இதுமாதிரி உங்க வீட்லயும் எலி கொக்கரிக்குதா?... இத செய்ங்க... உடனே க்ளோஸ் ஆயிடும்...

Posted By: Vivek Sivanandam
Subscribe to Boldsky

மிக கோரமாகவும், அசுத்தமாகவும் இருக்கும் எலிகளை உங்கள் வீட்டின் உள்ளேயும் வெளியேயும் எப்போதும் காணலாம். அவை உயிர்வாழ, உறைவிடம், தண்ணீர் மற்றும் போதுமான உணவு தேவை. இம்மூன்றையும் உங்கள் வீடு வழங்குமேயானால், அவற்றை அவ்வளவு எளிதில் விரட்டிவிட முடியாது. எலிகள் மற்றும் அவற்றின் குட்டி உறவினரான சுண்டெலிகளுக்கும் குப்பைகள், உரங்கள், செல்லப்பிராணிகளின் உணவுகள், கீழே சிந்திய உணவுகள் என்றால் அவ்வளவு பிரியம்.

home tips

மேலும், 20 வகையான நோய்களை பரப்பக்கூடிய இவை உண்மையிலேயே மிகவும் ஆபத்தானவை. என்னதான் வீட்டை மிக கவனமாக பராமரித்து வந்தாலும், எப்படியாவது வழியை கண்டறிந்து நுழைந்துவிடும். சமையல்அறை போன்ற வீட்டின் முக்கிய பகுதிகளை எலிகளை காணும் போது எப்படி இவற்றை விரட்டலாம் என தலையை பிய்த்துக்கொள்பவர்கள் பலர். கவலை வேண்டாம், அதற்கான வழியை நாங்கள் கூறுகிறோம். வீட்டிலிருக்கும் பொருட்களை வைத்தே எலிகளை கண்காணாத தூரத்திற்கு துரத்தும் வழிகள் இதோ..

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
1. நாப்தலின் பந்துகள் (Moth Balls)

1. நாப்தலின் பந்துகள் (Moth Balls)

நாப்தலின் உருண்டைகள் என பரவலாக அறியப்படும் இவை, எலிகளை விரட்டும் வல்லமை கொண்டவை. சந்தையில் எளிதில் கிடைக்கும் இதை சுலமமாக கையாளலாம். எலிகளின் நடமாட்டம் அதிகம் உள்ள இடத்தில் நாப்தா பந்துகளை வைத்தால் போதுமானது.

குறிப்பு: இவை மனிதர்களுக்கு தீங்குவிளைவிக்கும் என்பதால் வீட்டிற்குள் பயன்படுத்துவதை தவிர்க்கவும். மேலும் வெறும் கைகளால் தொடக்கூடாது.

2. அமோனியா (Ammonia)

2. அமோனியா (Ammonia)

2ஸ்பூன் சோப்பவுடர், கால் டம்ளர் தண்ணீர் மற்றும் 2 கப் அம்மோனியாவை ஒரு கிண்ணத்தில் கலக்கவும். பின்னர் அதை எலிகள் அதிகமாக தென்படும் இடத்தில் வைக்கவும். அம்மோனியாவின் வாடையை எலிகள் தாக்கு பிடிக்கமுடியாது என்பதால் எலிகளை விரட்ட சிறந்த வழிகளில் இதுவும் ஒன்று.

3. பெப்பர்மிண்ட் ஆயில் (Peppermint oil)

3. பெப்பர்மிண்ட் ஆயில் (Peppermint oil)

மிளகுஎண்ணெயின் காரமான மணம், எலிகளால் தாங்க இயலாது என்பதால் அவற்றை தடுக்கலாம். இந்த எண்ணெயை பஞ்சில் நனைத்து எலிகள் அதிகம் உள்ள பகுதியில் வைப்பது போதுமானது. கண்டிப்பாக இது எலிகளின் தொல்லையை குறைக்கும்.

மாற்றாக, சிட்ரோநெல்லா அல்லது நல்லெண்ணையும் பயன்படுத்தலாம் அல்லது புதினா செடிகளை எலிகள் அதிகமுள்ள பகுதிகளில் வளர்க்கலாம்.

4. ஆந்தையின் இறகுகள் (Owl's feather)

4. ஆந்தையின் இறகுகள் (Owl's feather)

ஆந்தையின் இறகுகள் எலிகளை பயமுறுத்தி தெறித்து ஓடவிடும். எலிபொந்துகளில் சில ஆந்தை இறகுகளை வைத்து பாருங்கள்.

ஆந்தை இறகுகள் கிடைக்கவில்லை என்றால் மாற்றாக, எலிகள் அதிகம் உலாவும் தோட்டப்பகுதிகளில் பிளாஸ்டிக் பாம்புகளை வைத்தும் விரட்டலாம்.

5. மிளகு (Pepper)

5. மிளகு (Pepper)

மிகவும் கார்ப்பாக இருக்கும் மிளகின் நறுமணம், எலிகள் சுவாசிப்பதை கடினமாக்கி உயிர்பயம் காட்டிவிடும். மிளகை தூளாக்கி மூலைகளிலும், எலிவலையிலும் தூவி விட்டால் போதுமானது.

6. இலவங்க இலை (Bay leaf)

6. இலவங்க இலை (Bay leaf)

இந்த இலைகளை தங்கள் உணவு என நினைத்து எலிகள் உண்ணும் ஆனால் உண்மையில் இது அவற்றை கொல்லும். எலி தொல்லை தீரும் வரையில் அவற்றை அங்கே போட்டு வரலாம்.

