Latest Updates
-
தொடர்ந்து 10 நாட்கள் கிராம்பு நீரை குடித்தால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
ஆந்திரா பீர்க்கங்காய் பச்சடி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சுவையாவும், ஆரோக்கியமாவும் இருக்கும் -
செவ்வாய் நட்சத்திர பெயர்ச்சி: நாளை முதல் இந்த 4 ராசிக்கு தொழிலில் வெற்றியும், பணமும் குவியும்! -
விமானத்தில் ஏர் ஹோஸ்டஸாக எப்போதும் ஏன் பெண்கள் மட்டுமே இருக்கிறார்கள் தெரியுமா? இதுல இவ்ளோ விஷயம் இருக்கா? -
கோதுமை இட்லியும், தேங்காய் இல்லாத தண்ணி சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 23 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு கஷ்டம் கதவைத் தட்டப்போகுதாம் -
August 2026: ஆகஸ்ட் மாத கிரக மாற்றங்களால் இந்த 5 ராசிக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமா இருக்கப்போகுது! -
நூக்கல் வாங்குனா இந்த மாதிரி குருமா செய்யுங்க.. எல்லாவிதமான டிபனுக்கும் அட்டகாசமா இருக்கும்! -
நைட் தூங்கும் முன் 1 ஏலக்காய் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
ஜூலை 29ல் செவ்வாய்-சுக்கிரனால் உருவாகும் கேந்திர யோகம்: இந்த 5 ராசிக்கு பண மழை கொட்டப்போகுது!
வெண்டைக்காய் நீண்ட காலம் கெட்டுப்போகாம இருக்க என்ன செய்யணும் தெரியுமா? இது மத்த காய்கறிகளுக்கும் பொருந்தும்...
பெரும்பாலும் நம் வீடுகளில் ஒரு வாரத்திற்கு தேவையான காய்கறிகளை வாங்கி சேமித்து வைக்கும் பழக்கம் இருக்கும். இது தினசரி கடைகள் அல்லது சந்தைக்கு செல்லும் நேரத்தை குறைக்கவும், எதிர்பாராத விருந்தாளிகளுக்காகவும் முன்னெச்சரிக்கை செய்யும் செயல்பாடகும். இருந்தாலும், எல்லா காய்கறிகளையும் ஒரு வாரத்திற்கு சேமித்து வைப்பது கொஞ்சம் சிரமம் தான்.
வெண்டைக்காய், அதன் வழவழப்பு தன்மை காரணமாக பிடிக்காதவர்கள் இருந்தாலும், அதனை விரும்பி உண்பவர்களுக்கு அதிக அளவில் இருக்கிறார்கள். இதை சரியான முறையில் சேமிக்காவிட்டால், விரைவில் வீணாகிவிடும். வெண்டைக்காயை, குழம்பு, பொரியல், மட்டும் வறுவல் என விதவிதமாக சமைத்து சாப்பிடலாம்.

ஆனால், இதை இரண்டு நாட்களுக்கு பிரிட்ஜ் அல்லது அறை வெப்பநிலையில் வைத்தால், அது காய்ந்தோ அல்லது அழுகியோ, இறுதியில் குப்பை போடும் நிலைக்கு சென்றுவிடும். அப்படி அவை வீணாகாமல் இருக்க நாம் பின்பற்ற வேண்டிய வழிகளை இங்கு பார்க்கலாம்.
ப்ரெஷான வெண்டைக்காயை வாங்குவது
இது எங்களுக்கு தெரியாதா என்பது புரிகிறது. பெரும்பாலும் நாம் வெண்டைக்காயின் நுனி பகுதியை உடைத்து, நன்றாக உடைந்தால் எடுத்து கொள்ளுவோம். உடையாமல் வளைந்து கொடுத்தால் அவற்றை தவிர்த்து விடுவோம். ஆனால், அனைத்து கடைகளிலும் அவ்வாறு உடைத்து எடுக்க விடமாட்டார்கள்.
அது போன்ற சூழலில், வெண்டைக்காய் மிகவும் மென்மையாகவோ அல்லது அதிக விதையுடனோ இல்லை என்பதை சோதித்து கொள்ளுங்கள். வெண்டைக்காய் புதிதாக இருக்கிறதா என்பதை விரலில் பிடித்து மென்மையாக அழுத்தி பரிசோதித்து பாருங்கள். புதிய வெண்டைக்காயை வாங்குவது சில வாரங்களுக்கு சேமிப்பதின் முதல் படியாகும்.
அளவு மற்றும் நிறம்
வெண்டைக்காய் வாங்கும் போது அதன் அளவு மற்றும் நிறத்தை கவனியுங்கள். சிறிதாக அடர் பச்சை நிறத்தில் இருக்கும் வெண்டைக்காய், பொதுவாக உள்ளூர் பகுதிகளில் கிடைக்க கூடிய மற்றும் அதிக அளவில் ஒட்டும் தன்மையற்றதாக இருக்கும். இது சிறந்த சுவையை கொண்டிருப்பதோடு, நீண்ட நாட்களுக்கும் சேமிக்கலாம். நீங்கள் வாங்கும் வெண்டைக்காய் மேற்சொன்னது போல் இருப்பதை உறுதி செய்யுங்கள்.
ஈரப்பதம் இல்லாமல் வைப்பது
கடைகளில் இருந்து வெண்டைக்காயை வாங்கி வந்த பிறகு, அவற்றை ஈரமில்லாத துணியை கொண்டு துடைத்து, காற்றுப்படும் படி உலர விடவும். சிறிய அளவில் தண்ணீர் இருந்தால் கூட வெண்டைக்காய் விரைவில் கெட்டுவிடும். நன்றாக உலர்ந்ததும் ஈரப்பத்தமில்லாத துணியில் சுற்றி காற்றுப்புகாத டப்பாவில் போட்டு வைக்கவும்.
சரியான முறையில் பிரிட்ஜ்-ல் வைப்பது
நீங்கள் வெண்டைக்காயை பிரிட்ஜ்-ல் சேமித்து வைக்க விரும்பினால், அதை பிளாஸ்டிக் பைகளில் இருந்து எடுத்து, பிரிட்ஜ்-ல் காய்கறிகளை சேமித்து வைக்க பயன்படுத்தும் காய்கறி பையில் வைக்கவும். அதிகப்படியான ஈரப்பதத்தை உறிஞ்சுவதற்கு காய்கறி பையில் செய்தித்தாள் அல்லது பேப்பரை கொண்டு பிரித்து வைக்கவும். இது போன்ற எளிய முறை குளிர்ச்சியினால் காய்கறிகளில் சேரும் தண்ணீரை தடுத்து வெண்டைக்காயை புதியதாக வைத்திருக்க உதவுகிறது.
தனியாக வைப்பது
வெண்டைக்காயை வீட்டில் இருக்கும் மற்ற பழங்கள் மற்றும் காய்கறிகளுடன் சேமித்து வைக்காதீர்கள். ஏன்னென்றால், வெண்டைக்காயின் ஈரப்பதத்தால் மற்ற பொருட்களும் கெட்டுப் போகலாம். வெண்டைக்காயை சேமிக்கும் முன், புதிதாக இல்லாத வெண்டைக்காயை ஒதுக்கிவிடவும்.



Click it and Unblock the Notifications
