Latest Updates
-
கொழுப்பு கல்லீரல் புற்றுநோயாக மாறுமா? யாருக்கு ஆபத்து அதிகம்? - விளக்கும் கல்லீரல் நிபுணர்! -
இராவணனை கடவுளாக வழிபடும் வித்தியாசமான 5 இந்தியக் கோவில்கள் - எங்க இருக்கு தெரியுமா? -
Aippasi Matha Rasi Palan 2026: ஐப்பசி மாதம் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும்?- ஜோதிடர் கணிப்புகள்! -
வறுத்தரைச்ச மட்டன் குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. இட்லி, சாதத்துக்கு அள்ளும்.. -
அக்டோபர் 18, 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க ரொம்ப ரொம்ப கவனமாக இருக்கனும் - இல்லனா அவ்வளவுதான் -
Aippasi Horoscope 2026: ஐப்பசி மாதத்தில் அதிர்ஷ்டக்கதவை திறக்கப்போகும் 4 ராசிகள் இவங்கதான் - உங்க ராசி என்ன? -
காளான் வாங்குனா இந்த மாதிரி கேரளா ஸ்டைலில் தோரன் செஞ்சு பாருங்க - டேஸ்ட் வேற லெவலில் இருக்கும் -
வார ராசிபலன்கள் (அக்டோபர் 18-24) - இந்த வாரம் 4 ராசிக்காரர்களை துரதிர்ஷ்டம் விடாம துரத்தப்போகுதாம் -
கர்நாடகா மட்டன் சாறு ரெசிபி - இந்த மாதிரி மட்டன் குழம்பு வைச்சு பாருங்க - வேற லெவல் சைடிஷா இருக்கும் -
100 ஆண்டுகளாக சிக்கன் மற்றும் முட்டை சாப்பிடாத வினோத கிராமம் - ஆனா மட்டன் சாப்பிடுவாங்க - காரணம் என்ன தெரியுமா
பஞ்சாபி பஞ்சரத்ன தால் ரெசிபி - இந்த மாதிரி பருப்பு கடைஞ்சு பாருங்க - சுவையாவும், ஆரோக்கியமாவும் இருக்கும்
Panchratna Dal Recipe in Tamil: தினமும் மதிய சாப்பாட்டுக்கு சாம்பார், குழம்பு என்று செய்து சாப்பிட்டு போரடித்துவிட்டதா? சற்று சிம்பிளாகவும், அதே சமயம் ருசியாகவும் ஒரு சைடு டிஷ் செய்து சாப்பிட நினைக்கிறீர்களா? உங்கள் வீட்டில் காய்கறி எதுவும் இல்லையா? சில பருப்பு வகைகள் மட்டும் இருந்தால் போதும் பஞ்சாபி ஸ்டைலில் ஒரு அட்டகாசமான பஞ்சரத்ன தால் செய்யுங்க.

இந்த பஞ்சாபி ஸ்டைல் பஞ்சரத்ன பருப்பு குழம்பு செய்வதற்கு மிகவும் சுலபமாக இருக்கும். இது சப்பாத்தி, புல்கா, நெய் சோறு மற்றும் சாதம் என அனைத்திற்கும் இது அட்டகாசமாக இருக்கும். பலவகை பருப்பு சேர்த்து செயப்படுவதால் இது சுவையானது மட்டுமல்ல மிகவும் ஆரோக்கியமானதும் கூட. ஒரே மாதிரியான பருப்பு குழம்பு சாப்பிட்டு போரடித்தவர்களுக்கு இந்த பஞ்சரத்ன பருப்பு வித்தியாசமான சுவையைக் கொடுக்கும்.
