எலுமிச்சையின் நினைத்துப் பார்க்க முடியாத பலன்கள்!

Posted By: Boopathi Lakshmanan
Subscribe to Boldsky

எலுமிச்சை என்ற அந்த மஞ்சள் நிற பழத்தின் பலன்களை கணக்கில்லாமல் சொல்லிக் கொண்டே இருக்கலாம். சுவையை கூட்டுவதற்காக தண்ணீரிலோ அல்லது குளிர் பானங்களிலோ போட்டு பயன்படுத்தலாம் அல்லது சரும பராமரிப்பிற்காகவும் கூட பயன்படுத்தலாம். இப்படியாக எலுமிச்சையின் பலன்களை அடுக்கிக் கொண்டே போகலாம். கையில் அடங்கிவிடும் இந்த பழத்தை எப்பொழுதும் தயாராக வைத்திருக்க வேண்டும். ஏனெனில், இந்த பழம் எப்பொழுது தேவைப்படும் என்று உங்களுக்குத் தெரியாது.

எலுமிச்சைப் பழத்தையும், அதன் பிற பகுதிகளையும் எப்படி பயன்படுத்தலாம் என்பதைப் பற்றி உங்களுக்கு ஏற்கனவே தெரிந்திருக்கலாம் ஆனால் முழுமையாகத் தெரிந்திருக்காது. இதோ எலுமிச்சையின் ரகசிய பலன்களையும் உங்களுக்கு அம்பலப்படுத்துகிறோம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேனா மை கறைகளுக்கு குட் பை

பேனா மை கறைகளுக்கு குட் பை

எலுமிச்சை சாற்றின் பலன்களுக்கு முடிவே இல்லை. மோசமான பேனா மை கறைகளையும் கூட கண்ணுக்குத் தெரியாமல் துரத்துவதற்கு எலுமிச்சை சாற்றிலுள்ள அமிலம் உதவும். பேனா மை காய்ந்து போவதற்கு முன்னர் எலுமிச்சை சாற்றை தடவினால், எதிர்பார்த்த பலன் உடனே கிடைக்கும். கறையுள்ள இடத்தில் மெதுவாக தேய்த்த பின்னர், குளிர்ந்த நீரில் துணியை அலசி விட்டு, கறையை தேடிப் பாருங்கள் - அற்புதம் தெரியும்.

வெண்மையான கை நகங்கள்

வெண்மையான கை நகங்கள்

எலுமிச்சையின் மிகவும் பரவலான பயன்பாடுகளில் ஒன்றாக ப்ளீச்சிங் உள்ளது. கை நகங்கள் அல்லது கால் நகங்களை வெண்மைப்படுத்த வேண்டும் என்றால், எலுமிச்சை சாற்றில் நகங்களை 10 நிமிடங்களுக்கு ஊற வைக்கவும் அல்லது எலுமிச்சை தோலை நகங்களில் நேரடியாகத் தேய்த்து உடனடி பலன் பெறுங்கள். சிறந்த பலன் கிடைக்க வேண்டுமென்றால், வெள்ளை வினிகர் மற்றும் வெதுவெதுப்பான தண்ணீர் கரைசலை சமஅளவு எடுத்துக் கொண்டு, அதில் எலுமிச்சை சாற்றை கலந்து -நகங்களை விட்டு நன்றாக அலசவும். இதன் பின்னர் உங்களுடைய நகங்கள் பளிச்சிடுவதை உடனடியாகப் பார்க்க முடியும்.

கரும்புள்ளிகளை நீக்குதல்

கரும்புள்ளிகளை நீக்குதல்

ஃபேஷியல் ஸ்கரப்களும், ஃபேஸ் மாஸ்க்குகளும் முகத்திலுள்ள கரும்புள்ளிகளை நீக்கவில்லையெனில், இரவில் படுக்கப் போகும் முன் எலுமிச்சை சாற்றை அந்த இடங்களில் தடவிக் கொள்ளுங்கள். காலை எழுந்தவுடன் குளிர்ந்த நீரில் முகத்தைக் கழுவி விடுங்கள். சில நாட்களுக்கு பிறகு, முகத்திலுள்ள துளைகள் சுருங்கத் துவங்கும் - அதன் பின்னர் கரும்புள்ளிகளை எங்கும் காண முடியாது. அதே சமயம், கரும்புள்ளிகள் ஏற்கனவே முகப்பருக்களாக வளர்ந்து விட்டால், எரிச்சலுடைய அந்த தோல் பகுதியில் எலுமிச்சை சாறு துளிகளை விட்டால், அந்த இடம் விரைவில் காய்ந்து, குணமடைந்து விடும்.

மென்மையான தலைமுடி

மென்மையான தலைமுடி

கோடைக்காலத்தில் கவர்ச்சியான தலைமுடியை பராமரிக்க வேண்டும் என்று நீங்கள் விரும்பினால், எலுமிச்சையைப் பயன்படுத்தி, பிரச்சனைக்குரிய ரசாயனங்களிலிருந்து உங்களுடைய தலைமுடியை காத்துக் கொள்ளுங்கள். ¼ கோப்பை எலுமிச்சை சாற்றுடன் ¾ கோப்பை தண்ணீரை கலந்து முடியில் தடவிக் கொள்ளுங்கள். விளைவு இன்னும் சிறப்பானதாக இருக்க வேண்டும் மற்றும் உடனடியாக கிடைக்க வேண்டும் என்று நீங்கள் விரும்பினால், தலைமுடியை சூரிய ஒளியில் உலர வைக்கவும். இதன் மூலம் சூரிய ஒளியின் பளபளப்பும், இயற்கையம்சமும் நிரம்பிய தலைமுடி உங்களுக்கு கிடைக்கும்.

வெட்டும் பலகைகள் - சுத்தமாகவும், நாற்றமில்லாமலும் பாதுகாத்தல்

வெட்டும் பலகைகள் - சுத்தமாகவும், நாற்றமில்லாமலும் பாதுகாத்தல்

காய்கறி வெட்டும் பலகைகளில் உள்ள கறைகளை நீக்குவதற்கு எலுமிச்சை உதவுகிறது. எலுமிச்சையை அறுத்து அதன் பாதியிலுள்ள சாற்றை பலகையின் மீது பிழிந்து விட்டு, தேய்க்கவும். 20 நிமிடங்கள் கழித்து பலகையை சுத்தம் செய்யவும். தேவைப்படும் அளவிற்கு தண்ணீரில் அலசவும். பலகையை சுத்தம் செய்யவும் மற்றும் கிருமி நீக்கம் செய்யவும் விரும்பினால் எலுமிச்சை சாற்றை பயன்படுத்துங்கள். இஞ்சியின் மணம், வெங்காயம் அல்லது மிகவும் அதிக நாற்றம் தரும் உணவுப் பண்டங்களின் நாற்றத்தை விரட்டுதல் போன்றவற்றிற்கும் எலுமிச்சை உதவும்.

வெண்மையான சலவை

வெண்மையான சலவை

ஒரு காலத்தில் பளிச் என்றிருந்த துணிகளை, சலவை செய்த பின்னர் அவற்றின் குணம் மாறிவிட்டது என்று நினைக்கிறீர்களா? ஆம் என்றால், அந்த பளிச் நிறத்தைக் மீட்டுக் கொண்டு வர எலுமிச்சையை பயன்படுத்துங்கள். சாதாரணமாக துவைக்கக் கூடிய துணியுடன் ½ கோப்பை எலுமிச்சை சாற்றை விட்டு பயன்படுத்தினால், பிளீச்சிங் பாட்டிலின் துணை உங்களுக்கு அவசியப்படாது.

