வீட்டில் கொசுக்களை கட்டுப்படுத்த உதவும் 10 செடிகள்!!!

Posted By: Ashok CR
Subscribe to Boldsky

மழைக்காலத்தில் வீட்டிற்கு வெளியே நாம் சந்தோஷமாக பொழுதை கழிப்பதில், பெரிய அளவில் தொல்லைகள் கொடுப்பது கொசுக்களே. கொசுக்கடி என்றால் அரிப்பை ஏற்படுத்துவதோடு மட்டுமல்லாமல் மலேரியா போன்ற சில நோய்களையும் பரப்பும். கொசுக்களை விரட்ட கொசு விரட்டி சுருள்கள், கொசு விரட்டி கிரீம்கள், எலெக்ட்ரானிக் கொசு விரட்டிகள் மற்றும் மூலிகை லோஷன்கள் ஆகியவற்றை எல்லோரும் பயன்படுத்தி வருகின்றனர். இவ்வகை பொருட்கள் சிலருக்கு அலர்ஜியை ஏற்படுத்தலாம்.

அதனால் நாசி குழி, சருமம் மற்றும் தொண்டை பிரச்சனைகள் போன்றவற்றால் அவதிப்படுவார்கள். கொசுவை விரட்ட சிலர் ரசாயனங்களையும் பயன்படுத்துகின்றனர். இது உடல் நலத்திற்கும், சுற்றுச் சூழலுக்கும் தீய தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இயற்கையான வழியில் கொசுக்களை நீங்கள் கட்டுப்படுத்த விரும்பினால், உங்கள் வீட்டு தோட்டத்தில் சில கொசு விரட்டி செடிகளை வளர்த்திடுங்கள். இவ்வகையான கொசு விரட்டி செடிகள் கொசுக்களை விரட்டுவதோடு தோட்டத்தையும் அழகுப்படுத்தும். அந்த கொசு விரட்டி செடிகளை பற்றி இப்போது பார்க்கலாமா?

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ரோஸ்மேரி

ரோஸ்மேரி

ரோஸ்மேரி செடியில் உள்ள எண்ணெய் இயற்கையான கொசு விரட்டியாக செயல்படுகிறது. ரோஸ்மேரி செடி பொதுவாக 4-5 அடி உயரம் வரை வளரும். அதில் நீல நிற பூக்கள் பூக்கும். குளிர் காலத்தில் இந்த செடியால் வாழ முடியாது. அந்நேரத்தில் அதற்கு வெப்பம் தருகிற அடைக்கலத்தை அளிக்க வேண்டும். அதனால் ரோஸ்மேரி செடியை ஒரு தொட்டியில் போட்டு வளர்க்கவும். குளிர் காலத்தில் அதை வீட்டிற்குள் கொண்டு வைத்து வளர்க்கவும். சமையலுக்கு சுவையை சேர்ப்பதற்கும் ரோஸ்மேரி செடியை பயன்படுத்தலாம். குளிரல்லாத காலத்தில் கொசுவை கட்டுப்படுத்த இந்த செடியை உங்கள் தோட்டத்தில் வைக்கவும். ரோஸ்மேரி செடி உடனடி கொசு விரட்டியாக செயல்பட வேண்டுமானால், ரோஸ்மேரி செடியின் அதிமுக்கிய எண்ணெய்யை 4 சொட்டு எடுத்து, அதனை ¼ கப் ஆலிவ் எண்ணெயுடன் கலந்து, அதனை குளிர்ந்த மற்றும் ஈரப்பதம் அல்லாத இடத்தில் சேமித்திடவும். பின் தேவைப்படும் நேரத்தில் கை மற்றும் காலைகளில் அதனை தடவிக் கொள்ளுங்கள்.

