மைக்ரோவேவ் செய்யும் அற்புதமான மாயங்கள்!

Posted By:
Subscribe to Boldsky

பெரும்பாலான வீடுகளில் மைக்ரோவேவ் இல்லாவிட்டாலும், சிலர் அதனை வாங்கி வைத்துக் கொண்டு எப்படி பயன்படுத்துவது என்று தெரியாமல் இருப்பர். ஆனால் மைக்ரோவேவ் கொண்டு சமையல் மட்டுமின்றி, எண்ணற்ற வித்தியாசமான செயல்கள் செய்யலாம் என்பது தெரியுமா?

ஆம் மைக்ரோவேவ் நாம் நினைத்துப் பார்க்க முடியாத அளவில் சிறப்பான ஒரு வீட்டு உபயோகப் பொருளாக உள்ளது. இங்கு மைக்ரோவேவ் கொண்டு என்னவெல்லாம் செய்யலாம் என்று கொடுக்கப்பட்டுள்ளது. அவற்றைப் படித்துப் பார்த்து, நீங்களும் முயற்சித்துப் பாருங்களேன்...

Surprising Things Your Microwave Can Do

* உங்கள் வீட்டில் மைக்ரோவேவ் இருந்தால், தோட்டத்து மண்ணை வளமானதாக மாற்றலாம். அதற்கு தோட்டத்து மண்ணை மைக்ரோவேவ் ஓவனுள் வைத்து சூடேற்ற வேண்டும். இதனால் தோட்ட மண்ணானது செடிகள் செழிப்பாக வளரக்கூடிய சிறந்த உரம் நிறைந்த மண்ணாக இருக்கும் என்று ஆய்வு ஒன்று கூறுகிறது.

* வீட்டில் கிருமிகள் அதிகம் நிறைந்த ஒரு இடம் தான் பாத்திரம் கழுவும் இடம். அதுமட்டுமின்றி, சமையலறையைத் துடைக்கும் பஞ்சு கூட கிருமிகளிடன் இருப்பிடமாக உள்ளது. ஆனால் அந்த பஞ்சை மைக்ரோவேவ் ஒவனில் வைத்து சூடேற்றினால், 90 சதவீத கிருமிகளானது அழிந்துவிடும்.

* நாட்டுச்சர்க்கரை கெட்டி கெட்டியாக இருந்தால், அப்போது அதில் சிறிது தண்ணீர் தெளித்து, மைக்ரோவேவ் ஓவனில் வைம்மு 10-20 நொடிகள் சூடேற்றினால், நாட்டுச்சர்க்கரையானது மென்மையாகவும், பிரஷ்ஷாகவும் இருக்கும்.

* முக்கியமாக வீட்டிற்கு வேலை முடிந்து பசியுடன் வரும் கணவருக்கு, மாலையிலேயே நன்கு சுவையான உணவை சமைத்துவிட்டு, அவர்கள் வரும் நேரத்தில் அவற்றை மைக்ரோவேவ் ஓவனில் வைத்து சூடேற்றி பிரஷ்ஷாகக் கொடுக்க உதவியாக இருக்கும்.

English summary

Surprising Things Your Microwave Can Do

In this article, we look at the things your microwave is capable of doing. These things your microwave can do will unfailingly take you surprise. And to top it all, these are proven things your microwave can do.
Story first published: Thursday, November 27, 2014, 17:56 [IST]
Subscribe Newsletter