Latest Updates
-
Aippasi Matha Rasi Palan 2026: ஐப்பசி மாதம் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும்?- ஜோதிடர் கணிப்புகள்! -
வறுத்தரைச்ச மட்டன் குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. இட்லி, சாதத்துக்கு அள்ளும்.. -
அக்டோபர் 18, 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க ரொம்ப ரொம்ப கவனமாக இருக்கனும் - இல்லனா அவ்வளவுதான் -
Aippasi Horoscope 2026: ஐப்பசி மாதத்தில் அதிர்ஷ்டக்கதவை திறக்கப்போகும் 4 ராசிகள் இவங்கதான் - உங்க ராசி என்ன? -
காளான் வாங்குனா இந்த மாதிரி கேரளா ஸ்டைலில் தோரன் செஞ்சு பாருங்க - டேஸ்ட் வேற லெவலில் இருக்கும் -
வார ராசிபலன்கள் (அக்டோபர் 18-24) - இந்த வாரம் 4 ராசிக்காரர்களை துரதிர்ஷ்டம் விடாம துரத்தப்போகுதாம் -
கர்நாடகா மட்டன் சாறு ரெசிபி - இந்த மாதிரி மட்டன் குழம்பு வைச்சு பாருங்க - வேற லெவல் சைடிஷா இருக்கும் -
100 ஆண்டுகளாக சிக்கன் மற்றும் முட்டை சாப்பிடாத வினோத கிராமம் - ஆனா மட்டன் சாப்பிடுவாங்க - காரணம் என்ன தெரியுமா -
18 ஆண்டுக்கு பின் கேது துலாம் ராசிக்கு செல்வதால் இந்த 3 ராசிக்காரர்களுக்கு கெட்ட நேரம் தொடங்கப்போகுதாம் -
மும்பை ஸ்டைல் சன்னா மசாலா புலாவ் ரெசிபி - இந்த மாதிரி புலாவ் செஞ்சு பாருங்க - டக்கரா இருக்கும்
இராவணனை கடவுளாக வழிபடும் வித்தியாசமான 5 இந்தியக் கோவில்கள் - எங்க இருக்கு தெரியுமா?
Navaratri 2026: இந்த வருடன் நவராத்திரி கொண்டாட்டம் கலைகட்ட தொடங்கியுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் நவராத்திரி பண்டிகையின் போது, அதர்மத்தின் மீதான தர்மத்தின் வெற்றியைக்கொண்டாடும் விதமாக, இந்தியா முழுவதும் இலட்சக்கணக்கான இந்துக்கள் ராவணனின் உருவ பொம்மைகளை எரிக்கின்றனர். இந்த வருடமும் நவராத்திரி இறுதி நாளன்று இராவணனை தீயிட்டு கொளுத்த இந்தியா முழுவதும் மக்கள் தயாராகி வருகின்றனர்.

ஆனால் இந்தியாவின் அனைத்துப் பகுதிகளிலும் மக்கள் இராவணனை வெறுப்பதில்லை. பலருக்கு ராவணன் இராமாயணத்தின் வில்லனாகத் தெரிந்தாலும், ஒரு சிலரைப் பொறுத்தவரை அவர் வில்லன் அல்ல. அவர்களுக்கு இராவணன் ஒரு சிறந்த அறிஞர், ஞானி மன்னர் மற்றும் சிவபெருமானின் மிகச்சிறந்த பக்தர்களில் ஒருவர் ஆவார். குறிப்பாக தமிழ்நாட்டில் பெரும்பாலான மக்கள் இராவணனை ஒரு ஹீரோவாகவே பார்க்கிறார்கள். தமிழ்நாட்டில் மட்டுமின்றி இந்தியாவின் பல பகுதிகளில் இராவணனை மக்கள் வழிபடுகிறார்கள். சொல்லப்போனால் இராவணனுக்காக கோவில்கள் கூட கட்டுப்பட்டுள்ளன. அந்த கோவில்கள் எங்கு உள்ளது என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
தசானன் கோயில் - கான்பூர், உத்தரப் பிரதேசம்
தசானன் கோயில் என்பது 125 ஆண்டுகள் பழமையான ஒரு கோவிலாகும். இது ஒவ்வொரு வருடமும் தசரா பண்டிகையன்று மட்டுமே, அதாவது ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே திறக்கப்படுகிறது. கான்பூரில் உள்ள கைலாஷ் கோயில் வளாகத்திற்குள் அமைந்துள்ள இந்த 'தசானன்' (ராவணனின் பத்து தலைகளைக் குறிக்கும் பெயர்) கோயில் 1868-ஆம் ஆண்டில் கட்டப்பட்டது.
