவும். இப்போது ஒரு பஞ்சுருண்டையை அந்த கிண்ணத்தில் முக்கி எடுத்து, அதிகமாக உள்ள தண்ணீரை பிழிந்து கொள்ளுங்கள். பின் அதனை கொண்டு பாத்திரங்களை துடைக்கவும். இந்த செயல்முறையை மீண்டும் தொடரவும்.

உப்பு

உப்பு

மரத்தினாலான பாத்திரங்களைத் துடைப்பதற்கு இதுவும் ஒரு சமையலறை பொருளாக உள்ளது. உப்பை கிண்ணத்தில் உள்ள வெந்நீரில் போடவும். பின் பாத்திரங்களை இந்த உப்பு தண்ணீரில் போட்டு, 5 நிமிடங்களுக்கு தண்ணீரை கொதிக்க வைக்கவும். முடிந்த பின், தண்ணீரை ஊற்றி விட்டு, ஒரு துணியை கொண்டு அவைகளை துடைக்கவும். குறைந்தது ஒரு நாளைக்காவது அவைகளை சூரிய ஒளியில் வைத்து காய வைக்கவும்.

சிட்ரஸ் பழங்கள்

சிட்ரஸ் பழங்கள்

தேவைப்பட்டால், மரத்தினாலான சமையல் பாத்திரங்களைத் துடைக்க சிட்ரஸ் பழங்களையும் பயன்படுத்தலாம். எலுமிச்சைக்கு நாங்கள் கூறியுள்ள அதே செயல்முறையை தான் இதற்கும் பின்பற்ற வேண்டும்.

பேக்கிங் சோடா

பேக்கிங் சோடா

பேக்கிங் சோடா மற்றும் எலுமிச்சை ஜூஸை கொண்டு பேஸ்ட் ஒன்றை தயார் செய்திடவும். இந்த பேஸ்ட்டை மர பாத்திரங்களின் மீது தடவவும். பின் அதனை சூரிய ஒளியில் 15 நிமிடங்களுக்கு ஊற வைக்கவும். அதன் பின் வெந்நீரில் அவைகளை நன்றாக அலசிக் கொள்ளவும்.

வெதுவெதுப்பான நீர்

வெதுவெதுப்பான நீர்

மரத்தினாலான சமையல் பாத்திரங்களை துடைக்க மற்றொரு சிறந்த மற்றும் எளிய டிப்ஸ் - வெந்நீரை கொண்டு அவைகளை கழுவுவது. பாத்திரங்களை பயன்படுத்தும் ஒவ்வொரு முறையும் அவைகளை வெந்நீரை கொண்டு கழுவலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Tips To Clean Wooden Kitchen Utensils

Here we have a few tips on how you can clean your wooden kitchen utensils at home with the help of kitchen ingredients.
Story first published: Monday, November 23, 2015, 14:43 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter