For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வேக்யூம் கிளீனர்களின் நன்மை மற்றும் தீமைகள்!!!

By Super
|

முன்பெல்லாம் வேக்யூம் கிளீனர்கள் மிகவும் பெரிதாகவும், இரண்டு பேர் சேர்ந்து தூக்கும் பலுவுடனும் இருந்ததால், அதனை கொண்டு வீட்டில் உள்ள மூலை முடுக்குகளில் சுத்தம் செய்வது கடினமாக இருந்தது. ஆனால் இன்றைய காலகட்டத்தில், விஞ்ஞான முறையில் சுலபமாக பயன்படுத்தும் வகையில் வேக்யூம் கிளீனர்களை கண்டுபிடித்துள்ளனர்.

ஆகவே அத்தகைய வேக்யூம் கிளீனரை வாங்க எண்ணுபவர்கள், அதனை தேர்ந்தெடுக்கும் போது, வீட்டில் உள்ள தரை, பட்ஜெட் போன்றவற்றை கருத்தில் கொண்டு செயல்பட வேண்டும். குறிப்பாக வேக்யூம் கிளீனர் வாங்கும் போது, உலோகம் அல்லது நீடித்த பிளாஸ்டிக் பாகங்கள் கொண்டு நன்றாக செய்த வேக்யூம் க்ளீனரை வாங்க வேண்டும். இப்போது வெரைட்டியான வேக்யூம் கிளீனரையும், அதன் நன்மை தீமைகளையும் பார்ப்போம்.

Vacuum Cleaners: Advantages & Disadvantages

குப்பி வேக்யூம் கிளீனர்: (Canister Vacuums)

இந்த வகை வேக்யூம் கிளீனர்கள், நிமிர்ந்த வகை வேக்யூம் கிளீனர்களை விட சிறந்தது. நீண்ட உலோக குழாய்களை கொண்ட குப்பி வேக்யூம் கிளீனர்கள் மாடிப்படி, ஜன்னல் கதவு மூலைகள், தொங்கும் திரைகள், மேஜைகள் மற்றும் படுக்கைகளின் கீழ் உள்ள அடைப்புகளில் என எல்லா இடங்களிலும் உள்ள தூசிகளை வெளியேற்ற உதவும். சில குப்பி மாதிரிகள், கடினமான மரக்கட்டைகளால் செய்யப்பட கட்டில், சோபா போன்ற கடின மேற்பரப்பு அமைப்பை சுத்தம் செய்கையில், நீண்ட பட்டியை அடைத்து காற்றால் உறிஞ்ச கூடிய முறையை உபயோகித்தது தான் இதன் சிறப்பு அம்சம். மேலும் இந்த குப்பி மாதிரிகளில் உள்ள தீமை என்னவெனில், இவற்றில் சிறிய ஒரு தூசி பைகள் உள்ளது. அவற்றை அடிக்கடி எடுத்து சுத்தம் செய்து, பின் உபயோகிப்பது தான்.

நிமிர்ந்த வேக்யூம் கிளீனர்: (Upright Vacuums)

இந்த வகை மாதிரிகள் ரூபாய் 5000-50,000 வரை உள்ளது. இவை எடை குறைவாக இருப்பதால் சுத்தம் செய்ய எளிதாக இருக்கும். வீட்டில் போடப்பட்டிருக்கும் கம்பளங்களை நன்கு சுத்தம் செய்ய பயன்படுகிறது. படிகள் மற்றும் அதனை சுற்றியுள்ள அமைப்புகளுக்கென தனி தனியே பிரஷ்கள் இதனுடன் அளிக்கப்படுகிறது. இந்த இயந்திரத்தில் பொதுவாக குப்பை சேகரிக்கும் பைகள் இல்லை. இதற்கு மாறாக சுழலும் தூரிகை முறையில் குப்பையை உறிஞ்சி, அதனை ஒரு கோப்பையில் சேகரிப்பதாக அமைந்துள்ளது. இந்த இயந்திரம் சுத்தம் செய்யும் முறைகளில் வேறுபட்டு, சில நேரம் உறிஞ்சும் தன்மையை இழக்கும். இதன் குழாய்களும் சிறிதாக இருப்பதால் இவை கடினமான கம்பளம், மர பொருள்களை சுத்தம் செய்ய இயலாது.

ரோபோடிக் கிளீனர்: (Robotic Vacuums)

ரோபோடிக் க்ளீனர்கள் நன்றாகவும், சுத்தமாகவும் வேலையை எளிதில் செய்யும். இதனை தரையில் பொருத்தி, பட்டனை அழுத்திவிட்டால் தானாக சுத்தம் செய்ய ஆரம்பித்து விடும். இந்த மாதிரிகள் ருபாய் 50,000 விலையில் விற்கப்படுகிறது. இவற்றில் பொருத்தப்பட்டிருக்கும் சுற்றும் பிரஷ்கள் விரைவில் தூசியை சேகரித்து கோப்பையில் சேகரிக்கும். மேலும் இவற்றில் உறிஞ்சும் முறை இல்லை. இவை கம்பளம், மர பொருள்களை எளிதாக சுத்தம் செய்ய உதவுகிறது.

உலர்/ஈரமான வேக்யூம் கிளீனர்: (Wet/Dry Vacuums)

ஈரமான அல்லது உலர் வெற்றிடங்களை சுத்தம் செய்ய இந்த வகை வேக்யூம் கிளீனர்கள் உபயோகிக்கப்படுகிறது. ஈரமான இடங்களிலும், கடினமான இடங்களிலும் இதனை கையாளலாம். இதில் குப்பை பைகள் இல்லை, மாறாக பெரிய குப்பிகள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த மாதிரிகள் பை அல்லது முத்திரை கொண்டு இல்லாததாலும், அளவு பெரியதாகவும் உள்ளதாலும், இதனை வீட்டில் வைத்து கொள்ள இயலாது. பெரும்பாலும் இவை கடைகள் மற்றும் கேரேஜ் பயன்பாட்டிற்குத் தான் உபயோகப்படும்.

English summary

Vacuum Cleaners: Advantages & Disadvantages | வேக்யூம் கிளீனர்களின் நன்மை மற்றும் தீமைகள்!!!

When choosing a vacuum, consider your budget and the flooring in your house as well as the amount of traffic and wear your floors receive. Buy well-made vacuums with metal or durable plastic parts.
Desktop Bottom Promotion