For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

அட்சய திருதியை வீட்டு அலங்காரம்!

அட்சய திருதியை அன்று வீட்டை சுத்தம் செய்து, மாவிலை தோரணங்களால் அலங்கரித்து, பூஜை அறையை அலங்கரித்து தானம் செய்ய வேண்டும் என்று முன்னோர்கள் தெரிவித்துள்ளனர்.

By Super Admin
|

laksmi kubera
அட்சய திருதியை என்பது செல்வ வளம் தரும் நாளாக போற்றப்படுகிறது. அன்றைய தினம் மகாலட்சுமி அனைவரின் வீட்டிற்கும் வருகிறாள் என்பது ஐதீகம். அட்சய திருதியை அன்று வீட்டை சுத்தம் செய்து, மாவிலை தோரணங்களால் அலங்கரித்து, பூஜை அறையை அலங்கரித்து தானம் செய்ய வேண்டும் என்று முன்னோர்கள் தெரிவித்துள்ளனர். அட்சய திருதியை அலங்காரம் குறித்து ஜோதிடர்கள் கூறிய கருத்துக்களை படியுங்களேன்.

அட்சய திருதியை அன்று தங்கம் பிளாட்டினம் வாங்க வேண்டும் என்று விளம்பரப்படுத்தப்படுகிறது. ஆனால் அன்றைய தினம் முனை முறியாத பச்சரிசி வாங்குவது நல்லது. கைக்குத்தல் அரி‌சிதான் முனை முறியாத அரிசி. அந்த முனை முறியாத அரிசியை புடைத்து எடுத்து, பணப் பெட்டியில், பீரோவில் கொஞ்சம் வைப்பது நல்லது.

லட்சுமி குபேரர்

பூஜை அறையில் மகாலட்சுமி, குபேரர் படங்கள் இருந்தால் மஞ்சள் மலர்கள், அல்லது மல்லிகை மலர்களால் அலங்கரித்து அந்த படத்தின் முன் படியில் குத்தரிசியை நிரப்பி வைக்கலாம். இதனால் வீட்டில் செல்வம் பெருகும்.

மஞ்சள் மகிமை

மங்களகரமானது மஞ்சள். இதில் அனைத்து மகிமையும் உள்ளது. இதில் கஸ்தூரி மஞ்சள் என்று ஒன்று இருக்கிறது. அதற்கு தனி சக்தி உண்டு. மஞ்சள் பொடியாகவும் வாங்கலாம், மஞ்சள் கிழங்காகவும் வாங்கலாம்.

தானம் செய்தல்

அட்சய திருதியை அன்றைக்கு தானம் செய்யுங்கள் என்றுதான் சொல்கிறது. அன்னதானம் செய்யுங்கள், வஸ்திர தானம் துணி தானம் கொடுங்கள். அதாவது அடுத்தவர்கள் பயன்படுத்தக்கூடிய பொருட்களை கொடுக்க வேண்டும். காசாக கொடுக்கக்கூடாது. அவர்களுடைய தேவை என்னவோ அதை பூர்த்தி செய்யக்கூடிய பொருட்களை வாங்கிக் கொடுக்க வேண்டும் என்று வேதங்கள் என்ன சொல்கிறது, உத்திர கால விரதம் என்ற நூலில் கூட இது பற்றி சொல்லப்பட்டுள்ளது . எனவே கடைக்கு சென்று ஆடைகளை வாங்கி பூஜை அறையில் வைத்து தானம் செய்யுங்கள்.

காய்கறிகள்

அட்சய திருதியை அன்றைக்கு திதி கொடுக்க வேண்டும். முன்னோர்களை நினைத்து மந்திரங்கள் சொல்லி திதி கொடுக்க வேண்டும். அப்போது வாழைக்காய், பச்சரிசி, துணி, பணம் ஆகியவற்றை தானம் தரலாம்.

வெள்ளி அலங்காரம்

தங்கத்தை விட வெள்ளிதான் உயர்வானது என்று நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. தங்கம் என்பது லட்சுமியின் ஒரு அம்சம் என்றாலும் வெள்ளியால் பூஜை அறையை அலங்கரிக்கலாம். தங்கம் வாங்கினால்தான் நல்லது என்பது தவறு. அதற்குப் பதிலாக முனை முறியாத பச்சரிசி, மஞ்சள், வெள்ளி போன்ற பொருட்களெல்லாம் பூஜை அறையில் வாங்கி வைக்கும் போது நிச்சயம் லட்சுமி கடாட்சம் உண்டாகும். அனைவரின் வீட்டிலும் மகாலட்சுமி குடிபுகுவாள் என்பது நிச்சயம்.

English summary

Decoration of Akshaya Trithiya | அட்சய திருதியை வீட்டு அலங்காரம்

"Akshaya Tritiya", the third day of the new moon, It is considered one of the most sacred days of the year. The word Akshaya' means that which never diminishes. Akshaya Tritiya is considered the most auspicious day to invest in gold. The Hindus believe gold brings luck and eternal success.
Desktop Bottom Promotion