பழங்கள், காய்கறிகளில் உள்ள இரசாயனங்கள் மற்றும் பூச்சிக்கொல்லிகளை நீக்கணுமா? இப்படி சுத்தம் பண்ணுங்க!

ஆரோக்கியமான வாழ்க்கை வாழ்வதற்கு காய்கறிகளும், பழங்களும் மிகவும் அவசியமானதாகும். ஆனால் தற்போதிருக்கும் அவசர உலகில் அனைத்து உணவுகளிலும் கலப்படம் செய்யப்படுகிறது. அதனை சோதித்து பார்த்து வாங்குவதற்கு நமக்கு நேரமும் இல்லை, போதுமான விழிப்புணர்வும் இல்லை.

இயற்கை பழங்கள் மற்றும் காய்கறிகள் கிடைப்பது மிகவும் அரிதானதாகிவிட்டது. தற்போது கிடைக்கும் காய்கறிகள் மற்றும் பழங்கள் பெரும்பாலும் பூச்சிக்கொல்லிகள் மற்றும் உரங்களால் நிரப்பப்பட்டவையாக இருக்கிறது. எனவே அவற்றை சாப்பிடும் முன் அவற்றில் உள்ள இரசாயனங்கள் மற்றும் பூச்சிக்கொல்லிகளை நீக்க வேண்டும்.

How To Remove Pesticides From Fruits and Vegetables Naturally in Tamil

பழங்கள் மற்றும் காய்கறிகளை பூச்சிக்கொல்லிகள் இல்லாத பாதுகாப்பான உணவாக மாற்ற சில வழிமுறைகளை பின்பற்ற வேண்டும். அவை என்னென்ன என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

நன்றாக கழுவ வேண்டும்
பழங்கள் மற்றும் காய்கறிகளை நன்கு கழுவுதல், அவற்றின் வெளிப்புற மேற்பரப்பில் சிக்கியுள்ள அசுத்தங்களை அகற்ற உதவும். உருளைக்கிழங்கு போன்ற காய்கறிகள் மற்றும் சப்போட்டா போன்ற பழங்களின் தோலில் அழுக்கு எச்சங்கள் ஒட்டிக்கொண்டிருக்கும். குளிர்ந்த நீரில் அவற்றைக் கழுவுவதன் மூலம், இந்த அசுத்தங்களை நீங்கள் எளிதில் நீக்கலாம்.

உப்பு தண்ணீர்
பழங்கள் மற்றும் காய்கறிகளை உப்பு கலந்த நீரில் ஊறவைப்பது இரசாயனங்கள் மற்றும் பூச்சிக்கொல்லிகளுடன் அசுத்தங்களையும் அகற்ற உதவும். ஏனெனில் உப்பு பாக்டீரியாவை அழிப்பதன் மூலம் அவற்றை வளரவிடாமல் தடுக்கிறது.

தோலை உரித்தல்
பல காய்கறிகள் மற்றும் பழங்களில் அழுக்கு எச்சம் நிறைந்த அல்லது தடிமனாக இருக்கும் தோல்கள் இருப்பதால், அவற்றின் மீது தெளிக்கப்பட்ட இரசாயனங்களை அகற்றுவதற்கான சிறந்த வழி அவற்றை தோலுரிப்பதாகும். இந்த வழியில் நீங்கள் இரசாயன அடுக்கை எளிதில் நீக்கலாம்.

பிளான்ச்சிங்
பிளான்ச்சிங் என்பது ஒரு பிரெஞ்சு சமையல் செயல்முறையாகும், இந்த முறையில் பழங்கள் மற்றும் காய்கறிகள் தீவிர வெப்பநிலைக்கு உட்படுத்தப்படும். ரசாயனங்கள் மற்றும் பூச்சிக்கொல்லிகளை அகற்றுவதற்கு பிளான்ச்சிங் ஒரு சிறந்த வழியாகும். ஒரு காய்கறி அல்லது பழத்தை சுத்தப்படுத்த, தண்ணீரை கொதிக்க வைக்கவும், உணவுப் பொருளை 15 வினாடிகள் முதல் 1 நிமிடம் வரை இந்த நீரில் ஊறவைத்து, உடனடியாக குளிர்ந்த நீருக்கு மாற்றவும். இவ்வாறு செய்வதால் இரசாயனங்கள் மற்றும் அசுத்தங்கள் நீங்கும்.

சிட்ரிக் அமிலம்
எலுமிச்சை அல்லது சிட்ரிக் அமிலச் சாறு நீரில் கலப்பது நுண்ணுயிர் எதிர்ப்பியாகும். அதாவது இந்த கரைசல் பழங்கள் மற்றும் காய்கறிகளில் இருக்கும் கிருமிகள் மற்றும் பாக்டீரியாக்களை அழிக்கும். இந்தக் கிருமிகளை நீக்க, அரை எலுமிச்சைப் பழம் அல்லது ஏதேனும் சிட்ரிக் பழத்தின் சாறு மட்டும் போதும். இதனை தண்ணீரில் கலந்து அந்த கரைசலில் காய்கறிகள் மற்றும் பழங்களை ஊறவைத்து அதற்குப்பின் கழுவவும்.

மெழுகு பூச்சை அகற்றவும்
மெழுகு பூச்சுடன் காணப்படும் மிகவும் பொதுவான பழம் எதுவென்றால் ஆப்பிள்தான். மெழுகு இருக்கிறதா என்பதைத் தெரிந்துகொள்வதற்கான சிறந்த வழி, பிளேடு அல்லது கத்தி அல்லது உங்கள் நகங்களைக் கொண்டு தோலை கீறி பார்ப்பதுதான். மெழுகு பூச்சை அகற்றும் உபகரணங்கள் இப்போது பரவலாக கிடைக்கின்றன.

வினிகர்+பேக்கிங் சோடா
உங்கள் உணவில் உள்ள ரசாயனங்கள் மற்றும் பூச்சிக்கொல்லிகளை அகற்றுவதற்கான மிக எளிதான மற்றும் சிக்கனமான வழிகளில் ஒன்று சுத்தப்படுத்தும் கரைசலை வீட்டிலேயே தயாரிப்பது. இதற்கு எலுமிச்சை சாறு, பேக்கிங் சோடா மற்றும் தண்ணீர் தேவைப்படும். அவற்றை ஒன்றாக கலந்து, இந்த கரைசலை பழங்கள் மற்றும் காய்கறிகளின் மீது தெளிக்கவும். 10 நிமிடங்கள் கழித்து அவற்றை கழுவவும்.

மஞ்சள் கரைசல்
மஞ்சள் என்பது உணவுகளை சுத்தப்படுத்துவதற்கான ஒரு பழமையான இந்திய தந்திரமாகும். 1 டீஸ்பூன் மஞ்சளை தண்ணீரில் கரைத்து, பழங்கள் மற்றும் காய்கறிகளை இந்த கரைசலில் ஊறவைப்பது அவற்றில் உள்ள பாக்டீரியாக்கள் மற்றும் இரசாயனங்களை நீக்க உதவும்.

Story first published: Thursday, May 18, 2023, 17:22 [IST]
Desktop Bottom Promotion