For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கச்சிதமான ஜென் தோட்டத்தை உருவாக்குவது எப்படி?

By Srinivasan P M
|

எப்பவும் வீட்டு ஞாபகமாகவே இருக்கும் என பலர் சொல்லக் கேட்டிருப்பீர்கள். அப்படியெனில் அந்த வீட்டை அமைதியும், நிம்மதியும் நிறைந்த ஒரு சொர்க்கமாக மாற்ற வேண்டியது அவசியம் இல்லையா?

இதைச் செய்ய உகந்த ஒரு வழி ஜென் கார்டன் எனப்படும் ஜென் கல் வடிவப் பூங்காக்கள். தினசரி மனச் சோர்வைப் போக்குவதில் இவை பெரும் உறுதுணையாக இருகும். இவற்றின் வரலாறு ஜப்பானின் பல நூற்றாண்டுகளுக்குப் பின்னே செல்கிறது. இவை மிகவும் கவனமாக அமைக்கப்பட்ட செயற்கை பூங்காக்களாகும். உங்கள் வீட்டில் நிறைய இடம் இருந்தால், வெளியிலோ நடைபாதையிலோ அல்லது ஏன் வீட்டு மாடியில் கூட சிறிது முயற்சியுடன் அழகான ஓய்விடமாக அமையும். வாங்க அது எப்படினு பார்க்கலாம்.

மணல் அமைதியைத் தரும்

How To Create A Perfect Zen Garden

இவை ஒரு வெளியுலகத் தோற்றத்தைத் தரக்கூடிய வறண்ட நில அமைப்புகளாகும். வீட்டில் பதிக்கப்படும் மர அல்லது மார்பிள் தரைகளுக்குப் பதிலாக மணல் ஒரு நல்ல மாற்றாக அமையும். ஒரு சவுல் அல்லது கம்பியைக் கொண்டு மணலில் சிறு அலைகளைப் போன்ற அமைப்பை அழகாக உருவாக்கி விருந்தினருக்கு வியப்பூட்டலாம்.

தண்ணீர் அவசியம்

தண்ணீரின் ஒலியை ஈடு செய்யக்கூடிய விஷயங்கள் மிகவும் அரிது. மேலும் ஜென் தத்துவப்படி தண்ணீர் ஒரு நேர்மறையான உணர்வுகளையும், சக்தியையும் சூழ்ந்துள்ளவற்றில் பரப்பக்கூடியது. உங்கள் தோட்டத்திலும், அதே போன்ற சூழ்நிலை நிலவுவது அவசியம். சுவர் இருந்தால் அதில் ஒரு நீர்வீழ்ச்சியை உருவாக்குங்கள் அல்லது ஒரு மர உருளை இருந்தால் அதன் மூலம் நீர் மெலெழும்பி விழுமாறு அமையுங்கள். ஜென் கலையில் மற்றுமொரு பிரபலமான விஷயம் கல்லில் செய்யப்பட்ட நீரூற்றுகள்.

பாறைகள் மற்றும் கற்கள்

தோட்டத்தில் பாறைகளும் அவற்றுடன் பல வடிவங்களில் சிறு கற்களும் வைக்கலாம். இவற்றை ஒரு சீரான நேர்த்தியான வடிவங்களில் அமைப்பது நல்லது. பெரிதும் சிறிதுமாக அல்லடு அதிகமாக இல்லாமல் பார்த்துக்கொள்வதும் அவசியம். இல்லையென்றால் இவை மிகவும் அலங்கோலமாகத் தெரியும். ஒரு கல்லின் மீது இன்னொன்றை அடுக்கி வைப்பதும் நன்றாக இருக்கும் (பெரிய கல்லை அடியில் போட்டு வரிசையாக சிறிய அதற்கும் சிறிய கற்களை அடுக்குதல்). கரு நிறமுடைய கற்களையும் வெண் கற்களையும் கலந்து சுற்றி எல்லையாக அடுக்குவதைப் போலவும் செய்யலாம்.

சிறிய சிலைகள்

நம்மைச் சுற்றி சிலைகளை அமைப்பதும் இடத்தை அழகாகக் காட்டும். புத்தர் சிலைகள் இவற்றில் மிகவும் பிரபலம். கல்லினால் செய்த தவளை, பறவை, மீன் அல்லது ஆமை பொம்மைகளையும் பயன்படுத்தலாம். இந்த பசுமையான இடத்தில் காற்றில் ஆடி ஒலிக்கும் மணிகள் வழக்கமாக வைக்கப்படுவதுண்டு..

அப்புறமென்ன.. உடனே வீட்ல செட் பண்ணி அழகு பாக்கலாமே!

English summary

How To Create A Perfect Zen Garden

Have you ever thought that how to create a perfect zen garden? Here are few simple steps to make zen garden in your home.
Story first published: Friday, October 31, 2014, 19:16 [IST]
Desktop Bottom Promotion