Latest Updates
-
சௌ சௌ வாங்குனா இந்த மாதிரி வித்தியாசமா சட்னி அரைச்சு பாருங்க - இட்லி, தோசைக்கு சூப்பரா இருக்கும் -
ஹன்டா வைரஸ் Vs. கொரோனா வைரஸ்: இந்த இரண்டில் எது மிகவும் ஆபத்தானது? அவற்றின் அறிகுறிகள் என்னென்ன தெரியுமா? -
விஜய் சிஎம் ஆனதும் த்ரிஷா போட்ட அந்த ஒரு பதிவு... பின்னணியில் இருக்கும் மர்மம் என்ன? -
கல்யாண மேடையில் ரத்தக் களரி! வரதட்சணை கேட்டு மணமகன் வீட்டார் செய்த அராஜகம் - அதிர்ச்சியில் உறைந்த விருந்தினர்கள்! -
கிராமத்து ஸ்டைல் சிக்கன் பிரட்டல் ரெசிபி - ஒருதடவை செஞ்சு பாருங்க, செம சைடிஷா இருக்கும் -
இந்த 4 மாதங்களில் பிறந்தவர்கள் உலகை ஆட்டிப்படைக்கும் சக்திவாய்ந்தவர்களாக இருப்பார்களாம் -
கிலோ 12000 ரூபாய்க்கு விற்கப்படும் உலகின் காஸ்ட்லியான அரிசி இதுதான் - இதுல அப்படி என்ன ஸ்பெஷல் தெரியுமா? -
வீட்டின் வாஸ்துவை மாற்றும் ரகசியம்! மழைக்காலத்தில் இந்த செடிகள் இருந்தால் அதிர்ஷ்டம் தேடி வரும் -
ஐயங்கார் ஸ்டைல் மிளகு குழம்பு ரெசிபி - ஒருதடவை ட்ரை பண்ணி பாருங்க, அட்டகாசமா இருக்கும் -
மே 17-க்கு முன் புதுமனை புகுவிழா நடத்தப்போறீங்களா? செல்வம் பெருக இந்த வாஸ்து ரகசியத்தை மிஸ் பண்ணாதீங்க!
சமையல் அறையில் கரப்பான்பூச்சி தொல்லையா? கட்டுப்படுத்த சிம்பிள் டிப்ஸ்!
உங்க வீட்டில் சமையல் அறையில் உணவுப்பொருட்கள் உள்ளதோ? இல்லையோ? அதை விட அதிகமாக கரப்பான் பூச்சிகள் ஆங்காங்கே ஓடிக்கொண்டு இருக்கும்.. அதிலும் இரவில் கிச்சனில் இங்கும் அங்குமாக பறக்கும்.. இந்த கரப்பான்பூச்சிகள் சமையல் அறையல் இருக்கும் தேவையில்லாத ஒன்று என்பதோடு பல உடல் நல பாதிப்புகளை நமக்கு ஏற்படுத்த காரணமாக அமைகிறது.
அதிலும் மழைக்காலங்களில் அதிகளவில் தென்படக்கூடிய கரப்பான்பூச்சிகளை ஒழிக்க வேண்டும் என்றால், முதலில் அது இனப்பெருக்கம் செய்யக்கூடிய சின்க், அலமாரி இடுக்குகளில் சரியான பொருட்களைக் கொண்டு சுத்தம் செய்ய வேண்டும். வாங்க எப்படி சுத்தம் செய்வது? அந்த கரப்பான் பூச்சிகளை கிச்சனில் இருந்து ஒழிப்பது எப்படி? என்று இந்த பதிவில் தெரிந்துக் கொள்ளலாம்..

1. சமையலறையில் கரப்பான் பூச்சி தொல்லை வராமல் இருக்க வேண்டுமென்றால் அதற்கு முதலில் சமையலறையை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். பாத்திரம் கழுவும் இடம் எப்போதும் ஈரமாகவே இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்..
2. அதில் குறிப்பாக இரவு கிச்சனின் லைட்டை நிறுத்தும் முன்பு அடுப்படி, அடுப்பு மேடை அத்தனையையும் சுத்தமாகத் துடைக்க வேண்டும்.. உணவுத் துகள்கள் எதுவும் சிந்தியிருக்காமல் பார்த்துக் கொள்ளுங்கள். அது ரொம்ப முக்கியம்.. காரணம் அந்த உணவு துகள்களை சாப்பிட வேண்டும் என்பதற்காகவே இந்த கரப்பான் பூச்சிகள் கிச்சனில் நுழையும்..