தினமும் திறந்திருக்கும் பிற கோயில்களைப் போலன்றி, இந்தக் கோயில் தசரா நாளில் மட்டுமே திறக்கப்படுகிறது. அன்று காலை, பக்தர்கள் ஒன்றுகூடி சிலையினைச் சுத்தம் செய்து, பால் மற்றும் மலர்களால் அலங்கரித்து, சிறப்பு ஆரத்தி செய்கின்றனர். இங்குள்ள உள்ளூர் மக்கள் இராவணனின் அறிவுத்திறன், வேதங்கள் குறித்த ஆழ்ந்த புலமை மற்றும் சிவபெருமான் மீதான அவரது தீவிர பக்தி ஆகியவற்றிற்காக அவரை வணங்குகின்றனர். திருவிழா முடிந்ததும், மீண்டும் 364 நாட்களுக்கு இந்தக் கோவில் பூட்டப்படுகின்றது.
பிஸ்ரக் ராவணன் கோவில் - நொய்டா, உத்தரப் பிரதேசம்
பிஸ்ரக் ராவணன் கோவில், ராவணனின் பிறப்பிடமாகக் கருதப்படுகிறது. 'பிஸ்ரக்' என்ற பெயர், ராவணனின் தந்தையான விஸ்ரவ முனிவரின் பெயரிலிருந்து உருவானது. இந்த கிராமத்தில் இந்தியாவின் மற்ற பகுதிகளில் நடப்பது போல தசரா பண்டிகையின் போது பட்டாசுகள் வெடிக்கப்படுவதோ அல்லது ராவணனின் உருவ பொம்மைகள் எரிக்கப்படுவதோ இல்லை. மாறாக, மக்கள் ராவணனுக்காக துக்கம் அனுசரிக்கின்றனர். இந்தக் கோயிலில், முனிவர் விஷ்ரவாவாலேயே பிரதிஷ்டை செய்யப்பட்டதாகக் கூறப்படும் ஒரு சிவலிங்கமும், ராவணனின் சிலைகளும் உள்ளன.
மந்தசோர் ராவணன் கோயில் - மத்தியப் பிரதேசம்
மந்தசோர் ராவணன் கோயிலில், ராவணன் ஒரு மதிக்கத்தக்க மருமகனாக வழிபடப்படுகிறார். ராவணனின் மனைவியான மண்டோதரி, கடந்த காலங்களில் 'தாஷ்பூர்' என்று அழைக்கப்பட்ட இந்த ஊரைச் சேர்ந்தவர் என்று அந்த ஊர் மக்கள் நம்புகிறார்கள். இந்த உறவு முறையின் காரணமாக, மக்கள் ராவணனை ஒரு மருமகனுக்குரிய மிகுந்த மரியாதையுடன் நடத்துகின்றனர்.
மந்தசோரின் கான்சூர் பகுதியில், 35 அடி உயரமுள்ள பிரம்மாண்டமான ராவணனின் கல் சிலை ஒன்று உள்ளது. இந்த ஊரைச் சேர்ந்த பெண்கள், அந்தச் சிலையைக் கடந்து செல்லும்போது, தங்கள் குடும்பத்தைச் சேர்ந்த பெரியவர் ஒருவருக்கு மரியாதையாக, தங்கள் முகத்தை மறைத்துக்கொள்கிறார்கள்.
ராவண கிராமம், விதிஷா - மத்தியப் பிரதேசம்
ராவண கிராமத்தில், பத்தடி நீளமுள்ள, சாய்ந்த நிலையில் இருக்கும் ராவணனின் கல் சிலை ஒன்று வழிபடப்படுகிறது. ராவணன் இந்த கிராமத்திற்குப் பாதுகாப்பையும் செழிப்பையும் வழங்குகிறார் என்று உள்ளூர் மக்கள் நம்புகின்றனர். இதனால் புதிய வாகனம் வாங்குவது, தொழில் தொடங்குவது அல்லது திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் போன்ற எந்தவொரு சுப காரியத்தைத் தொடங்குவதற்கு முன்பும், மக்கள் இந்த இடத்திற்கு சென்று ராவணனின் ஆசியைப் பெறுகிறார்கள்.
பைஜ்நாத் கோயில் - காங்ரா, இமாச்சலப் பிரதேசம்
இந்தியாவின் மிகவும் புகழ்பெற்ற சிவபெருமானின் கோயில்களில் ஒன்று பைஜ்நாத்தில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கும், ராவணனுக்கும் ஒரு சுவாரஸ்யமான தொடர்பு உள்ளது. புராணங்களின்படி, ராவணன் இங்கு கடும் தவம் புரிந்து, சிவபெருமானை மகிழ்விப்பதற்காகத் தனது பத்து தலைகளையும் ஒவ்வொன்றாக அர்ப்பணித்தாகக் கூறப்படுகிறது. அவரது பக்தியால் நெகிழ்ந்த சிவபெருமான், இராவணனுக்கு சக்திவாய்ந்த வரங்களை அருளினார். ராவணன் சிவபெருமானின் தீவிர பக்தனாக இருந்ததால், பைஜ்நாத் மக்கள் தசரா பண்டிகையின் போது ராவணனின் உருவ பொம்மையை எரிப்பதில்லை. அவ்வாறு செய்தால் சிவபெருமான் கோபமடைவார் என்று இந்த பகுதி மக்கள் அஞ்சுகிறார்கள்.



Click it and Unblock the Notifications

