முட்டை 1 வருடம் கெடாமல் இருக்கனுமா? இப்படி ட்ரை பண்ணுங்க!!

Posted By: Ambika Saravanan
Subscribe to Boldsky

இந்த காலத்தில் எல்லோருடைய வீட்டிலும் ப்ரிட்ஜ் உள்ளது. காய்கறிகள், பழங்கள் ,பால், மாவு, மீதமாகும் உணவுகள் என்று எல்லா பொருட்களையும் நமது வீட்டின் ப்ரிட்ஜில் பார்க்கலாம். குறிப்பாக அதில் இருக்கும் பிரீசர் பால், இறைச்சி போன்ற பொருட்களை பதப்படுத்த பயன்படுகிறது.

Foods to keep in the freezer to preserve

அடிக்கடி எடுக்கும் பொருட்களை பிரிட்ஜில் வைக்கலாம். எப்போதாவது எடுக்கும் பொருட்களை ப்ரீசரில் வைக்கலாம். ப்ரீஸரை அடிக்கடி திறந்து மூடும்போது ஈரப்பதம் அதிகரித்து தூய்மை கேடு ஏற்படும் வாய்ப்புகள் தோன்றும்.

எந்தெந்த உணவுகளை பிரிட்ஜ் அல்லது ப்ரீசரில் வைப்பது நல்லது என்பது பலருக்கும் தெரியாது.இந்த பதிவில், ப்ரீசரில் வைக்க வேண்டிய சில உணவு வகைகளை பற்றி பார்ப்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
நட்ஸ்:

நட்ஸ்:

நட்ஸில் எண்ணெய் அதிகம் இருப்பதால், அதனை வெளியில் வைக்கும்போது ஒரு வாரத்திற்குள், அதில் எண்ணெய் வாசனை வந்துவிடும். அதன்பிறகு அதனை உண்ணும்போது ஒரு வித துர்நாற்றம் வீசும்.

அதனை ப்ரீசரில் வைக்கும்போது இந்த எண்ணெய் வாசனை வாராமல் தடுக்கலாம்.வேண்டிய அளவை பிரிட்ஜில் வைத்து, மீதம் உள்ளதை ஒரு பிளாஸ்டிக் கவரில் போட்டு ப்ரீசரில் வைக்கலாம்.

அதிகம் கனிந்த வாழைப்பழம்:

அதிகம் கனிந்த வாழைப்பழம்:

வாழைப்பழம் அதிகமாக கனிந்து விட்டால் கவலை வேண்டாம். வாழை பழத்தை தோல் உரித்து விட்டு, சிறிய துண்டுகளாக வெட்டி, ஒன்றோடு மற்றொன்று ஒட்டாமல் ஒரு கவரில் போட்டு ப்ரீசரில் வைக்கலாம்.

தோலோடு வைக்கும்போது பிரீஸ் ஆனவுடன் உரிப்பதற்கு சிரமமாக இருக்கும். விரும்பும்போது அதனை எடுத்து மில்க்ஷேக் அல்லது வேறு வகை இனிப்புகள் செய்யும் போது பயன்படுத்திக்கொள்ளலாம்.

முட்டை:

முட்டை:

நம் ஊரில் முட்டையின் விலை நாளுக்கு நாள் ஏறிக் கொண்டே இருக்கும். முட்டையின் விலை குறைவாக இருக்கும்போது நிறைய முட்டைகள் வாங்கி ப்ரீசரில் வைத்துக் கொள்ளலாம். முட்டையை முழுதாக அப்படியே வைக்க கூடாது. அதிக குளிர்ச்சியால் ஓடுகள் விரிசல் ஏற்பட்டு உடைய நேரிடும்.

ஆகவே முட்டையை உடைத்து ஒரு கிண்ணத்தில் ஊற்றி கொள்ளவும். சிறிதளவு உப்பு சேர்த்து , ஒரு கவரில் ஊற்றி கவரை சீல் செய்யவும். ஒரு முறை தேவைப்படும் அளவு முட்டைகளை , உடைத்து உப்பு சேர்த்து ,ஒரே கவரில் ஊற்றி ப்ரீசரில் வைக்கலாம். கவரில் காற்றை முழுவதுமாக நீக்கி விட வேண்டும். இப்படி செய்யும்போது முட்டைகள் 1 வருடம் கெடாமல் இருக்கும்.

சாதம்:

சாதம்:

சாதத்தை பிரீஸரில் பதப்படுத்தி, பின்பு அதனை மறுமுறை சூடு செய்து சாப்பிடும்போது அதன் சுவை அதிகமாக இருக்கும் என்று ஜப்பானியர்கள் கூறுகின்றனர். இந்த கருத்தை பலரும் ஆமோதிக்கின்றனர். பதப்படுத்திய சாதம் சிறிதளவு கடினத்தன்மையுடன் இருப்பதை அறியலாம்.

எப்போதுமே சாதம் அதிகமானால் , அதனை ப்ரிட்ஜில் வைப்பதற்கு பதில் ப்ரீசரில் வைத்து பாருங்கள். ஒரு ஏர் டைட் பாத்திரம் அல்லது ரீ - சீல் பாக்கெட்டில் போட்டு இறுக்கமாக மூடி ப்ரீசரில் வைக்கவும். தேவைப்படும்போது, அதனை எடுத்து, சிறிது தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்தும் சூடு பண்ணலாம் மைக்ரோவேவில் வைத்தும் சூடு பண்ணலாம்.

பூண்டு, வெங்காயம்:

பூண்டு, வெங்காயம்:

வெங்காயம் , பூண்டு போன்றவை நமது தினசரி சமையலில் இடம்பெற கூடிய பொருட்கள். இவற்றை நாம் முன்கூட்டியே தோல் உரித்து அறிந்து ஒரு பிளாஸ்டிக் கவரில் வைத்து ப்ரீசரில் வைத்துக் கொள்ளும்போது அவசர நேரத்தில் உதவியாக இருக்கும்.

இதனை சில மணி நேரம் முன்பே வெளியில் எடுத்து வைத்து சமைக்க வேண்டும் என்பதில்லை. தேவைப்படும் நேரத்தில் நேரடியாக சமைக்கும் பொருளில் சேர்த்துக் கொள்ளலாம்.

என்ன வாசகர்களே! இந்த பதிவு உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறோம். நமது தினசரி பயன்பாடுகளில் ஒன்றான ப்ரீசரில் வைக்க வேண்டிய பொருட்களை பற்றி தெரிந்து கொண்டு பயனடைவோம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Foods to keep in the freezer to preserve

Foods to keep in the freezer to avoid spoilage
Story first published: Wednesday, October 4, 2017, 11:14 [IST]