For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கோடையில் உற்சாகம் தரும் சமையலறை அலங்காரம்!

By Mayura Akilan
|

Kitchen
சமையல் என்பது அனைவருக்குமே சந்தோசம் தரும் விசயமல்ல. கோடை காலத்தில் சமையலறைக்குள் நுழையவே பலரும் அஞ்சுவார்கள். வியர்வை, எரிச்சல் என பலருக்கும் அலர்ஜியான விசயம். எனவே சமையலறையை நமக்கேற்றதாக அலங்கரிப்பதன் மூலம் உற்சாகமாக சமைக்கலாம்.

நாம் நம் சமையலறையை அலங்கரிப்பதன் மூலம் ஆர்வத்துடனும், ஆசையுடனும் சமைக்க தோன்றும். சில வர்ணங்களையும் பூக்களையும் பயன்படுத்தி சமையலறையை அலங்கரிக்கலாம் என்று ஆலோசனை கூறுகின்றனர் உள் அலங்கார நிபுணர்கள்.

உற்சாகம் தரும் வர்ணங்கள்

கோடையில் நம் சமையலறையில் உள்ள சுவற்றின் வர்ணத்தை நமக்கு பிடித்தவாறு மாற்றலாம். அதுவும் மஞ்சள்,ஆரஞ்சு,சிவப்பு போன்ற வெளிர் நிறங்கள் மிகவும் சிறந்ததாக இருக்கும். மேலும் நாம் சமையலறையில் உள்ள ஜன்னல்களில் அழகிய வண்ணங்களுடன் கூடிய பூ ஜாடிகளையும் உபயோகித்து அலங்கரிக்கலாம்.

பழக்கூடை அலங்காரம்

இது அலங்காரம் மட்டுமல்ல ஆரோக்கியத்தோடும் தொடர்புடையது. கோடையில் நாம் பழங்களை அதிகம் வாங்கி விரும்பி சாப்பிடுவோம், அத்தகைய பழங்களை பழக்கூடையில் அழகாக அடுக்கி டைனிங் டேபிளில் வைக்கலாம்.

சமையலறை சாதனங்கள்

சமையலறையில் ஆர்வத்தை தூண்டும் மற்றொரு அம்சம் நாம் உபயோகப்படுத்தும் பொருட்கள். இந்த பொருட்களை ஆங்காங்கே அலங்காரமாக வைப்பதன் மூலம் கோடையில் சமையல் எளிதாகும்.

வீட்டுத் தாவரங்கள்

போன்சாய் மரங்களை சமையலறையில் சிறு பாத்திரங்களில் வைத்து அலங்கரிக்கலாம்.அதேபோல் மனதைக் கவரும் மலர் தொட்டிகளை கிச்சன் கார்டனில் வைக்கலாம். பசுமையான நிறங்களும், மணம் நிறைந்த மலர்களும் சமையலறைக்குள் அழைத்துச் செல்லும்.

இந்த கோடையில் உள் அலங்கார நிபுணர்கள் கூறிய ஆலோசனைகளை பின்பற்றுங்களேன். உங்கள் வீட்டு சமையலறையில் சங்கீதம் கேட்கும்.

English summary

Decor Ideas For Summer Kitchen! | கோடையில் உற்சாகம் தரும் சமையலறை அலங்காரம்!

Changed the look of the house? What about your kitchen? You can decorate your kitchen this summer with bright colours and accessories. With the seasonal and climate change, you can easily set up a theme. Renovate your kitchen this summer with these cheap decor ideas.
Story first published: Tuesday, April 24, 2012, 15:53 [IST]
Desktop Bottom Promotion