Latest Updates
-
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
மரணமிலா வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது..ஆனா இதுக்கு எவ்வளவு செல்வாகும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க! -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: மார்ச் 15 முதல் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்.. -
முருங்கைக்கீரையை இந்த மாதிரி கேரளா ஸ்டைலில் தோரன் செஞ்சு சாப்பிடுங்க..சுவையாவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்..! -
1 கப் தயிர் இருந்தா.. மதியம் 5 நிமிஷத்துல இந்த குழம்பு செய்யுங்க.. ருசியாவும், வெயிலுக்கு இதமாவும் இருக்கும்..
பாகற்காயை நீங்க சமைக்குறதுக்கு முன்னாடி... இப்படி பண்ணா... சுத்தமா கசக்கவே கசக்காதாம் தெரியுமா?
பாகற்காய் கசப்பைக் குறைக்க மற்றொரு எளிய வழி, அதை உப்பு சேர்த்து மரைனேட் செய்வது. பாகற்காயின் விதைகள் மற்றும் வெளிப்புற தோலை அகற்ற வேண்டும்.
பெரும்பாலான மக்கள் விரும்பாத காய்கறியாக பாகற்காய் உள்ளது. ஆனால், இது உங்களுக்கு எண்ணற்ற ஆரோக்கிய நன்மைகளை வழங்குகிறது என்பது தெரியுமா? கசப்பு என்றாலே குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடிக்காது. கசப்பு தன்மையை கொண்ட பாகற்காயை சாப்பிடுவது, உங்களுக்கும் உங்கள் குழந்தைக்கும் மிகவும் வேதனையாக இருக்கலாம். ஆனால், இதில் பல ஆரோக்கிய நன்மைகள் நிறைந்திருப்பதால், இவற்றை நம் உணவில் சேர்த்துக்கொள்வது மிகவும் நல்லது. பாகற்காய் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது மற்றும் நீரிழிவு நோயாளிகளுக்கு கல்லீரலை நச்சுத்தன்மையாக்குவதற்கும் புற்றுநோயை எதிர்த்துப் போராடுவதற்கும் உதவுகிறது. பாகற்காய் அனைத்து வயதினரும் கண்டிப்பாக சாப்பிட வேண்டிய ஒரு காய்கறி.

உங்கள் வீட்டில் குழந்தைகள் இருந்தால், அவர்களை பாகற்காய் சாப்பிட வைப்பதில் உங்களுக்கு பெரும் சிரமம் இருந்திருக்கும். நீங்களும் அதன் கசப்பான சுவையை நினைத்து கவலையாக இருந்தால், இதன் கசப்பைக் குறைக்க சில வழிகள் இருக்கின்றன. அவை என்னென்ன வழிகள் என்று இக்கட்டுரையில் தெரிந்துகொள்ளலாம்.

தோலை கீறிக்கொள்ளுங்கள்
பாகற்காயின் கரடுமுரடான மேற்பரப்பில் அதிகபட்ச அளவு கசப்பு உள்ளது. இந்த கசப்பைக் குறைக்க, ஒரு கத்தியை எடுத்து, பாகற்காயின் தோலை கீறினால் போதும். லேயரை ஒரே சீராக அகற்ற, பீலரையும் பயன்படுத்தலாம். மேல் தோலை அகற்றிவிட்டு நீங்கள் சமைக்கும்போது, அதன் கசப்பு தன்மை அதிகமாக இருக்காது.

வெல்லத்தைப் பயன்படுத்தவும்
காய்ந்த பாகற்காய் சப்ஜியின் சுவை, வெல்லம் சேர்க்கப்படுவதால் அதிகமாக விரும்பப்படுகிறது. ஆம், வெல்லம் சப்ஜிக்கு பளபளப்பான தோற்றத்தை தருவதோடு மட்டுமல்லாமல், சுவைகளையும் சரியாக சமநிலைப்படுத்துகிறது. நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம், ஒரு துண்டு வெல்லத்தை எடுத்து, அதை தூளாக தட்டி, பாகற்காய் சப்ஜியில் சேர்க்கவும். உங்கள் சுவைக்கு ஏற்ப இனிப்பை கூட்டலாம் அல்லது குறைக்கலாம்.