உங்களுக்கு சுவையான பஞ்சாபி ஸ்டைல் பஞ்சரத்ன பருப்பு எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே பஞ்சாபி பஞ்சரத்ன தால் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
- கடலைப்பருப்பு - ¼ கப்
- மசூர் பருப்பு (சிவப்பு பருப்பு) - ¼ கப்
- பாசிப்பருப்பு - ¼ கப்
- துவரம்பருப்பு - ¼ கப்
- உடைத்த உளுத்தம்பருப்பு - ¼ கப்
- இஞ்சி - 1 அங்குலத் துண்டு
- பச்சை மிளகாய் - 2
- தக்காளி - 3
- மல்லித்தூள் - 1 டீ ஸ்பூன்
- மிளகாய்த்தூள் - 1 டீ ஸ்பூன்
- மஞ்சள் தூள் - ¼ டீ ஸ்பூன்
- கொத்தமல்லி இலைகள் - 2 கைப்பிடி
- உப்பு - தேவையான அளவு
- கசூரி மேத்தி - 1 டேபிள் ஸ்பூன்
- நெய் - 2 டேபிள் ஸ்பூன்
- சீரகம் - 1 டேபிள் ஸ்பூன்
- வரமிளகாய் - 2
- கருவேப்பிலை - சிறிது
செய்முறை:
- முதலில் கடலைப்பருப்பு, மசூர் பருப்பு, பாசிப்பருப்பு,
துவரம்பருப்பு, மற்றும் உடைத்த உளுத்தம்பருப்பை ஒரு பாத்திரத்தில்
சேர்த்து கலந்து கொள்ளவும்.
- இரண்டு அல்லது மூன்று முறை நன்றாக தூசி இல்லாமல் அலசி, பின் தேவையான
அளவு தண்ணீர் சேர்த்து இரண்டு மணி நேரத்திற்கு ஊற விடவும்.
- பின் ஊற வைத்த தண்ணீரை வடித்து விட்டு, மஞ்சள் தூள், உப்பு மற்றும்
வேக வைக்க தேவையான அளவு தண்ணீர் சேர்க்கவும்.
- குக்கரை மூடி 3 அல்லது 4 விசில் வரும் வரை வேக விடவும்.
- விசில் அடங்கும் வரை அப்படியே வைக்கவும்.
- இஞ்சியை மண் இல்லாமல் அலசி தோல் நீக்கி பொடியாக நறுக்கி
கொள்ளவும்.
- பின் ஒரு மிக்ஸி ஜாரில் சுத்தமாக கழுவி காம்பு நீக்கிய பச்சை
மிளகாய் மற்றும் நறுக்கிய இஞ்சியை சேர்க்கவும்.
- நன்றாக விழுதாக அரைத்து தனியே எடுத்து வைக்கவும்.
- நன்கு பழுத்த தக்காளியை சுத்தமாக தண்ணீரில் கழுவி, அதன் பச்சை நிற
காம்பு பகுதியை நீக்கி விட்டு நறுக்கி கொள்ளவும்.
- வாணலியை அடுப்பில் வைத்து சூடானதும் எண்ணெய் சேர்க்கவும்.
- எண்ணெய் காய்ந்ததும் சீரகம் சேர்த்து பொரிய விடவும்.
- பின் அதில் கசூரி மேத்தி மற்றும் காம்பு நீக்கிய வரமிளகாயை கிள்ளி
சேர்த்து வறுக்கவும்.
- அதில் அரைத்து வைத்த இஞ்சி மற்றும் பச்சை மிளகாய் விழுதை சேர்த்து
வதக்கவும்.
- பின் தனியா தூள் மற்றும் மிளகாய் தூள் சேர்த்து எண்ணெயில் சில
நொடிகள் வதக்கவும்.
- அதில் நறுக்கி வைத்த தக்காளி மற்றும் சிறிது உப்பு சேர்த்து
கிளறவும்.
- மசாலாவிலிருந்து எண்ணெய் பிரியும் வரை தக்காளியை வதக்கவும்.
- அதனுடன் வேக வைத்த பருப்பை சேர்த்து நன்கு கிளறவும்.
- தேவையான அளவு உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து பருப்பை 2 நிமிடங்கள்
கொதிக்க விடவும்.
- தண்ணீர் அதிகம் சேர்க்காமல், பருப்பு கெட்டியாக இருக்க
வேண்டும்.
- கடைசியாக கொத்தமல்லி இலைகளைத் தூவி இறக்கினால் சுவையான பஞ்சரத்ன
தால் ரெடி!
- இது சப்பாத்தி, ஃபுல்கா, தோசை, மற்றும் சாதத்துடன் அருமையாக
இருக்கும்.



Click it and Unblock the Notifications
