Latest Updates
-
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
செப்டம்பர் 07-ல் சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இந்த 3 ராசிக்கு பிரச்சனை மேல் பிரச்சனை வந்து பாடாய்படுத்தும்! -
உலகிலேயே அதிக மதிப்புள்ள கரன்சி எந்த நாட்டுடையது தெரியுமா? டாலரை விட இந்த கரன்சியின் மதிப்புதான் அதிகம் -
பன்னீரும், காளானும் வெச்சு ஒருடைம் இப்படி சைடு டிஷ் பண்ணுங்க.. சப்பாத்தி, பூரிக்கு அள்ளும்.. -
Snake Wine என்றால் என்ன? சீன மக்கள் இதை ஏன் விரும்பி குடிக்கிறார்கள் தெரியுமா?இதுல இவ்வளவு விஷயம் இருக்கா?
சுவர்களில் படிந்துள்ள கறைகளைப் போக்குவதற்கான சில இயற்கை வழிகள்!!!
குழந்தைகள் வீட்டில் இருந்தால், அவர்கள் தங்களது மழலை மொழி மற்றும் கற்பனையை வீட்டுச் சுவர்களில் தான் காண்பிப்பார்கள். அதிலும் அவர்களை ஒரு அறையில் தனியாக விட்டுச் சென்றால் போதும், அந்த அறையில் உள்ள சுவர்கள் வீணாகிவிடும். இதைப் பார்க்க ஒரு பக்கம் சந்தோஷமாக இருந்தாலும், மறுபக்கம் அந்த சுவர்களில் வரையப்பட்ட படங்களை எப்படி போக்குவோம் என்ற கவலை இருக்கும்.
அதுமட்டுமின்றி, சமையலறைக்கு சென்றால், அடுப்பிற்கு அருகில் உள்ள சுவரானது எண்ணெய் பசை கறையுடன் இருக்கும். இதுப்போன்ற கறைகளை போக்குவது என்பது அவ்வளவு ஈஸியல்ல. அதனை நீக்க ஏனோதானோவென்று முயற்சித்தால், சுவர்களில் உள்ள பெயிண்ட்டும் தான் வந்துவிடும். எனவே சுவற்றில் உள்ள பெயிண்ட் போகாமல் சுவரை சுத்தம் செய்ய வேண்டுமானால், கெமிக்கல் கலந்த பொருட்களைப் பயன்படுத்தாமல், இயற்கைப் பொருட்களைப் பயன்படுத்தினால், நல்ல பலன் கிடைக்கும்.
இங்கு சுவற்றில் உள்ள கறைகளைப் போக்க சில எளிய இயற்கை வழிகள் கொடுக்கப்பட்டுள்ளன. அதைப் பார்ப்போமா!!!

வெள்ளை வினிகர்
சுவற்றில் உள்ள கறையைப் போக்க வெள்ளை வினிகரைப் பயன்படுத்தினால், பெயிண்ட் போகாமல் கறைகளை எளிதில் கோக்கலாம். அதற்கு வினிகரை துணியில் நனைத்து, அதனைக் கொண்டு தேய்க்க வேண்டும்.

ஆல்கஹால்
ஆல்கஹால் கூட சுவற்றில் உள்ள கறைகளைப் போக்க பெரிதும் உதவியாக இருக்கும். அதற்கு ஆல்கஹாலை பஞ்சில் நனைது, அதனைக் கொண்டு சுவற்றில் உள்ள கறைப்படிந்த இடத்தை நன்கு தேய்க்க வேண்டும். இதுப்போன்று கறை நீங்கும் வரை துடைத்தால், சுவர் பாழாகாமல் கறையைப் போக்கலாம்.

பவுடர்
ஆம், பவுடர் கூட கறையைப் போக்க உதவும். அதிலும் எண்ணெய் பசை படிந்த உடனேயே சுவர்களில் பவுடரை தெளித்து துடைத்தால், கறைகளை உடனே போய்விடும்.

பேக்கிங் பவுடர்
பேக்கிங் பவுடரை நீரில் கலந்து பேஸ்ட் செய்து, அதனை கறை உள்ள இடத்தில் தடவி, கறை மறையும் வரை தேய்க்க வேண்டும்.

எலுமிச்சை
எலுமிச்சையின் சாற்றினை பேக்கிங் பவுடரில் கலந்து அதனை கறை படிந்த இடத்தில் தடவி 1 மணிநேரம் ஊற வைத்து, பின் ஈரமான துணியால் தேய்த்தால், கறை சட்டென்று மறையும்.

டூத் பேஸ்ட்
எப்படி டூத் பேஸ்ட் பற்களை பளிச்சென்று மாற்றுகிறதோ, அதேப் போன்று சுவர்களையும் பளிச்சென்று வைத்துக் கொள்ள உதவும். எனவே கறை படிந்த சுவற்றில் வெள்ளை நிற டூத் பேஸ்ட்டை, பிரஷ்ஷில் வைத்து தேய்த்து, சிறிது நேரம் ஊற வைத்து, பின் மீண்டும் தேய்த்தால் கறைகள் அகலும்.



Click it and Unblock the Notifications