சிட்ரோனெல்லா புல்

சிட்ரோனெல்லா புல்

சிட்ரோனெல்லா புல் கொசுக்களை கட்டுப்படுத்த சிறந்ததாக விளங்குகிறது. 2 மீட்டர் உயரத்திற்கு வளரும் இது ஆண்டிற்கு ஒரு முறை லாவெண்டர் நிற பூக்களை பூக்கும். இந்த புல்லில் இருந்து எடுக்கபப்டும் சிட்ரோனெல்லா எண்ணெய்யை தான் மெழுகுவர்த்திகள், பெர்ஃப்யூம்கள், விளக்குகள் மற்றும் இதர மூலிகை பொருட்களில் பயன்படுத்தப்படுகிறது. மேலும் டெங்கு காய்ச்சலை உண்டாக்கும் கொசுக்களை (ஏடெஸ் ஏஜிப்டி) சிறந்த முறையில் கட்டுப்படுத்தவும் சிட்ரோனெல்லா புல் உதவுகிறது. கொசுக்களை கட்டுப்படுத்த சிட்ரோனெல்லா எண்ணெய்யை மெழுகுவர்த்தி மற்றும் விளக்குகளில் ஊற்றி அதனை தோட்டத்தில் எரிய விடுங்கள். சிட்ரோனெல்லா புல்லில் பூசண எதிர்ப்பி குணங்களும் உள்ளது. சிட்ரோனெல்லா புல் நம் சருமத்திற்கு பாதுகாப்பானது. அதனால் அதனை நீண்ட நேரம் தடவிக் கொள்ளலாம். உயிரிகளுக்கும் எந்த ஒரு ஆபத்தையும் ஏற்படுத்தாது.

சாமந்திப்பூ

சாமந்திப்பூ

சாமந்திப்பூ செடியில் வரும் வினோதமான வாசனையை பல பூச்சிகளும், மனிதர்களும், மிருகங்களும் விரும்புவதில்லை. சாமந்திப்பூ செடி 6 இன்ச் முதல் 3 அடி உயரம் வரை வளரும். இரண்டு வகையான சாமந்திப்பூ செடிகள் இருக்கிறது - ஆஃப்ரிகன் சாமந்திப்பூ மற்றும் பிரெஞ்ச் சாமந்திப்பூ. இவையிரண்டுமே கொசு விரட்டியாக செயல்படுகிறது. அசுவினி மற்றும் இதர பூச்சி கொல்லியாகவும் இது செயல்படுவதால் சாமந்திப்பூவை காய்கறிகளுக்கு பக்கத்தில் வளர்ப்பார்கள். இச்செடியில் மஞ்சள் முதல் கருமையான ஆரஞ்சு மற்றும் சிகப்பு வரை பல நிறத்திலான பூக்கள் பூக்கும். சாமந்திப்பூ செடிகளுக்கு சூரிய ஒளி பிடிக்கும் என்பதால் அதனை நிழலில் வைத்தால் அதன் வளர்ச்சி தாமதமடையும். கொசுக்களை கட்டுப்படுத்த, சாமந்திப்பூ செடியை தோட்டத்தில், தொட்டியில் வளர்க்கலாம்.

காட்னிப் (Catnip)

காட்னிப் (Catnip)

காட்னிப் என்ற செடி புதின குடும்பத்துடன் தொடர்புடையது. இது ஒரு கொசு விரட்டி என சமீபத்தில் தான் அறிவிக்கப்பட்டது. சமீபத்திய ஆய்வின் படி, டீட் என்ற ரசாயன பூச்சு கொல்லியை விட இது 10 மடங்கு அதிக சிறப்பாக செயல்படும். பல்லாண்டு வாழ்கிற செடியான காட்னிப்பை சூரிய ஒளி படும் படி அல்லது லேசான நிழலில் வைத்து வளர்த்தால் 3 அடி உயரம் வரை வளரும். காட்னிப் செடியில் வெண்ணிற அல்லது லாவெண்டர் நிற பூக்கள் பூக்கும். கொசுக்களையும் பிற பூச்சிக்களையும் கட்டுப்படுத்த காட்னிப் செடியை வீட்டின் பின்புற தோட்டத்தில் வளர்க்கவும். பூனைகளுக்கு காட்னிப் செடியின் நறுமணம் பிடிப்பதால், அதனை பாதுகாக்க செடியை சுற்றி வேலி போட்டுக் கொள்ளலாம். கொசுவை கட்டுப்படுத்த காட்னிப் செடியை பல வகையால் பயன்படுத்தலாம். கசக்கிய அதன் நற்பதமான இலைகளை அல்லது அதிலிருந்து எடுத்த சாறை சருமத்தில் தடவலாம்.

