For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பேச்சுலர்களே! உங்கள் வீடுகளை அழகாக வைத்துக் கொள்ள சில வழிகள்!!!

|

வெளியூர்களில் வேலை செய்பவர்களுக்கு மட்டுமே தெரியும் பேச்சுலர் வீட்டின் அருமையும், பெருமையும்! நான்கு பேர் தாங்கும் அறையில் நாற்பது பேர் தங்கும் அதிசயங்கள் அங்கு மட்டும் தான் நடக்கும். கூவத்தை மிஞ்சும் வாசனை களஞ்சியம் பேச்சுலர் வீடு!!!

ஒருவன் வாழ்வில் நிலையான வெற்றி பெற சகிப்புத் தன்மை வேண்டும் என்று பல ஞானிகள் கூறியிருக்கின்றனர் (அட!! சத்தியமா சொல்லிருக்காங்க... நம்புங்க!!!). பேச்சுலர் வீட்டில் அத்தனை இன்னல்களுக்கும், துர்நாற்றத்திற்கும் இடையில் வாழும் இளைஞர்களுக்கு இருக்கும் சகிப்புத் தன்மை உங்களில் யாருக்காவது இருக்கிறது (சொல்லுங்க யுவர் ஆனர்!!).

எவ்வளவு நாள் இந்த மாதரி பேசிக் கொண்டிருப்பது, இப்படி கேவலமாக இருந்தால் உங்கள் பேச்சுலர் இல்லத்தினுள் எப்படி கார்மேக தேவதை அவளது காலடியை எடுத்து வைப்பாள்? அப்படி வைக்க வேண்டும் என்ற எண்ணம் இருப்பவர்கள், உங்கள் பேச்சுலர் வீட்டை அழகாக வைத்துக் கொள்ள இந்த வழிகளை தெரிந்துக் கொள்ளுங்கள்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சுவர்களின் நிறம்

சுவர்களின் நிறம்

பல வருடங்களாக வண்ணம் அடிக்காத சுவர்களை தான் நீங்கள் முதலில் பராமரிக்க வேண்டும். கான்ட்ராஸ்ட்டான வண்ணங்களில் சுவர்களுக்கு வண்ணமடிப்பது தான் தற்போதைய ஃபேஷன். எனவே, மொக்கையாக ஒரே வண்ணத்தை சுற்றி சுற்றி பூசுவதை நிறுத்தி, தற்போதைய ட்ரென்டிற்கு ஏற்றார் போல் மாறுங்கள். மெல்லிய வண்ணங்களான வெளிரிய ஆரஞ்சு, சூரிய மஞ்சள், எலுமிச்சை மஞ்சள் போன்ற வண்ணங்கள் கூட பயன்படுத்தலாம்.

ஜன்னல்கள்

ஜன்னல்கள்

பெரும்பாலும் பேச்சுலர் வீட்டு ஜன்னல்களில் உள்ளாடைகள் தான் தோரணம் போல தொங்கிக் கொண்டிருக்கும், அதை முற்றிலுமாக அகற்றிவிட்டு. விண்டோஸ் ப்ளிண்ட்ஸ் (Windows Blinds) அல்லது அழகிய ஜன்னல் திரையை மாற்றுங்கள்.

ஃபர்னீச்சர்

ஃபர்னீச்சர்

முதலில் உடைந்த பிளாஸ்டிக் நாற்காலிகளை தூக்கி வீசுங்கள். தற்போதைய ட்ரென்டிற்கு ஏற்றார் போல நல்ல டிசைன்களில் விற்கப்படும் ஃபர்னீச்சரை வாங்கி உங்கள் வரவேற்பறையை அழகுப்படுத்துங்கள்.

அலங்காரப் பொருட்கள்

அலங்காரப் பொருட்கள்

அழகிய புகைப்படங்கள் (அது உங்களுடையதாக கூட இருக்கலாம்), அலங்கார விளக்குகள் போன்ற அலங்கார பொருட்களை சேர்த்து உங்கள் வீட்டின் அழகை மெருகேற்றுங்கள்.

அழுக்கு கூடை

அழுக்கு கூடை

மாதக் கணக்கில் துவைக்காமல் வீடு முழுவதும் சிதறிக் கிடக்கும் அழுக்கு துணிகளை போட்டு வைக்க ஒரு அழுக்கு துணி போட்டு வைக்கும் கூடையை வாங்கி வையுங்கள். வீடு முழுவதம் பரவி இருக்கும் துணிகள் அதனுள் சிறைப்பிடிக்கபட்டுவிட்டாலே பேச்சுலர் வீடு பாதி அழகாகிவிடும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

How to Decorate a Small Bachelor Home Beautifully

Do you know how to decorate small bachelor home beautifully? read here.
Story first published: Thursday, April 16, 2015, 18:09 [IST]
Desktop Bottom Promotion