For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு வீட்டை அழகாக அலங்காரம் செய்வதற்கான சில எளிய வழிகள்!

டிசம்பர் மாதம் என்றாலே கிறிஸ்துமஸ் விழா ஞாபகத்திற்கு வருகிறது. அந்த மாதம் முழுவதும் கிறிஸ்துமஸ் காலம் அல்லது கிறிஸ்துமஸ் மாதம் என்று கிறிஸ்தவர்களால் கருதப்படுகிறது. கிறிஸ்துமஸ் விழாவின் முக்கிய அம்சங்களில் ஒன்று வீட்டை அலங்காரம் செய்வது.

|

டிசம்பர் மாதம் என்றாலே கிறிஸ்துமஸ் விழா ஞாபகத்திற்கு வருகிறது. அந்த மாதம் முழுவதும் கிறிஸ்துமஸ் காலம் அல்லது கிறிஸ்துமஸ் மாதம் என்று கிறிஸ்தவர்களால் கருதப்படுகிறது. கிறிஸ்துமஸ் விழாவின் முக்கிய அம்சங்களில் ஒன்று வீட்டை அலங்காரம் செய்வது ஆகும்.

Simple Ways to Decorate Your Home for Christmas

ஒரு சிலர் இந்த கிறிஸ்துமஸ் காலத்தில் வீட்டை அலங்காரம் செய்வதற்காக அதிகம் செலவு செய்கின்றனர். ஆனால் அவ்வாறு அதிகம் செலவு செய்ய வேண்டிய அவசியம் இல்லை. மாறாக குறைந்த செலவில் நாமே நமது வீட்டை அழகாக அலங்கரிக்க முடியும்.

MOST READ: கர்ப்ப காலத்தில் சிரசாசனம் செய்யும் போட்டோவை இன்ஸ்டாவில் போட்டு அசர வைத்த அனுஷ்கா...

ஒவ்வொரு முறையும் உழைத்து களைத்து வீட்டிற்குள் நுழையும் போது நாம் அந்த கிறிஸ்துமஸ் விழாவின் மகிழ்ச்சியை உணர வேண்டும் என்றால் பின்வரும் எளிய முறைகளில் வீட்டை அலங்கரிக்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சுவரில் மாட்டி வைக்கக்கூடிய மரத்தில் செய்யப்படும் கிறிஸ்துமஸ் மரம்

சுவரில் மாட்டி வைக்கக்கூடிய மரத்தில் செய்யப்படும் கிறிஸ்துமஸ் மரம்

மரத்தில் செய்யப்படும் கிறிஸ்துமஸ் மரம் குறைந்தபட்ச அழகைக் கொடுக்கும். அதே நேரம் வருடம் முழுவதும் அந்த கிறிஸ்துமஸ் மரத்தை சுவரிலேயே மாட்டி வைத்திருக்கலாம். மரத்தில் செய்யப்படும் கிறிஸ்துமஸ் மரத்தை செய்வது மிகவும் எளிது.

அருகில் இருக்கும் மரக்கடைக்குச் சென்று மரப்பலகைகளை வாங்கிக் கொள்ள வேண்டும். அவற்றைத் தகுந்தவாறு செதுக்கி கிறிஸ்துமஸ் மரமாகச் செய்ய வேண்டும். பின் அவற்றை நமது வீட்டின் முக்கிய அறையின் சுவரில் மாட்டி வைக்க வேண்டும். அதோடு நமது விருப்பப்படி அந்த கிறிஸ்துமஸ் மரத்தை ஆபரணங்களால் அலங்கரிக்கலாம். பலவண்ண சிறிய மின்விளக்குகளால் கிறிஸ்துஸ் மரம் முழுவதும் நிரப்பலாம். அதோடு கிறிஸ்துமஸ் மரத்தைச் சுற்றி மெழுகுவர்த்திகளையும் ஏற்றி வைக்கலாம். அது மிக அழகாக இருப்பதோடு கிறிஸ்துமஸ் விழா மகிழ்ச்சியையும் நமக்குள் ஏற்படுத்தும்.

பலவண்ண சிறு மின்விளக்குகளால் சுவரை அலங்கரித்தல்

பலவண்ண சிறு மின்விளக்குகளால் சுவரை அலங்கரித்தல்

பலவண்ண சிறு மின்விளக்குகளாலான நீண்ட சரம் ஒன்றை வாங்கிக் கொள்ள வேண்டும். அதை கிறிஸ்துமஸ் மரம் போன்ற வடிவில் நமது குழந்தைகளின் படுக்கை அறையின் சுவற்றில் ஒட்டி வைக்க வேண்டும். இப்போது அந்த மின்விளக்கு சரத்தை எரியவிட்டால் நமது குழந்தைகள் மகிழ்ச்சியால் துள்ளி மகிழ்வர். மேலும் அவர்களுக்கு தமக்கு சொந்தமான கிறிஸ்துமஸ் மரம் என்ற உணர்வும் ஏற்படும்.

நமது கைகளால் செய்யப்படும் ஆபரணங்களால் அலங்கரித்தல்

நமது கைகளால் செய்யப்படும் ஆபரணங்களால் அலங்கரித்தல்

கிறிஸ்துமஸ் மரத்தின் அழகை மேலும் மெருகூட்ட நமது கைகளால் அழகான ஆபரணங்களைச் செய்து அலங்கரிக்கலாம். அதில் நமது குழந்தைகளை ஈடுபடுத்தலாம்.