தொண்டை புண்

தொண்டை புண்

எலுமிச்சைக்கு மருத்துவ குணங்களும் உள்ளன. எந்தவித பக்க விளைவுகளும் இல்லாமல் தொண்டை புண்ணை குணப்படுத்த விரும்பினால் எலுமிச்சையை பயன்படுத்துங்கள். பாதி எலுமிச்சையை எடுத்துக் கொண்டு, கேஸ் ஸ்டவ்வில் அது தங்க பழுப்பு நிறமாக மாறும் வரை சூடுபடுத்தவும். ஓர தேக்கரண்டி தேனுடன், இந்த பழத்தின் சாற்றைப் பிழிந்து குடிக்கவும். 4 தேக்கரண்டிகள் எலுமிச்சை சாறு, ஒரு கோப்பை தேன் மற்றும் ½ கோப்பை ஆலிவ் எண்ணெயுடன் சேர்த்த மற்றொரு கலவையையும் கூட தொண்டை புண்ணை ஆற்றுவதற்குப் பயன்படுத்தலாம். இந்த கலவை 5 நிமிடங்களுக்கு சூடுபடுத்தி, நன்றாகக் கலக்கி, 2 மணி நேரத்திற்கொருமுறை ஒரு தேக்கரண்டி குடித்து வரலாம்.

பொடுகுகளை ஒழித்தல்

பொடுகுகளை ஒழித்தல்

எலுமிச்சை பொடுகுத் தொல்லையை ஒழித்துக் கட்டும் என்பது பலருக்கும் தெரியாத உண்மையாகும். ஒரு தேக்கரண்டி எலுமிச்சை சாற்றைப் பயன்படுத்தி இந்த பிரச்சனைக்கு தீர்வு கண்டிட முடியும். இந்த சிகிச்சையை ஷாம்புவுடன் கலந்தும் செய்யலாம். இதற்காக 2 தேக்கரண்டிகள் எலுமிச்சை சாற்றை, 2 கோப்பை தண்ணீருடன் கலந்து கொள்ளுங்கள். தினமும் இந்த கலவையை தலையில் தேய்த்து வந்தால், பொடுகுகளை நீங்கள் என்றும் காணப்போவதில்லை.

ஸ்டெயின்லெஸ் ஸ்டீல், பித்தளை மற்றும் செம்பு பாத்திரங்களின் பளபளப்பு

ஸ்டெயின்லெஸ் ஸ்டீல், பித்தளை மற்றும் செம்பு பாத்திரங்களின் பளபளப்பு

எலுமிச்சை சாறு மற்றும் உப்பு சேர்ந்த கலவையை கொண்டு இந்த பாத்திரங்களை புதிது போல பளபளக்கச் செய்ய முடியும். எலுமிச்சைத் துண்டை எடுத்து, அதில் உப்பு தடவி கறை உள்ள இடங்களில் தேய்க்கவும். சிறிதளவு தண்ணீரில் சுத்தம் செய்த பின்னர் அந்த பாத்திரங்கள் புதிது போல பளபளக்கும்! ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் சிங்க்களிலும் கூட இந்த வழிமுறையை நீங்கள் முயற்சி செய்து பார்க்கலாம்.

ப்ரெஷ்! ப்ரெஷ்! ப்ரெஷ்!

ப்ரெஷ்! ப்ரெஷ்! ப்ரெஷ்!

சுவையான உணவை தயார் செய்து, ஒரு மணி நேரத்திற்குள் அது ப்ரெஷ் ஆக இல்லாமல் போவதைப் பார்த்து உங்களுடைய புத்துணர்ச்சியும் கூட குறைந்து போய்விடும். இந்த சூழலில் ஆபத்பாந்தவனாக உதவப் போவது சாட்சாத் எலுமிச்சை சாறு தான்! இயற்கையாக உணவில் ஏற்படும் இரசாயன மாற்றங்களை தவிர்க்கும் குணம் எலுமிச்சை பழத்திற்கு உள்ளதால், ஆப்பிள், பேரிக்காய் மற்றும் அவகேடோ, வெங்காயம், தக்காளி, மிளகாய் கலந்த உணவு ஆகியவற்றை பல மணி நேரங்களுக்கு புத்துணர்ச்சியுடன் ப்ரெஷ் ஆக வைத்திட முடியும்.

தட்டுகளை சுத்தம் செய்ய

தட்டுகளை சுத்தம் செய்ய

ஓட்டைகளிலும், இடுக்குகளிலும் சிறு சிறு துகள்களாக மாசுப்பொருட்கள் அடைத்துக் கொண்டிருக்கும் தட்டுகளை சுத்தம் செய்வது தலைவலியைத் தரும் செயலாக இருக்கும். இந்த வேலையை அடுத்த முறை நீங்கள் பார்க்கும் போது, பாதி எலுமிச்சையை துணைக்கு அழைத்துக் கொள்ளுங்கள். புன்னகையோடு. எலுமிச்சையைப் பயன்படுத்தி, இவ்வாறு மாட்டிக் கொண்டிருக்கும் துகள்களை குறைந்த முயற்சியிலேயே சுத்தம் செய்து விட முடியும்.

செலவில்லாத அலங்காரம்!

செலவில்லாத அலங்காரம்!

கோடைக்காலத்தில் உங்கள் வீட்டை சற்றே மாறுதலாக காட்ட விரும்பினால் - எலுமிச்சை சரியான தீர்வாகவும், தேர்வாகவும் இருக்கும். எலுமிச்சையை அறுத்து ஒரு கிண்ணத்தில் வைத்து ஜன்னல் ஓரங்களிலோ அல்லது மேஜைகளின் மீதோ வைத்திருந்தால் - அது அற்புதமான காட்சியாக இருக்கும். சூரிய வெப்பம் மிகுந்த நாட்களில் மஞ்சள் தோலில் மிதக்கும் எலுமிச்சையை பார்ப்பது உங்களுக்கு நல்ல எண்ணத்தை கொடுப்பதாக இருக்கும்.

மைக்ரோ வேவ்

மைக்ரோ வேவ்

உங்களுடைய மைக்ரோ வேவ்வை சுத்தம் செய்யவும், தேய்த்திடவும் வெகுநேரம் ஆகிறதா? ஆம் என்றால் எடுத்துக் கொள்ளுங்கள் 4 தேக்கரண்டிகள் எலுமிச்சை சாற்றையும், 1 கோப்பை தண்ணீரையும். இந்த கலவையை 5 நிமிடங்களுக்கு சூடாக்கி விட்டு, மைக்ரோ வேவ் மீது தேய்த்தால், உங்கள் முயற்சி குறுகிய நேரத்தில் நல்ல பலன் தரும்.

குப்பைகளை கிருமிநீக்கம் செய்தல்

குப்பைகளை கிருமிநீக்கம் செய்தல்

சிறிதளவு சமையல் சோடாவுடன் சேர்த்து, பாதியளவு எலுமிச்சையை உங்களுடைய வீட்டு குப்பைத் தொட்டியில் போடுங்கள். இதன் மூலம் குப்பைத் தொட்டியில் நாற்றம் வருவதை தவிர்த்திட முடியும்.

கைகளில் கறையா!

கைகளில் கறையா!

உணவுகளைப் பரிமாறிய பின்னர் உங்கள் கைகளை எலுமிச்சை சாற்றில் உடனடியாக கழுவவும். இதன் மூலம் உங்களுடைய கைகளை ப்ளூபெர்ரி பை போன்று சுத்தம் செய்திட முடியும்.

எலுமிச்சையின் பலன்களை எண்ணற்றவையாக சொல்லிக் கொண்டே போக முடியும். மேற்கண்ட தகவல்களை எல்லாம் தெரிந்த கொண்ட பின்னர், எலுமிச்சையை முன்பு பார்த்தது போல இன்று பார்க்க மாட்டீர்கள். எலுமிச்சையை பற்றிய உங்களுடைய கண்ணோட்டம் மாறி இருக்கும். அருகிலுள்ள சூப்பர் மார்க்கெட்டுக்கு சென்று, விற்கும் அனைத்து எலுமிச்சைகளையும் வாங்கி விடத் தோன்றும். எனினும், இவ்வாறு வாங்கும் போது சிறிதாக இருக்கும் எலுமிச்சைகளில் தான் பலன்கள் அதிகமாக இருக்கும். பொதுவாக இருக்கும் கூற்றுப் படி, பெரிய எலுமிச்சைகளில் பலன்கள் குறைவு தான்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

15 Surprising Uses of Lemons You’d Never Think Of

There are infinitely more uses of lemons than you might think. If you are not in the habit of keeping these handy citrus fruits around, consider keeping a ready supply: you never know when you might need to call upon this miracle fruit. Here are some of the best-kept secret uses of lemons. You’ll never be caught without one again.
Story first published: Sunday, August 31, 2014, 11:31 [IST]