For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

லிவ்விங் ரூமை அலங்கரிக்க சில டிப்ஸ்...

By Maha
|

புதிய வீடுகளுக்கு சென்று விட்டு, பொருட்களை எந்தெந்த இடத்தில் வைக்கலாம் என்று யோசித்து வைப்பதற்குள் பெரும் பாடாக இருக்கும். குறிப்பாக, ஷோபா, டேபிள், டிவி போன்றவற்றை லிவ்விங் ரூம் எனப்படும் ஹாலில் எந்த இடத்தில் வைத்தால் பொருத்தமாக இருக்கும் என்பதில் குழப்பம் இருக்கும். இவ்வாறு குழப்பம் இருந்தால், அவர்களுக்கு ஒருசில டிப்ஸ்களுடன் கூடிய படங்களை உங்களுக்காக கொடுத்துள்ளோம். அதைப் பார்த்து, உங்கள் வீட்டை அழகாக அலங்கரித்து மகிழுங்கள்.

அந்த படங்களில் நிறைய ஷோபா, டேபிள், திரைச்சீலைகள், கார்பெட் போன்றவற்றை பயன்படுத்தி அலங்கரிக்கப்பட்டிருக்கும். இத்தகைய பொருட்களின் விலை அதிகமாகவும் இருக்கும், குறைவாகவும் இருக்கும். எனவே உங்களின் பட்ஜெட்டிற்கு ஏற்றவாறு வாங்கி, உங்கள் வீட்டு லிவ்விங் ரூம்மை அலங்கரியுங்கள். ஏனெனில் நாம் வீட்டில் உள்ள அறைகளிலேயே ஹாலில் தான் நிறைய நேரம் இருப்போம். அத்தகைய இடம் நன்கு அழகாகவும், மனதை அமைதிப்படுத்தும் வகையிலும், அலங்கரித்தால் மனம் ரிலாக்ஸ் அடைவதோடு, வீட்டிற்கு வருபவர்களும் உங்களது அலங்கரிப்புகளைப் பார்த்து பாராட்டுவார்கள்.

சரி, இப்போது அந்த லிவ்விங் ரூம் அலங்கரிப்புகளில் சிலவற்றைப் பார்ப்போமா!!!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மரக்கட்டை தீம் லிவ்விங் ரூம்

மரக்கட்டை தீம் லிவ்விங் ரூம்

இந்த வகையான லிவ்விங் ரூம்மில் மரத்தாலான நாற்காலிகள், ஷோபாக்கள் என்று வைத்தால், அவை பார்ப்பதற்கு சிம்பிளாக இருந்தாலும், சூப்பராக நீண்ட நாட்கள் அழகாக காணப்படும்.

ஆரஞ்சு மற்றும் மஞ்சள் நிற தீம்

ஆரஞ்சு மற்றும் மஞ்சள் நிற தீம்

இந்த தீம்மில் நல்ல பளிச்சென்று இருக்கும் நிறங்களான ஆரஞ்சு மற்றும் மஞ்சள் நிறங்களால் அலங்கரிக்க வேண்டும். அதிலும் வெள்ளை நிற ஷோபாவில் ஆரஞ்சு நிற குஷன், திரைச்சீலைகளால் அலங்கரித்து, சுவர்களில் மஞ்சள் நிற பெயிண்ட் அடித்திருப்பது, அந்த ரூம்மையே பளிச்சென்று காட்டுகிறது.

விசாலமான லிவ்விங் ரூம்

விசாலமான லிவ்விங் ரூம்

இதில் நல்ல கற்பனைத் திறத்துடன், ஹாலை நன்கு வடிவமைத்து கட்டி, மாடிப் படிகளை அழகாக வளைத்து கட்டியிருப்பது, மிகுந்த அழகைத் தருகிறது. மேலும் இந்த டிசைனில் மாடிப்படியின் அடியில் டிவியை வைத்து, அந்த டிவிக்கு நேராக அழகான ஷோபாவை வைத்திருப்பது சூப்பர்.

வித்தியாசமான தீம்

வித்தியாசமான தீம்

இதில் பார்ப்பதற்கு வித்தியாசமாக, சாம்பல் நிறத்தில் சுவரையும், ஷோபாவையும் வைத்து, அதில் சிவப்பு நிற குஷன் வைத்திருப்பது, சூப்பராக உள்ளது.

வெளிப்புற லிவ்விங் ரூம்

வெளிப்புற லிவ்விங் ரூம்

நன்கு பச்சை பசேலென்று அழகாகவும் காற்றோட்டத்துடனும் இயற்கையை ரசிக்கும் வகையில் இருப்பதற்கு, இந்த மாதிரி அலங்கரிக்கலாம். இந்த வகையான அலங்கரிப்பில் மனமானது நன்கு ரிலாக்ஸ் ஆகும்.

ராயல் தீம்

ராயல் தீம்

லிவ்விங் ரூம் நன்கு பெரியதாகவும், அங்கு அழகாக ஒரு மீன் தொட்டியை வைத்தும், அலங்கரித்தால், இது பார்ப்பதற்கு ஒரு ராயல் லுக்கைத் தரும். அதிலும் கார்பெட், ஷோபா போன்றவை ப்ரௌன் நிறத்தில் இருந்தால், அதன் அழகே தனி.

லிவ்விங் மற்றும் பெட்ரூம்

லிவ்விங் மற்றும் பெட்ரூம்

ஒரு வேளை சிறிய அபார்ட்மெண்ட்டில் தங்கியிருந்தால், அதற்கு இந்த வகையான அலங்கரிப்பு சரியாக இருக்கும். ஏனெனில் இதில் ஒரே அறையில் ஹால் மற்றும் படுக்கையறை உள்ளது. இந்த இரண்டிற்கும் ஒரு தடுப்புச் சுவராக ஒரு சிறிய சுவருடன் கூடிய மேசை வைக்கப்பட்டுள்ளது.

அடக்கமான மற்றும் வசதியான லிவ்விங் ரூம்

அடக்கமான மற்றும் வசதியான லிவ்விங் ரூம்

நன்கு அடக்கமாகவும், வசதியாகவும் இருக்க வேண்டுமெனில் அதற்கு இந்த மாதியான தீம் சரியானதாக இருக்கும். இதில் ஸ்பாஞ்ச் போன்ற ஷோபாவை, கண்ணாடி ஜன்னலின் அருகில் மட்டும் வைத்து அலங்கரித்தால் போதுமானது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Ideas For A Perfect Living Room | லிவ்விங் ரூமை அலங்கரிக்க சில டிப்ஸ்...

Decorating your living room becomes really troublesome. It is most common for new householders. This is because you get confused thinking where to place the sofa set, where to keep the side tables, how and which type of furniture will go with the theme of the room etc. So, to help you decorate your living room with creative ideas, here are a few excellent pictures to guide you.
Desktop Bottom Promotion