Latest Updates
-
திருநெல்வேலி ஸ்டைல் பொரிச்ச குழம்பு ரெசிபி - இந்த மாதிரி குழம்பு வைச்சு பாருங்க - டக்கரா இருக்கும் -
புதாதித்ய ராஜயோகம்: இன்று முதல் அடுத்த 10 நாட்கள் இந்த 6 ராசிக்கு பணம் கொட்டும்.. தொழில் செழிக்கும்.. -
புரட்டாசி மாதம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு புது வாழ்க்கை கிடைக்கும் அதிர்ஷ்ட மாதமாக இருக்கப்போகுதாம் -
1 பாக்கெட் சேமியா இருந்தா.. காலையில் இந்த டிபனை செய்யுங்க.. டேஸ்ட் அல்டிமேட்டா இருக்கும்.. -
செப்டம்பர் 18,, 2026: இன்றைய நாள் இந்த 4 ராசிகளுக்கு ஆபத்துகள் சூழும் கடினமான நாளாக இருக்குமாம் -
சனி-சூரியன் உருவாக்கிய சமசப்தம யோகம்: இன்று முதல் அடுத்த 30 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்! -
விநாயகர் சதுர்த்திக்கு வாங்குன விளாங்காய் இருக்கா? அப்ப இப்படி சட்னி செய்யுங்க.. தோசைக்கு அள்ளும்.. -
உங்க வாயைச் சுற்றி ரொம்ப கருப்பா இருக்குதா? அப்ப இந்த 7 ஃபேஸ் பேக்குகளை ட்ரை பண்ணி பாருங்க.. -
குழம்பு மிளகாய் பொடி இப்படி அரைச்சு வெச்சுக்கோங்க.. சைவம், அசைவம்-ன்னு எல்லாத்துக்கும் யூஸ் பண்ணலாம்.. -
காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டிய டாப் 15 உணவுகள்!
வெள்ளை சாக்ஸை பளிச்சுன்னு புதிது போல மாத்தணுமா? இதோ லாண்டரி கடையின் ரகசியம்!
How To Wash White Clothes In Tamil: முன்பெல்லாம் துணியை துவைப்பது என்பது மிகவும் கடினமாக இருக்கும். ஆனால் தற்போது அந்த வேலையை சுலபமாக்கும் வகையில் வாஷிங் மெஷின் வந்துவிட்டது. என்ன தான் வாஷிங் மெஷின் இருந்தாலும், அதில் வெள்ளை துணிகளை போட்டால் நாம் நினைப்பது போன்று அழுக்குகளும், கறைகளும் முழுமையாக நீங்கி புத்தம் புதிது போன்று பளிசென்று ஜொலிப்பதில்லை. மாறாக, அதில் உள்ள வியர்வை நாற்றம் மட்டுமே போகிறது.
இதனால் நிறைய பேர் வெள்ளை நிற ஆடைகளை மட்டும் கைகளில் துவைப்பார்கள். இருந்தாலும் என்ன தான் சோப்பு பயன்படுத்தி, பல மணிநேரம் சோப்பு நீரில் ஊற வைத்து பிரஷ் போட்டு கை வலிக்க தேய்த்தாலும், வெள்ளை நிற ஆடைகளில் உள்ள கறைகள் நீங்காமல் அப்படியே இருக்கும். உங்கள் வீட்டிலும் இந்த நிலைமை தானா?

அதுவும் உங்கள் பிள்ளைகள் வெள்ளை நிற பள்ளி சீருடை மற்றும் சாக்ஸ்களை கருப்பு நிறத்தில் மாற்றி கொண்டு வருவார்களா? அதைப் பார்க்கும் போது உங்கள் கண்களில் இருந்து இரத்தக்கண்ணீர் வருமா? அப்படியானால் இக்கட்டுரை உங்களுக்கானது தான். நிச்சயம் இக்கட்டுரை உங்களுக்கு ஒரு நல்ல தீர்வைத் தரும்.
பொதுவாக பெரும்பாலானோர் வெள்ளை நிற ஆடைகளை மட்டும் துவைக்க லாண்டரியில் நிறைய பேர் போடுவார்கள். ஏனெனில் நாம் என்ன தான் கைகளில் நன்கு சோப்பு கொண்டு தேய்த்து துவைத்தாலும், அந்த கறை நீங்காது. அதுவே லாண்டரியில் போட்டால், வெள்ளை நிற ஆடைகள் புதிது போன்று ஜொலிக்கும். இப்படி லாண்டரியில் போடும் வெள்ளை நிற துணி மட்டும் எப்படி வெள்ளையாகிறது என்று பலரும் யோசிக்கலாம்.
