Latest Updates
-
வார ராசிபலன் (20 September 2026- 26 September 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு பணமழை கொட்டப்போகுது! -
ஹோட்டல் சுவையில் பன்னீர் சன்னா சால்னா எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
பார்லர் போகாமலே உங்க முகம் பளபளன்னு இருக்கணுமா? அப்ப காபித் தூள் வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க.. -
அசைவ உணவுக்கு இணையான சத்துக்களைக் கொண்ட சைவ உணவுகள் இதாங்க! நோட் பண்ணி வெச்சுக்கோங்க.. -
பீட்ரூட்டை இப்படி சாம்பார் செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
செவ்வாய் பெயர்ச்சியால் இன்று முதல் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
அவல் தோசையும், வேர்க்கடலை சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
செப்டம்பர் 19, 2026: இன்றைய நாள் இந்த 2 ராசிகளுக்கு ரொம்ப கவனமா வாகனம் ஓட்டணும் - ஜாக்கிரதை -
கடக ராசிக்கு சென்றுள்ள செவ்வாய்: இன்று முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணமும், சொத்துக்களும் குவியும்.. -
4 வெங்காயம் இருந்தா போதும்.. சப்பாத்திக்கு சூப்பரான சைடு டிஷ் செய்யலாம்! எப்படின்னு பாருங்க..
ஃப்ரிட்ஜில் நாற்றம் வராமலிருக்க சில ட்ரிக்ஸ்!!!

* ஃப்ரிட்ஜில் இருந்து கெட்ட நாற்றம் வருகிறதென்றால், அதில் நீண்ட நாட்களாக ஏதோ ஒரு உணவுப் பொருளை வைத்துள்ளோம என்று அர்த்தம். ஆகவே எந்த பொருளை வைத்தாலும், அந்த பொருளை எத்தனை நாட்கள் சேமித்து வைத்திருக்க முடியும் என்பதை நன்கு தெரிந்திருக்க வேண்டும். உதாரணமாக வாழைப்பழத்தை ஃப்ரிட்ஜில் ஒரு வாரம் வைத்தால், அது கெட்டுப் போக தொடங்கிவிடும். ஆகவே எந்த பொருளையும் நீண்ட நாட்கள் வைத்திருக்க வேண்டாம்.
* உணவுப் பொருளை ஃப்ரிட்ஜில் சேமிக்கும் முன், அதனை நன்கு மூட வேண்டும். இதனால் ஃப்ரிட்ஜில் எந்த ஒரு நாற்றமும் வராமல் தடுக்கலாம். எப்போதெல்லாம் நல்ல மணமுள்ள உணவுப் பொருளை ஃப்ரிட்ஜில் வைக்கும் போதும், மறக்காமல் மூடிப் போட்டு, மூடி விடவும்.
* ஃப்ரிட்ஜில் பொருட்களை வைக்கும் போது, அதற்காக கொடுக்கப்பட்டுள்ள இடத்தில் வைக்க வேண்டும். தேவையில்லாமல் எந்த பொருட்களையும் வைக்க வேண்டாம். முக்கியமாக காய்கறிகளை, காய்கறி தொட்டியில் போட வேண்டும். அதேப்போல் முட்டை, பால் பொருட்களை அதற்கான இடத்தில் வைக்க வேண்டும். இதனால் ஃப்ரிட்ஜ் சுத்தமாக இருக்கும்.
* சமையலறையில் பயன்படும் பொருட்களில் ஒன்றான பேக்கிங் சோடா, ஒரு வகையான மேஜிக் பவுடர். ஏனெனில் அது எந்த மாதிரியான கறையையும் நீக்கிவிடும். அதேப்போல் இதனை வைத்து ஃப்ரிட்ஜையும் சுத்தம் செய்யலாம். ஆகவே ஒரு கப் பேக்கிங் சோடாவை ஃப்ரிட்ஜில் இருக்கும் நீரை வெளியேற்றும் டப்பாவில் போட்டு வைத்தால், ஃப்ரிட்ஜில் இருக்கும் துர்நாற்றங்கள் போய்விடும்.
* தினமும் நம்மால் ஃப்ரிட்ஜை சுத்தம் செய்ய முடியாது, இதற்காக எப்போதுமே சுத்தம் செய்வதில்லை என்ற அர்த்தமில்லை. குறைந்தது மாதத்திற்கு ஒரு முறையாவது, சுத்தம் செய்ய வேண்டும். உங்கள் ஃப்ரிட்ஜ் பழைய மாடல் என்றால், அது தானாகவே ஐஸ் கட்டிகளை உருக்கிவிடாது. ஆகவே அப்போது நாம் தான் ஐஸ் கட்டிகளை உருக்கச் செய்ய வேண்டும்.
இவ்வாறெல்லாம் செய்து வந்தால், ஃப்ரிட்ஜ் சுத்தமாக இருப்பதோடு, எந்த நாற்றமும் இல்லாமல் இருக்கும். மேலும் வேறு ஏதாவது ஐடியா இருந்தால் பகிர்ந்து கொள்ளலாம்.



Click it and Unblock the Notifications