3. அதேபோல பாத்திரம் கழுவும் சிங்கையும் எப்போதுமே தூய்மையாக பராமரிக்க வேண்டும்.. எந்த பாத்திரத்தையும் போடாமல் இரவே கழுவிவிட்டு, உணவுத் துகள்கள் எதுவும் அதில் சிந்தியிருக்காமல் துடைத்து விட வேண்டும்..
4. அதுமட்டுமல்லாமல் இரவே குப்பைத் தொட்டியையும் வெளியே எடுத்து வைத்து விடுங்கள். இதை தொடர்ந்து செய்தாலே பெரும்பாலும் கரப்பான் பூச்சி வருவதைத் தவிர்த்து விட முடியும்.
5. நாப்தலின் உருண்டைகள் அதிகமான வாசனை கொண்டது. துர்நாற்றங்களை விரட்டக் கூடியது. அதனால் பூச்சிகள அந்த வாசனைக்கு அண்டாது.. அதனால் பெரும்பாலும் துணிகள் வைக்கும் அலமாரிகள் மற்றும் புத்தகங்கள் வைக்கும் கபோர்டுகளில் இந்த உருண்டைகளைப் போட்டு வைப்பது நல்லது.. மேலும் சமையலறைக்கு வரும் கரப்பான் பூச்சிகளை விரட்டவும் இந்த நாப்தலின் உருண்டைகள் உதவும்.
6. பெரும்பாலும் கிச்சனில் இந்த உருண்டைகளை கேஸ் ஸ்டவ், பாத்திரம் கழுவும் இடம், சிங்க்குக்கு கீழே உள்ள இடம், மளிகை பொருள்கள் வைத்திருக்கும் இடம் ஆகியவற்றில் போட்டு வைத்திருங்கள். கரப்பான்பூச்சி வருவது கண்டிப்பாக குறையும்..
7. இது தவிர, உங்கள் கிச்சனில் ஒரு பௌலில் ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி அதில் 4 கிராம்புகளைத் தட்டிப் போடுங்கள். அதோடு ஒரு ஸ்பூன் கல் உப்பு சேர்த்து கரைத்து அதை அதிகமாக கரப்பான்பூச்சி வரும் இடங்களில், ஸ்பிரே பாட்டிலில் ஊற்றி ஸ்பிரே செய்து விடுங்கள்.. அந்த கிராம்பு வாசனைக்கு கரப்பான்பூச்சிகள் ஓடிவிடும்..
8. ஒரு பிளாஸ்டிப் பாக்ஸ் அல்லது ஏதேனும் ஒரு பாத்திரத்தில் ஒரு ஸ்பூன் சர்க்கரை சேர்த்துக் கொள்ளுங்கள். அதோடு ஒரு ஸ்பூன் டிடர்ஜெண்ட் பவுடர் கலந்து, அடுப்பு மற்றும் சிங்க்கு அருகில்ல் வைத்து விடுங்கள்.
9. மேலும் நம்ப கிச்சனில் இருக்கும் தயிர் மற்றும் புளித்த மாவை வைத்தே கரப்பான் பூச்சியை நம்மால் விரட்ட முடியும். ஒரு பௌலில் 2 ஸ்பூன் அளவு புளித்த தயிர், அல்லது புளித்த தோசை மாவை சேர்த்துக் கொள்ளுங்கள். அதோடு அரை ஸ்பூன் சர்க்கரையும் சிறிது தண்ணீரும் ஊற்றி கலந்து கரப்பான் பூச்சி அதிகமாக இருக்கும் இடங்களிலும் பாத்திரம் கழுவும் சிங்க்கின் கீழ் வைத்துவிடுங்கள். காலையில் எழுந்து பார்க்கும்போது அதில் நிறைய கரப்பான் பூச்சிகள் விழுந்து கிடக்கும்.
10. கிச்சனில் கரப்பான்கள் இந்த மழைகாலத்தில்தான் அதிகமாக காணப்படும்.. அதனால் இந்த டிப்ஸில் ஏதாவது ஒன்றை ஃபாலோ பண்ணுங்கள்..



Click it and Unblock the Notifications