For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

காதலர் தினத்திற்கு படுக்கை அறையை ரொமான்ஸாக அலங்கரிக்க சில டிப்ஸ்...

By Maha
|

உலகம் முழுவதும் பிப்ரவரி 14 ஆம் தேதி கொண்டாடப்படும் காதலர் தினத்தன்று, காதலர்கள் மட்டுமின்றி, திருமணமான அனைவரும் கொண்டாடுவார்கள். ஆனால் இதில் ஒரு வித்தியாசம் என்னவென்றால், திருமணமானவர்கள் தங்களது காதலர் தினத்தை படுக்கை அறையில் படு ரொமான்ஸாக கொண்டாடுவார்கள். அப்படி இந்த வருட காதலர் தினத்தை அட்டகாசமாக கொண்டாட வேண்டுமானால், முதலில் படுக்கை அறையை ரொமான்ஸாக அலங்கரிக்க வேண்டும்.

அதிலும் காதலைக் குறிக்கும் சிவப்பு நிறத்தைக் கொண்டு படுக்கை அறையை அலங்கரித்தால், அறையானது படு ஹாட்டாக இருக்கும். இதனால் ரொமான்ஸ் இன்னும் சூப்பராக இருக்கும். இங்கு அப்படி படுக்கை அறையை படு ரொமான்ஸாக அலங்கரிக்க சில டிப்ஸ்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அதைப் படித்து, அதன் படி அலங்கரித்து காதலர் தினத்தை மகிழ்ச்சியாக கொண்டாடுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மெழுகுவர்த்திகள்

மெழுகுவர்த்திகள்

படுக்கை அறை மிகுந்த ரொமான்ஸாக இருக்க வேண்டுமானால், அங்கு நிச்சயம் மெழுகுவர்த்திகள் இருக்க வேண்டும். அப்படி படுக்கை அறையை சிவப்பு நிற மெழுகுவர்த்திகளால் அலங்கரியுங்கள். ஒருவேளை வெள்ளை நிற மெழுகுவர்த்தி தான் இருக்கிறதென்றால், மெழுகுவர்த்தியின் மேல் சிவப்பு நிற ரிப்பனை கட்டிவிடுங்கள்.

உலர்ந்த ரோஜாப்பூ இதழ்கள்

உலர்ந்த ரோஜாப்பூ இதழ்கள்

படுக்கை அறை நல்ல மணத்துடன் இருக்க, படுக்கை அறையில் நறுமணமிக்க மெழுகுவர்த்திகளுடன், பாட்பூரி என்னும் உலர்ந்த ரோஜா இதழ்களை அறையின் தரையில் தூவிவிடுங்கள். இது நறுமணமிக்கதாக இருப்பதுடன், ரொமான்ஸையும் அதிகரிக்க உதவும்.

திரைச்சீலைகள்

திரைச்சீலைகள்

படுக்கை அறையில் திரைச்சீலைகளை தொங்கவிடுவதும் ரொமான்ஸை அதிகரிக்க உதவும். அதிலும் சிவப்பு நிறத்தில் உள்ள லேஸ் அல்லது சாட்டின் திரைச்சீலைகளையோ வாங்கிப் பயன்படுத்துங்கள்.

கார்டுகள்

கார்டுகள்

உங்கள் துணையிடம் உங்கள் காதலை தெரிவிக்க படுக்கை அறையில், அருமையான காதல் வாக்கியம் எழுதிய கார்டுடன், ஒரு பாக்ஸ் ஸ்ட்ராபெர்ரி ப்ளேவர் சாக்லெட்டுகளை, பெட் மீது வைத்துவிடுங்கள். அதுவும் அவர் படுக்ரக அறையில் நுழையும் போது கண்ணில் படுமாறு வையுங்கள். இது அவரது மனதில் அன்பை அதிகரித்து, உங்கள் மீது முத்த மழையைப் பொழிய வழிவகுக்கும்.

ஒயின்

ஒயின்

ஒயின் ஒரு சிறப்பான பாலுணர்வைத் தூண்டும் பானம். எனவே படுக்கை அறையை அலங்கரிக்கும் போது, ஒரு பாட்டில் ஒயினையும் சேர்த்துக் கொள்ளுங்கள்.

குஷன்

குஷன்

படுக்கை அறையை அலங்கரிக்க தேவைப்படும் பொருட்களில் ஒன்று தான் குஷன். எனவே சில்க் அல்லது மொசுமொசுவென்று இருக்கும் சிவப்பு நிற குஷன்களை வாங்கிப் பயன்படுத்துங்கள்.

ரோஜாப்பூ இதழ்கள்

ரோஜாப்பூ இதழ்கள்

படுக்கையில் ரோஜாப்பூ இதழ்களை பரப்பிவிடுங்கள். இதை விட ரொமான்ஸை அதிகரிக்கும் சிறப்பான வழி வேறு ஏதும் இல்லை.

சாடின் தாள்கள்

சாடின் தாள்கள்

காதலர் தினத்திற்கு படுக்கை அறையை அலங்கரிக்கும் போது, பளபளப்பான சாடின் தாள்களை தரையில் படுக்கை அறையின் தரையில் பயன்படுத்துங்கள்.

டைனிங் டேபிள்

டைனிங் டேபிள்

உங்கள் படுக்கை அறையில் டைனிங் டேபிள் இல்லாவிட்டால், காதலர் தினத்தன்று மட்டும் டைனிங் டேபிளை அமைத்து, அதில் மெழுகுவர்த்தி ஒளியில் இரவு உணவை உண்ணுங்கள். இது இன்னும் சூப்பராக இருக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Red Hot Bedroom Decor For Valentines Day

Boldsky has put together some of the best Valentine's day decoration ideas to turn your bedroom red! These red bedroom decoration ideas will add to your special day of love. So, what are you waiting for? Take a look at some of the bedroom decoration ideas you can add to your special room in the house:
Story first published: Thursday, February 13, 2014, 17:50 [IST]
Desktop Bottom Promotion