Aippasi Matha Rasi Palan 2026: ஐப்பசி மாதம் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும்?- ஜோதிடர் கணிப்புகள்!

Aippasi Matha Rasi Palan 2026: தமிழ் மாதங்களில் ஐப்பசி மாதம் ஏழாவது மாதம். துலாம் ராசியில் சூரியன் பயணம் செய்வதால் துலாம் மாதம் என்ற பெயரும் உண்டு. சித்திரை மாதத்தில் உச்சமடையும் சூரியன் ஐப்பசி மாதத்தில் நீச்சம் அடைகிறார். சூரியனின் வேகம் இந்த மாதத்தில் குறைவாக இருக்கும். ஐப்பசி மாதம் கிரகங்களின் பயணத்தை பார்த்தால் கடக ராசியில் உள்ள குரு அதிசாரமாக சிம்மராசிக்கு இடப்பெயர்ச்சி அடையப்போகிறார்.

Aippasi Matha Rasi Palan 2026 Predictions For 12 Zodiac Signs By Astrologer Jeyalakshmi

சுக்கிரன் துலாம் ராசியில் இருந்து வக்ரமாகி கன்னி ராசிக்கு சென்று நீச்சமடைகிறார். வக்ரமடைந்த புதனும், சுக்கிரனும் வக்ர நிவர்த்தி அடைகின்றனர். சனி மீன ராசியில் பயணிக்கிறார். ராகு கும்ப ராசியிலும், கேது சிம்ம ராசியிலும் பயணம் செய்கின்றனர். இந்த கிரகங்களின் இடப்பெயர்ச்சியால் சில ராசிக்காரர்களுக்கு நல்ல வேலை கிடைக்கப்போகிறது. சிலருக்கு வேலையில் புரமோசன் கிடைக்கும், திருமண யோகம் கை கூடி வரப்போகிறது.

ஐப்பசி மாத கிரகங்களின் நிலைகளால் மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளில் பிறந்தவர்களுக்கு என்ன பலன் கிடைக்கப் போகிறது என்பது குறித்து ஜோதிடர் ஜெயலட்சுமி அவர்கள் தமிழ் போல்ட்ஸ்கையுடன் பகிர்ந்து கொண்டார்.

மேஷம்

ஐப்பசி மாதத்தில் உங்க ராசிக்கு கிரகங்களின் சஞ்சாரத்தை பார்த்தால் சூரியன் ஏழாம் வீட்டில் அமர்ந்து உங்களுடைய ராசியை பார்க்கிறார். அரசு தொழில், அரசு வேலை செய்பவர்களுக்கு நன்மைகள் ஏற்படும். சூரியனின் பார்வை உங்க ராசிக்கு கிடைப்பதால் உடல் உஷ்ணம் அதிகரிக்கும் என்பதால் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுவது அவசியம்.

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களுக்கு மிகச்சிறப்பான யோகம் கிடைக்கும். வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறும். கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். வேலையில் பதவி உயர்வு, சம்பள உயர்வு ஏற்படும். பேச்சின் மூலம் தொழில் செய்பவர்களுக்கு நன்மைகள் நடைபெறும். தன வரவு இரட்டிப்பாகும். குடும்பத்தில் வம்ச விருத்தி அதிகரிக்கும். பூர்வீக சொத்துக்கள் மூலம் லாபம் வரும்.

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களுக்கு தன வரவு திருப்திகரமாக இருக்கும். பொருளாதார நெருக்கடிகள் நீங்கும். வெளிநாடு செல்வதற்காக செய்யும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். வீடுகளை புதுப்பிற்கும் வேலைகளை செய்யலாம். தடைபட்ட திருமணங்கள் சுப காரிய பேச்சுவார்த்தைகள் நடைபெறும். வீட்டிற்குத் தேவையான பொருட்களை வாங்கலாம். சிலர் புதிய வண்டி வாகனம் வாங்கலாம்.

கடகம்

உங்களுக்கு அதிர்ஷ்டம் நிறைந்த மாதமாக அமைந்துள்ளது. பண வரவு தாராளமாக இருக்கும். நிதி நெருக்கடிகள் நீங்கும். வேலையில் மேன்மை உண்டாகும் சிலருக்கு பதவி உயர்வு கிடைக்கும். வெளிநாட்டில் வேலை செய்பவர்களிடம் இருந்து வீட்டிற்கு பணம் வரும். ஏற்றுமதி இறக்குமதி தொழிலில் லாபம் வரும்.

சிம்மம்

சூரியனை ராசி அதிபதியாகக் கொண்ட சிம்மம் ராசிக்காரர்களே! இந்த மாதம் உங்க ராசிக்கு அதிர்ஷ்டங்கள் நிறைந்த மாதமாக அமைந்துள்ளது. பண வருமானம் அபரிமிதமாக இருக்கும். தொழில் முயற்சியில் லாபம் அதிகரிக்கும். வேலை செய்யும் இடத்தில் கவுரவம், அந்தஸ்து அதிகரிக்கும். பதவி உயர்வு கிடைக்கும்.