கீழே வெள்ளை நிற துணிகளைத் துவைக்க லாண்டரியில் பின்பற்றப்படும் ஒரு ரகசியம் உங்களுக்காக கொடுக்கப்பட்டுள்ளது. இதை தெரிந்து வைத்துக் கொண்டால், உங்கள் வீட்டு வெள்ளை நிற ஆடைகளும் புதிது போன்று ஜொலிக்கத் தொடங்கிவிடும். இது தவிர வேறு சில வழிகளும் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
வழி #1
* கறைப் படிந்த சாக்ஸை வெள்ளையாக மாற்ற சுடுநீரை எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதில் 1 டேபிள் ஸ்பூன் பேக்கிங் சோடாவை சேர்த்துக் கொள்ள வேண்டும்.
* அதன் பின் அதில் 2 டேபிள் ஸ்பூன் வெள்ளை வினிகரை சேர்க்க வேண்டும்.
* பிறகு அதில் 1 டேபிள் ஸ்பூன் வாஷிங் பவுடர் அல்லது லிக்விட் மற்றும் 1 டேபிள் ஸ்பூன் உப்பு சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
* பின்பு அதில் கறைப்படிந்த சாக்ஸை சேர்த்து 2 மணிநேரம் ஊற வைக்க வேண்டும்.
* 2 மணிநேரம் கழித்து சாக்ஸை துவைத்தால், சாக்ஸில் உள்ள கறை எளிதில் நீங்குவதைக் காணலாம்.
வழி #2
* ஒரு பாக்கெட்டில் பாதி நீரை நிரப்பி, அதில் டிடர்ஜெண்ட் பவுடர் மற்றும் சோப்பு ஆயிலை சேர்க்க வேண்டும்.
* பின் அதில் சிறிது பேக்கிங் சோடா, 3 மூடி ஹைட்ரஜன் பெராக்ஸைடு சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
* பின்பு அதில் மெஷினில் துவைக்க போகும் வெள்ளை துணிகளை போட்டு 1/2 மணிநேரம் ஊற வைக்க வேண்டும்.
* 1/2 மணிநேரம் கழித்து, ஊற வைத்த துணியை மட்டும் நீரை பிழிந்துவிட்டு, வாஷிங் மெஷினில் சேர்த்து, வழக்கம் போல துணியை துவைக்க வேண்டும்.
* இப்படி செய்யும் போது வெள்ளை துணிகளில் உள்ள கறைகள் நீங்கி புதிது போன்று மின்னும்.
லாண்டரி கடை ரகசியம்:
ஸ்டெப் #1
முதலில் வெள்ளை நிற துணிகளை வழக்கமாக சோப்பு நீரில் ஊற வைப்பது போன்று ஊற வைத்துக் கொள்ள வேண்டும். பின் அந்த துணிகளை எப்போதும் போன்று கைகளால் நன்கு கசக்கி தேய்த்து துவைக்க வேண்டும். அப்படி துவைக்கும் போது கறை போகாமல் இருந்தாலும் தேய்த்து துவைக்க வேண்டும்.
ஸ்டெப் #2
* ஒரு பக்கெட்டில் நீரை எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதன் மேல் ஒரு துணியை விரித்து, 10 வெள்ளை துணியை துவைக்க போகிறீர்கள் என்றால், 100 கிராம் ப்ளீச்சிங் பவுடரை போட்டு, நீரில் கரைத்துக் கொள்ள வேண்டும்.
* அதன் பின் அதில் வாஷிங் சோடாவை 200 கிராம் சேர்த்து ஒரு குச்சியால் கரைத்து விட வேண்டும்.
* அடுத்து அதில் துவைத்து வைத்துள்ள வெள்ளை துணிகளைப் போட்டு, ஒரு நாள் முழுவதும் ஊற வைக்க வேண்டும். அதுவும் மாலை லேளையில் ஊற வைத்தால், மறுநாள் காலையில் துவைக்க வேண்டும்.
* துணி நன்கு ஊறியதும், அதை எடுத்துப் பார்த்தால், வெள்ளை துணியில் இருந்த விடாப்பிடியான கறைகளும், அழுக்குகளும் நீங்கியிருப்பதைக் காணலாம்.
ஸ்டெப் #3
கடைசியாக துணியை சுத்தமான நீரில் 2 முறை அலசி, வெயிலில் காய வைக்க வேண்டும்.
மேலே கொடுக்கப்பட்டுள்ள வழிகளும், லாண்டரி கடை ரகசியமும் உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறோம். இதுவரை நீங்கள் வெள்ளை துணியை கஷ்டப்பட்டு துவைத்து வந்தால், இந்த வழிகளை ஒருமுறை ட்ரை செய்து பாருங்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications
