For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

எறும்புகளிடமிருந்து தேனை பாதுகாக்க சில டிப்ஸ்...

By Maha
|

தேன் உடலுக்கு மிகவும் நல்லது. அத்தகைய தேன் நிச்சயம் அனைவரது வீட்டிலும் இருக்கும். ஆனால் அதை பயன்படுத்தும் போது, சில நாட்களில் அதன் வாசனைக்கு எறும்புகள் வந்துவிடும். இதனால் தேனை நிம்மதியாக சாப்பிட முடியாத நிலை ஏற்படும். என்ன தான் தேன் பாட்டிலை பயன்படுத்தியப் பின் சற்று நேரம் அதனை மூடாமல் சாதாரணமாக விட்டாலும், எறும்புகள் அதன வாசனையை கண்டறிந்து, நமக்கு அதிக தொந்தரவையும், வேலையையும் தரும்.

இப்போது திறந்திருக்கும் தேன் பாட்டிலை எறும்புகளிடமிருந்து எவ்வாறெல்லாம் பாதுகாக்கலாம் என்று உங்களுக்காக மிகவும் எளிதான மற்றும் உறுதியான வழிமுறைகளை பட்டியலிட்டுள்ளோம். அதைப் படித்து தெரிந்து கொண்டு, உங்கள் வீட்டு தேன் பாட்டிலை எறும்புகளிடமிருந்து பாதுகாத்துக் கொள்ளுங்கள்.

How to Keep Ants out of Honey

எறும்புகளிடமிருந்து தேனை பாதுகாக்க சில டிப்ஸ்...

1. ஒரு தட்டை எடுத்து, அதில் தண்ணீரை விளிம்பு வரை நிரப்புங்கள், பிறகு தண்ணீரின் நடுவில் தேன் இருக்கும் ஜாடியை வைக்க வேண்டும். எறும்புகளால் தண்ணீரை கடக்க முடியாது, எனவே, எறும்புகளின் படையெடுப்பு இங்கு உடனடியாக தடுக்கப்படும்.

2. தேன், ஜாடியின் ஓரங்களில் சிந்தாதவாறு இருக்க பொறுமையாக கையாள வேண்டும்.

3. ஒரு எறும்பு சாக்பீஸை எடுத்து தேன் இருக்கும் ஜாடியைச் சுற்றிலும் வட்டத்தை வரையவும். இதனால் எறும்புகள் வராமல் தடுக்கலாம். ஏனெனில் இயற்கையாவவே சாக்கட்டியின் அருகில் எறும்புகள் வருவதில்லை. எனவே இது பாதுகாப்பினை அதிகரித்திடும்.

4. பொதுவாக தேனை பயன்படுத்தாத போது, ஜாடியை மூடி வைக்க வேண்டும். அவ்வாறு செய்தால் தேனின் முழுமையான பாதுகாப்பானது உறுதியாக இருக்கும். இதனால் தேன் துளிகள் ஜாடியின் ஓரங்களில் இருந்தாலும், எறும்புகள் அதனுள் நுழைவதை தடுக்கலாம்.

குறிப்பு:

* தட்டில் உள்ள தண்ணீர் ஆவியாகி விட்டதா இல்லையா என்பதை அவ்வப்போது கவனித்து வர வேண்டும்.

* ஒருவேளை ஜாடியின் மூடி நிரந்தரமாக தொலைந்து போயிருந்தால், அப்போது மூடி கிடைக்கும் வரை, இந்த தண்ணீர் தட்டில் வைக்கும் முறை சிறந்ததாக இருக்கும். இல்லையெனில் சீக்கிரமாகவே வேறு ஒரு மூடியை கண்டறிந்து பதார்த்தத்தை பாதுகாத்தல் நல்லது.

English summary

How to Keep Ants out of Honey | எறும்புகளிடமிருந்து தேனை பாதுகாக்க சில டிப்ஸ்...

While the lid's off the honey for dining or cooking purposes, you don't want the ants to discover a sweet treat and start spoiling things. This article shows how to make use of a very simple yet very effective method for protecting the honey while the lid is off
Desktop Bottom Promotion