கன்னி

தொழில் வியாபாரத்தில் அபரிமிதமான லாபம் கிடைக்கும். கல்வித்துறையில் வேலை செய்பவர்களுக்கு தன வரவு திருப்திகரமாக இருக்கும். உத்தியோக உயர்வு சம்பள உயர்வு கிடைக்கும். அதிர்ஷ்டம் தேடி வரும். தனியார் துறையில் வேலை செய்பவர்களுக்கு தொழில் முன்னேற்றம் ஏற்படும். பொருளாதார வளர்ச்சி நன்றாக இருக்கும். சகலவிதமான நன்மைகள் நடைபெறும் மாதமாக கன்னி ராசிக்காரர்களுக்கு அமைந்துள்ளது.

துலாம்

துலாம் ராசிக்காரர்களே! ஐப்பசி மாதம் பணவரவு அபரிமிதமாக இருக்கும். வேலையில் இருந்த குழப்பங்கள் நீங்கும். அம்மாவின் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுவது அவசியம். அதிசார குரு பெயர்ச்சிக்குப் பிறகு சுபகாரியங்கள் கைகூடும். ஆன்மீக சுற்றுலா செல்வது மன அமைதியை ஏற்படுத்தும். வீட்டிற்குத் தேவையான பொருட்களை வாங்குவீர்கள். பத்ரகாளி வழிபாடு நன்மையை ஏற்படுத்தும்.

விருச்சிகம்

ஐப்பசி மாதம் விருச்சிக ராசிக்காரர்களின் பொருளாதார வளர்ச்சி மேம்படும். பழைய கடன்கள் நீங்கும் அளவிற்கு வருமானம் அதிகரிக்கும். விரைய ஸ்தானத்தில் சூரியன் இருப்பதால் இதயநோய் உஷ்ணம் தொடர்பான நோய் ஏற்படும். அரசு பணிகளில் இருப்பவர்கள் கவனமாக இருக்கவும். எதையும் எச்சரிக்கையோடு நிதானமாக அணுகவும். குடும்ப ஒற்றுமை அதிகரிக்கும். குடும்பத்தில் இருப்பவர்கள் மூலம் செல்ல செழிப்பு அதிகரிக்கும்.

தனுசு

தனுசு ராசிக்காரர்களுக்கு குருபகவானின் பார்வை கிடைக்கப்போவதால் செல்வம் செல்வாக்கு அதிகரிக்கும். தடைபட்டு வந்த திருமணம் நிச்சயமாகும். பூர்வீக சொத்துக்களால் லாபம் வரும். அரசு பணியாளர்களுக்கு பதவி உயர்வுகளால் இடமாற்றம் ஏற்படும். எந்த தொழில் செய்தாலும் இரட்டிப்பு லாபம் கிடைக்கும்.

மகரம்

மகர ராசிக்காரர்களுக்கு வேலையில் இருந்த பிரச்சினைகள் நீங்கி சந்தோஷம் அதிகமாகும். பொன் பொருள் சேர்க்கை ஏற்படும். தனியார் துறையில் வேலை செய்பவர்களுக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்கும். புரமோசனுடன் கூடிய இடமாற்றம் உண்டாகும்.

கும்பம்

குரு பகவானின் நேரடி பார்வையால், சகோதர சகோதரிகளின் மூலம் உதவிகள் தேடி வரும். நோய்கள் நீங்கும். வெளிநாடு போகும் அமைப்பு வரும். திடீர் அதிர்ஷ்டம் மூலம் பண வருமானம் வரும். சங்கடங்கள் நீங்கி சந்தோஷங்கள் அதிகரிக்கும் மாதமாக கும்ப ராசிக்காரர்களுக்கு அமைந்துள்ளது.

மீனம்

மீன ராசிக்காரர்களுக்கு யோகங்கள் நிறைந்த மாதம் புதிய சொத்துக்கள் வீடு வாங்கலாம். தனியார் துறையில் வேலை செய்பவர்களுக்கு சம்பள உயர்வு கிடைக்கும். சிலருக்கு பதவி உயர்வுடன் கூடிய இடமாற்றம் தேடி வரும். தன தான்ய லாபம் உண்டாகும். வெளிநாட்டில் இருந்து வரும் செய்திகள் நன்மையை தரும். கணவன் மனைவி இடையே இருந்த பிரச்சினைகள் நீங்கி அந்நியோன்னியம் அதிகரிக்கும்.

Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.

Story first published: Sunday, October 18, 2026, 9:45 [IST]
Desktop Bottom Promotion