அகிராட்டம் (Ageratum)

அகிராட்டம் (Ageratum)

அகிராட்டம் என்பது மற்றொரு கொசு விரட்டி செடியாக செயல்படுகிறது. இந்த செடியில் பூக்கும் வெளிர் ஊதா மற்றும் வெண்ணிற பூக்கள் மூலமாக கெளமாரின் உருவாகும். கெளமாரினில் இருந்து வரும் கடுமையான வாசனை கொசு விரட்டியாக செயல்படுகிறது. இந்த கெளமாரினை தான் சந்தையில் கிடைக்கும் கமர்ஷியல் கொசு விரட்டி மற்றும் பெர்ஃப்யூம் தொழிற்சாலையில் பயன்படுத்துகின்றனர். அகிராட்டத்தை கண்டிப்பாக சருமத்தில் தடவ கூடாது. அதற்கு காரணம் சருமத்திற்கு ஆகாத பொருட்கள் அதில் இருப்பதே. முழுமையான அல்லது லேசான சூரிய ஒளியின் கீழ் அகிராட்டம் வளரும். கோடைக்காலம் முழுவதும் இது மலர்ந்திருக்கும்.

ஹார்ஸ்மின்ட் (Horsemint)

ஹார்ஸ்மின்ட் (Horsemint)

கொசுக்களை கட்டுப்படுத்த ஹார்ஸ்மின்ட் செடியும் உதவுகிறது. ஹார்ஸ்மின்ட் என்பதும் பல்லாண்டு காலம் வாழும் ஒரு செடியாகும். அதற்கென எந்த ஒரு விசேஷ கவனிப்பும் தேவையில்லை. ஹார்ஸ்மின்ட் செடியின் நறுமணம் சிட்ரோனெல்லா புல்லை போலவே இருக்கும். வெப்பமான வானிலையிலும் மணற்பாங்கான நிலத்திலும் இது நன்றாக வளரும். இந்த செடியில் பிங்க் நிற பூக்கள் பூக்கும். ஹார்ஸ்மின்ட் செடியில் இயற்கையான பூஞ்சை கொல்லி மற்றும் பாக்டீரியாக்களை எதிர்த்து நிற்கிற குணங்கள் உள்ளது. அதற்கு காரணம் அதன் அதிமுக்கிய எண்ணெய்களில் இருந்து கிடைக்கும் தைமால் என்ற பொருள். ஃப்ளூ காய்ச்சலுக்கும் இது பயன்படுத்தப்படுகிறது.

வேப்பிலை மரம்

வேப்பிலை மரம்

வலிமையான கொசு விரட்டி செடிகளில் ஒன்றாக விளங்குகிறது வேப்ப செடி. வேப்ப செடியில் பூச்சி கொல்லி குணங்கள் அடங்கியுள்ளது. வேப்பிலை சேர்த்த பல கொசு விரட்டிகளும் பாம்களும் சந்தையில் கிடைக்கிறது. கொசுக்களை கட்டுப்படுத்த வேப்பம் மரத்தை உங்கள் தோட்டத்தில் வளர்த்திடுங்கள். வேப்ப இலைகளை எரித்தோ அல்லது வேப்ப எண்ணெய்யை மண்ணெண்ணெய் விளக்கில் போட்டோ பயன்படுத்தலாம். கொசுக்களை விரட்ட வேப்ப எண்ணெய்யை உங்கள் சருமத்தில் தடவலாம். அதிலுள்ள இயற்கையான கொசு விரட்டி குணங்கள் மலேரியாவிற்கு எதிராக சிறப்பாக செயல்படும்.