7. வெங்காயம் (Onions)

7. வெங்காயம் (Onions)

இயற்கையான முறையில் எலிகளை விரட்ட இதுவே சிறந்த வழி. வெங்காயத்தின் மணம் எலிகளுக்கு அருவெறுப்பை தரக்கூடியது. எனவே, வெங்காயத்தை நறுக்கி எலிவலையில் வைத்துவிட்டால் போதும்.

8. எலிப்பொறி

8. எலிப்பொறி

விரைவாக எலிகளை விரட்ட எலிப்பொறிகள் தான் சிறந்த வழி. முதலில் பொறியில் எலிகளை கவரும் வகையில் பொருட்களை வைத்து ஆசையை தூண்ட வேண்டும். வேர்கடலை வெண்ணெய் மற்றும் பாலாடைக்கட்டி அதற்கு மிகவும் பிடித்தமான ஒன்று. அதை உண்ண வரும்போது பொறியில் சிக்கும் எலிகளை தூரத்தில் கொண்டு சென்று விட்டுவிடலாம்.

குறிப்பு: வெண்ணெயுடன் போரிக் அமிலத்தை சேர்த்தால் நன்றாக வேலை செய்யும். ஆனால் கையுறை அணிந்துகொள்வது அவசியம்.

9. பாம்பு அல்லது பூனையின் காய்ந்த கழிவுகள்

9. பாம்பு அல்லது பூனையின் காய்ந்த கழிவுகள்

இவை செல்லப்பிராணிகளின் கடை அல்லது உயிரியல் பூங்காக்களில் கிடைக்கும். இவற்றை எலிவலையின் அருகில் வைக்கும் போது, பாம்பு மீதான பயத்தில் எலிகள் வராது. மாற்றாக பூனைக் கழிவுகளையும் பயன்படுத்தலாம். ஆனால் எலிகளுக்கு டாக்ஸோப்ளாஸ்மாசிஸ் நோய் இருந்தால், பூனைகளும், அவற்றின் கழிவுகளும் எலிகளை கவரும்.

குறிப்பு: செல்லப்பிராணிகள் மற்றும் குழந்தைகளின் கைகளுக்கு எட்டாதவாறு வைக்கவும்.

10. மனித முடி

10. மனித முடி

இது விசித்திரமாக தோன்றினாலும், எலிகளுக்கு மனிதர்களின் முடி ஆகாத ஒன்று என்பதால் பயனுள்ள ஒன்று. எலிவலையின் அருகில் நம்முடைய உதிரும் தலைமுடியை வைத்துவிட்டால், அவற்றை உண்டு எலிகள் இறந்துவிடும்.

11. மாட்டுச் சாணம்

11. மாட்டுச் சாணம்

இது துர்நாற்றமான செயல் என்றாலும் எலிகளை விரட்ட மிகவும் சிறந்த வழி. மாட்டுச்சாணத்தை தோட்டத்தில் எலிவலைகளின் அருகில் வைத்துவிட்டால், அவற்றை உண்ட எலிகள் வயிறு கருகி இறந்துவிடும்.

12. அதிக ஒலி/சத்தம்

12. அதிக ஒலி/சத்தம்

அதிக ஒலி அவற்றை துன்புறுத்துவது மட்டுமின்றி காதுகளில் ரத்தம் வழியச்செய்யும். எனவே அதிக சத்தம் செய்யும் ஒலிப்பெருக்கிகள் மட்டுமே எலிகளை விரட்ட போதுமானது.

13. பேபி பவுடர்

13. பேபி பவுடர்

இந்த முறை அவ்வளவு பயனுள்ளதாக இல்லாவிட்டாலும் ஒருமுறை முயற்சித்து பார்க்கலாம். எலிகள் அதிகவும் உலவும் பகுதிகளில் இந்த பவுடரை தூவி விட்டால் , எலிகளை வெறுப்பூட்டி ஓடவிடும்.

14. இரும்பினாலான கம்பளி (Steel wool)

14. இரும்பினாலான கம்பளி (Steel wool)

சுவற்றில் சுற்றும் எலிகளை விரட்டவேண்டுமா? இரும்பு கம்பளிகளை கொண்டு தடுப்புகளை அமையுங்கள். அவற்றை எலிகளால் கொறிக்க முடியாது. எனவே, எலிவலையை இதைக்கொண்டு மூடலாம்.

15. செய்யக்கூடியவை

15. செய்யக்கூடியவை

° வீடு மற்றும் பரணை எப்போதும் சுத்தமாக வையுங்கள்

° எலிகளின் சாத்தியமான அனைத்து வழிகளையும் அடையுங்கள்

° குப்பைத்தொட்டிகளை சுத்தமாக பராமரித்து மூடி போட்டு வையுங்கள்

° சொந்தமாக பூனை வளர்க்கலாம்

° மீதமான, சிந்திய உணவுப்பொருட்களை சுத்தம் செய்யுங்கள்

° எலிகளை கண்டால், உடனை அந்த இடத்தை சோப் போட்டு கழுவுங்கள். இது உங்கள் குடும்பத்திற்கு வரும் நோய்களை தடுக்கும்.

° பூந்தொட்டி அல்லது பிறவற்றில் தேங்கும் தண்ணீரை சுத்தம் செய்யுங்கள்

° தோட்டத்தில் உள்ள பெரிய/நீண்ட புதர் மற்றும் களைகளை வெட்டிவிடுங்கள்

16. செய்யக்கூடாதவை

16. செய்யக்கூடாதவை

°உணவுப்பொருட்களை அங்கும் இங்கும் சிதற விடாதீர்கள்

°உணவை மூடி வைக்காமல் அப்படியே விடாதீர்கள்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
Read more about: kitchen tips
English summary

Effective Home Remedies to Get Rid of Rats

Rats are horrible, dirty rodents that can be found in and outside the house. For survival, rats require shelter, water, and enough food.