டீப் ஃப்ரை
பாகற்காயை பக்கோடா செய்யப் போகிறீர்கள் என்றால், கசப்பை நீக்கும் வேலை நீங்கள் செய்யும் ரெசிபியிலே முடிந்துவிடும். ஆம், ஒரே நேரத்தில் பாகற்காயை டீப் ஃப்ரை பண்ணும்போது, அதன் கசப்புத்தன்மை நீங்கிவிடும். பின்னர், நீங்கள் செய்த பாகற்காய் டீப் ஃப்ரையில் கசப்பே இல்லாமல் தாராளமாக சாப்பிடலாம்.

விதைகளை அகற்றவும்
பாகற்காயை சமையலில் பயன்படுத்துவதற்கு முன்பு அதன் விதைகள் அகற்றப்பட்டதா என்பதை எப்போதும் உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். நீங்கள் தோட்டக்கலை விரும்பினால் அல்லது வீட்டில் சமையலறை தோட்டம் இருந்தால், இந்த விதைகளைப் பயன்படுத்தி பாகற்காய் கொடிகளை நீங்கள் வளர்க்கலாம். இதன் விதைகளை சமையலில் இருந்து அகற்றும்போது, அதன் கசப்புத்தன்மை குறையும்.

உப்பு மரைனேட்
பாகற்காய் கசப்பைக் குறைக்க மற்றொரு எளிய வழி, அதை உப்பு சேர்த்து மரைனேட் செய்வது. பாகற்காயின் விதைகள் மற்றும் வெளிப்புற தோலை அகற்ற வேண்டும். இப்போது அதன் மீது தாராளமாக உப்பைத் தூவி, பாகற்காய் முழுவதும் தேய்க்கவும். அனைத்து பாகற்காய்களிலும் படும்வரை நன்றாக தேய்க்கவும். அவற்றை ஒரு கிண்ணத்தில் சேமித்து வைத்து 30 நிமிடங்கள் அப்படியேவிட்டுவிடுங்கள். இப்போது பாகற்காயை தண்ணீரில் கழுவி உலர வைக்கவும். நீங்கள் இப்போது அவற்றை நறுக்கி எந்த சமையலில் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்.

ஊறவைக்கும் முறை
ஒரு பாத்திரத்தில், ½ கப் தண்ணீர், ½ கப் வினிகர் மற்றும் 2 டீஸ்பூன் சர்க்கரை சேர்க்கவும். நறுக்கிய பாகற்காய் துண்டுகளை கலவையில் ஊற வைக்கவும். அவற்றை குறைந்தது 20-30 நிமிடங்கள் அந்த கலவையில் ஊற வைக்கவும். இப்போது தண்ணீரை வடிகட்டி, பாகற்காயை மீண்டும் வேறு தண்ணீரில் கழுவவும். இப்போது இதை நீங்கள் சமையலுக்கு பயன்படுத்தலாம். இப்படி செய்யும்போது, பாகற்காயில் உள்ள கசப்புத்தன்மை குறைந்துவிடும்.

பிளான்சிங்
ஒரு பாத்திரத்தில் 2-3 கப் தண்ணீரை கொதிக்க வைக்கவும். அதில் 1 டீஸ்பூன் உப்பு சேர்க்கவும். தண்ணீர் கொதித்ததும், அதில் நறுக்கிய பாகற்காயை சேர்க்கவும். அதிக தீயில் 2 நிமிடம் வேகவைத்து பின் பாகற்காயை எடுக்கவும். அதைத்தொடர்ந்து, 2 நிமிடங்களுக்கு உடனடியாக குளிர்ந்த நீருக்கு பாகற்காயை மாற்ற வேண்டும். இப்போது அனைத்து தண்ணீரையும் வடிகட்டவும். இப்பொது, தன் கசப்பு தன்மையை இழந்து சமையலுக்கு பயன்படுத்த பாகற்காய் தயாராக உள்ளது.



Click it and Unblock the Notifications











