Latest Updates
-
பஞ்சாபி பஞ்சரத்ன தால் ரெசிபி - இந்த மாதிரி பருப்பு கடைஞ்சு பாருங்க - சுவையாவும், ஆரோக்கியமாவும் இருக்கும் -
கொழுப்பு கல்லீரல் புற்றுநோயாக மாறுமா? யாருக்கு ஆபத்து அதிகம்? - விளக்கும் கல்லீரல் நிபுணர்! -
இராவணனை கடவுளாக வழிபடும் வித்தியாசமான 5 இந்தியக் கோவில்கள் - எங்க இருக்கு தெரியுமா? -
Aippasi Matha Rasi Palan 2026: ஐப்பசி மாதம் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும்?- ஜோதிடர் கணிப்புகள்! -
வறுத்தரைச்ச மட்டன் குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. இட்லி, சாதத்துக்கு அள்ளும்.. -
அக்டோபர் 18, 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க ரொம்ப ரொம்ப கவனமாக இருக்கனும் - இல்லனா அவ்வளவுதான் -
Aippasi Horoscope 2026: ஐப்பசி மாதத்தில் அதிர்ஷ்டக்கதவை திறக்கப்போகும் 4 ராசிகள் இவங்கதான் - உங்க ராசி என்ன? -
காளான் வாங்குனா இந்த மாதிரி கேரளா ஸ்டைலில் தோரன் செஞ்சு பாருங்க - டேஸ்ட் வேற லெவலில் இருக்கும் -
வார ராசிபலன்கள் (அக்டோபர் 18-24) - இந்த வாரம் 4 ராசிக்காரர்களை துரதிர்ஷ்டம் விடாம துரத்தப்போகுதாம் -
கர்நாடகா மட்டன் சாறு ரெசிபி - இந்த மாதிரி மட்டன் குழம்பு வைச்சு பாருங்க - வேற லெவல் சைடிஷா இருக்கும்
1/2 கிலோ சிக்கன் வாங்குனா.. இப்படி செஞ்சு சாப்பிடுங்க.. டேஸ்ட் அல்டிமேட்டா இருக்கும்..
Bachelor Chicken Masala Recipe In Tamil: நீங்கள் அடிக்கடி சிக்கன் வாங்கி சமைப்பீர்களா? அதுவும் எப்போதும் ஒரே சுவையில் தான் சிக்கனை சமைத்து சாப்பிடுவீர்களா? சற்று வித்தியாசமான சுவையில் சிக்கனை செய்து சுவைக்க நினைக்கிறீர்களா? முக்கியமாக சட்டென்று சமையலை முடிக்க வேண்டுமா? அப்படியானால் பேச்சுலர் சிக்கன் மசாலா ரெசிபியை செய்யுங்கள். இந்த சிக்கன் மசாலா சாதத்துடன் மட்டுமின்றி, சப்பாத்தியுடன் சேர்த்து சாப்பிடவும் அருமையாக இருக்கும்.

உங்களுக்கு இந்த பேச்சுலர் சிக்கன் மசாலா ரெசிபியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே பேச்சுலர் சிக்கன் மசாலா ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
ஊற வைப்பதற்கு...
* சிக்கன் - 1/2 கிலோ
* தயிர் - 2-3 டேபிள் ஸ்பூன்
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன்
* மிளகாய் தூள் - 1 1/2 டீஸ்பூன்
* கரம் மசாலா - 1/2 டீஸ்பூன்
* சிக்கன் மசாலா - 1 டீஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
* சீரகத் தூள் - 1/2 டீஸ்பூன்
* கொத்தமல்லி - சிறிது
* உப்பு - சுவைக்கேற்ப
வறுத்து மசாலா அரைப்பதற்கு...
* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* பட்டை - 1 துண்டு
* காஷ்மீரி மிளகாய் - 3
* கிராம்பு - 3-4
* மல்லி விதை - 1 டேபிள் ஸ்பூன்
* சீரகம் - 1 டீஸ்பூன்
* வெங்காயம் - 2 (நறுக்கியது)
* பூண்டு - 8-10
* தக்காளி - 2
* தண்ணீர் - சிறிது
தாளிப்பதற்கு...
* எண்ணெய் - 2-3 டேபிள் ஸ்பூன்
* சீரகம் - 1/2 டீஸ்பூன்
* அரைத்து வைத்துள்ள மசாலா
* உப்பு - சுவைக்கேற்ப
* ஊற வைத்த சிக்கன்
* கொத்தமல்லி - சிறிது
செய்முறை:
* முதலில் சிக்கனை கழுவி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு கிண்ணத்தில் தயிர், இஞ்சி பூண்டு பேஸ்ட், மிளகாய் தூள்,
சிக்கன் மசாலா, மஞ்சள் தூள், சீரகத் தூள், சிறிது கொத்தமல்லி இலைகள்
ஆகியவற்றை நன்கு கட்டிகளின்றி கலந்து கொள்ள வேண்டும்.
* பின்பு அதில் கழுவி வைத்துள்ள சிக்கனை சேர்த்து நன்கு பிரட்டி,
10-15 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், பட்டை, காஷ்மீரி வரமிளகாய், கிராம்பு, மல்லி, சீரகம்
சேர்த்து தாளிக்க வேண்டும்.
* அதன் பின் அதில் நறுக்கிய வெங்காயம், பூண்டு பற்களை சேர்த்து நன்கு
வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் தக்காளியை சேர்த்து நன்கு வதக்கி இறக்கி குளிர வைக்க
வேண்டும்.
* பின்பு மிக்சர் ஜாரில் வதக்கிய பொருட்களை சேர்த்து, சிறிது நீரை
ஊற்றி நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், சீரகம் சேர்த்து தாளிக்க வேண்டும்.
* அதன் பின் அதில் அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து, சுவைக்கேற்ப
உப்பு சேர்த்து கிளறி, பச்சை வாசனை போக வதக்க வேண்டும்.
* பிறகு அதில் ஊற வைத்துள்ள சிக்கனை சேர்த்து நன்கு 5 நிமிடம் வதக்க
வேண்டும்.
* பின் அதில் 2-3 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி கிளறி, மூடி வைத்து
குறைவான தீயில் வைத்து 20 நிமிடம் வேக வைக்க வேண்டும்.
* இறுதியாக மூடியைத் திறந்து, அதில் கொத்தமல்லியைத் தூவி கிளறினால்,
சிக்கன் மசாலா தயார்.



Click it and Unblock the Notifications