முதலில் சிவப்பு, வெள்ளை மற்றும் பச்சை வண்ண பஞ்சுப் பந்துகளை (pom poms) வாங்கிக் கொள்ள வேண்டும். அவற்றை நமது செல்லக் குழந்தைகள் தங்களுக்கு பிடித்த வண்ணங்களைப் பயன்படுத்தி வண்ணம் தீட்டச் செய்ய வேண்டும். அந்த பலவண்ண பஞ்சுப் பந்துகளை கிறிஸ்துமஸ் மரத்தில் தொங்கவிட வேண்டும்.

அடுத்ததாக ஐஸ்க்ரீம் குச்சிகளால் பனிசீவல்களை (snowflakes) செய்து கொள்ள வேண்டும். அந்த பனிசீவல்களை நமது குழந்தைகளை வைத்து தங்களுக்கு பிடித்த வண்ணங்களால் வண்ணம் தீட்டச் செய்ய வேண்டும். மேலும் மணிகள் மற்றும் நட்சத்திரங்களைக் கடைகளில் வாங்காமல் நமது குழந்தைகளை வைத்தே அட்டைத் தாள்களில் (cardboard) செய்ய வைத்து அவற்றைக் கொண்டு அலங்கரிக்க வேண்டும்.

பனிசீவல்கள் மற்றும் நட்சத்திரங்களைச் செய்தல்

பனிசீவல்கள் மற்றும் நட்சத்திரங்களைச் செய்தல்

நமது வீட்டின் தாழ்வாரத்தின் கூரையிலிருந்து பலவண்ண அட்டைத்தாள்களில் செய்யப்பட்ட நட்சத்திரங்களையும், ஐஸ்க்ரீம் குச்சிகளிலிருந்து செய்யப்பட்ட பலவண்ண பனிசீவல்களையும் தொங்கவிட்டால் தாழ்வாரமே ஒரு சொர்க்கபுரியாகத் தெரியும்.

இணையதளத்திலிருந்து பனிசீவல் மற்றும் நட்சத்திரங்களின் படங்களைப் பதிவிறக்கம் செய்து அவற்றை நமது குழந்தைகளிடம் கொடுத்து, அவற்றை வண்ணம் தீட்டச் சொல்ல வேண்டும். அதோடு பலவண்ண அட்டைத் தாள்களை அவர்களிடம் கொடுத்து நட்சத்திரங்கள் மற்றும் பனிசீவல்களைச் செய்ய ஊக்கப்படுத்த வேண்டும். பின் அட்டைத் தாள்களில் செய்யப்பட்ட நட்சத்திரங்கள் மற்றும் பனிசீவல்களை நூல்களில் கட்டி அவற்றை அறையின் கூரையிலிருந்து தொங்கவிட வேண்டும். அவை ஒவ்வொரு நாளும் பார்ப்பதற்கு நமக்கு மட்டும் அல்ல நமது குழந்தைகளுக்கும் பரவசத்தை ஏற்படுத்தும்.

தீபாவளிக்குப் பயன்படுத்திய அலங்காரப் பொருட்களை பயன்படுத்துதல்

தீபாவளிக்குப் பயன்படுத்திய அலங்காரப் பொருட்களை பயன்படுத்துதல்

சமீபத்தில் முடிவடைந்த தீபாவளி விழாவிற்கு பயன்படுத்திய அலங்காரப் பொருட்களை வீணாக்காமல், அவற்றை கிறிஸ்துமஸ் விழாவிற்கு அலங்காரம் செய்ய பயன்படுத்தலாம். குறிப்பாக தீபாவளிக்கு பயன்படுத்திய விளக்குகளைக் கொண்டு நமது வீட்டு பால்கனியை அலங்கரிக்கலாம். மேலும் பச்சை மற்றும் சிவப்பு வண்ண மெழுகுவர்த்தி வடிவில் இருக்கும் மின்விளக்குகளைக் கொண்டு உணவறையை அலங்கரிக்கலாம். அவை மிகவும் அழகாக இருக்கும்.

கிறிஸ்துமஸ் அறுசுவை விருந்து

கிறிஸ்துமஸ் அறுசுவை விருந்து

எவ்வளவு தான் அழகாக வீட்டை அலங்காரம் செய்திருந்தாலும், அறுசுவை உணவு இல்லாமல் கிறிஸ்துமஸ் விழா முழுமையடையாது. குறிப்பாக கிறஸ்துமஸ் விழாவின் முக்கிய உணவுகளான ஜிஞ்சர்பிரட் மேன் (gingerbread man), சாக்லெட் மற்றும் ரம் ஆகியவற்றைப் பயன்படுத்தி செய்யப்படும் கேக்குகள் (rum balls) போன்றவை இல்லாமல் கிறிஸ்துமஸ் விழாவை நிறைவு செய்ய முடியாது.

ஆகவே இந்த உணவுகளை நாமே வீட்டில் சமைக்கலாம். ஜிஞ்சர்ப்ரட் மேன் பிஸ்கட்டுகளை சமைத்து அவற்றை சிவப்பு, பச்சை மற்றும் வெள்ளை வண்ண ஐஸ்க்ரீம்களால் நமது குழந்தைகளை வைத்து அழகுபடுத்தச் செய்ய வேண்டும். அதோடு சாக்லெட் உருண்டைகளை சமைத்து அவற்றை தேங்காய் தூவல்களால் அலங்கரிக்க வேண்டும். அந்த உருண்டைகள் பார்ப்பதற்கு பனி உருண்டைகள் போல அழகாகத் தெரியும். அவற்றை சிவப்பு வண்ணத் தாளில் வைத்து கிறிஸ்துமஸ் விருந்தின் நடுவில் வைத்தால் அது விருந்திற்கு முழு அழகையும் கொடுக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Simple Ways to Decorate Your Home for Christmas

Here are some simple ways to decorate your home for christmas. Read on to know more...
Desktop Bottom Promotion