லாவெண்டர்

லாவெண்டர்

கொசுக்களை விரட்டும் ஒரு அருமையான செடி தான் லாவெண்டர். அதற்கு அதிக கவனிப்பு தேவையில்லை என்பதால் லாவெண்டர் செடியை வளர்ப்பது சுலபமாகும். 4 அடி உயரம் வரை வளரும் இந்த செடிக்கு நன்றாக வெயில் அடிக்க வேண்டும். ரசாயனம் அல்லாத கொசு விரட்டி சொல்யூஷனை தயார் செய்ய வேண்டுமானால், அதிமுக்கிய லாவெண்டர் எண்ணெய்யை தண்ணீரில் கலந்து, சருமத்தின் மீது நேரடியாக தடவவும். கொசுக்களை கட்டுப்படுத்த லாவெண்டர் செடி தொட்டிகளை உட்காரும் இடத்திற்கு அருகில் வைத்திடவும். கொசுக்கள் அண்டாமல் இருக்க லாவெண்டர் அதிமுக்கிய எண்ணெய்யை கழுத்து, மணிக்கட்டு மற்றும் கணுக்காலில் தடவிக் கொள்ளவும்.

துளசி செடி

துளசி செடி

துளசி என்பது கொசு விரட்டி செடியாகும். கசக்காமலேயே நறுமணத்தை பரப்பிடும் மூலிகை செடிகளில் ஒன்று தான் துளசி. கொசுக்களை கட்டுப்படுத்த துளசியை தொட்டியில் வைத்து வீட்டின் முற்றத்தில் அதனை வளர்க்கவும். கொசுக்கள் அண்டாமல் இருக்க கசக்கிய துளசி செடியை சருமத்தின் மீது தடவிக் கொள்ளவும். உணவிற்கு சுவையளிக்கவும் துளசி செடி உதவுகிறது. கொசுக்களை கட்டுப்படுத்த எந்த ஒரு துளசி வகையையும் பயன்படுத்தலாம். ஆனால் லவங்கப் பட்டை துளசி, எலுமிச்சை துளசி மற்றும் பெருவியன் துளசிகளில் தான் அடர்த்தியான நறுமணம் வருவதால் அவைகள் சிறப்பாக செயல்படும்.

லெமன் பாம் (Lemon balm)

லெமன் பாம் (Lemon balm)

லெமன் பாம் செடியும் கூட கொசுக்களை அண்ட விடாது, வேகமாக வளரும் லெமன் பாம் செடி, பறந்து விரிந்து வளர போதிய இடம் தேவை. லெமன் பாம் இலைகளில் சிட்ரோனெல்லல் பொருட்கள் வளமையாக உள்ளது. பல கமர்ஷிய கொசு விரட்டிகளில் சிட்ரோனெல்லல் பயன்படுத்தப்படுகிறது. சில வகையான லெமன் பாம்களில் 38% வரையிலான சிட்ரோனெல்லல் உள்ளது. கொசுக்களை கட்டுப்படுத்த லெமன் பாம் செடியை வீட்டின் முற்றத்தில் வளர்க்கவும். கொசு உங்களை அண்டாமல் இருக்க கசக்கிய லெமன் பாம் இலைகளை உங்கள் சருமத்தில் தடவிக் கொள்ளுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts

    English summary

    10 Mosquitoes Controlling Plants for Home

    Mosquitoes are among the biggest nuisance of monsoon that ruins the outdoor fun. Bites of mosquitoes are extremely itchy as well as spread diseases such as malaria. People use mosquito coils, mosquito repellent creams, electronic mosquito repellents and herbal mosquito lotions to keep mosquitoes at a bay.
    Story first published: Sunday, November 2, 2014, 12:37 [IST]
    We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more