For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கண்ணாடியை எப்படியெல்லாம் அலங்கரிக்கலாம்!!!

By Maha
|

Mirror
கண்ணாடியை அலங்கரித்து வீட்டை அழகுபடுத்துவது என்பது ஒரு சிறந்த வழி. அப்படி கண்ணாடியை அலங்கரித்து அறையில் மாட்டும் போது, அறையானது பார்க்க பிரகாசத்துடன், பார்க்க அழகாக, நமக்கே நம் வீடு ஒரு சொர்க்கம் போல இருக்கும். இப்படி கண்ணாடியை அலங்கரிக்க நம்மால் வாங்க முடிந்த விலைக் குறைவான பொருட்களை வைத்தே செய்யலாம். இதற்கு வீட்டு உள் அலங்கார நிபுணர்கள் சொல்லும் ஆலோசனைகளை பின்பற்றி பாருங்கள். உங்கள் வீடும் அழகாய் அற்புதமாய் மாறும்.

கண்ணாடியை எப்படி அலங்கரிக்கலாம்?

கண்ணாடியில் பெயிண்டிங் செய்யலாம். பெயிண்டிங் செய்வதற்கு மார்க்கர் அல்லது டென்சில் கொண்டு முனைகளில் பார்டர் வரையலாம். மேலும் பெயிண்ட் மார்க்கர் கொண்டு வரையும் போது சற்று கவனமாக வரையவும். ஏனென்றால் தவறாக வரைய நேர்ந்தால் அதை அழிக்க முடியாது. ஆகவே ஒரு சில டெக்னிக் பயன்படுத்தி வரையலாம்.

கண்ணாடியை அலங்கரிப்பதில் மிகவும் ஈஸியானது அதற்கு பார்டர் அமைப்பது. கடைகளில் கிடைக்கும் உட் அல்லது மெட்டல் ஃப்ரேம்களை வாங்கியும் கண்ணாடியில் பொருத்தலாம். அப்படி முடியவில்லை என்றால் வீட்டில் உள்ள கண்ணாடியின் நீள, அகலங்களை அளந்து கண்ணாடி வடிவமைப்பாளரிடம் கொடுத்தும், வேண்டிய டிசைனை அவரிடம் சொல்லியும், கண்ணாடிக்கு ஃப்ரேம் பொருத்தலாம்.

கண்ணாடிக்கு தொங்கும் திரை சீலை அமைத்தும் அலங்கரிக்கலாம். இப்படி அறையில் இருக்கும் கண்ணாடி தேவையில்லாமல் தெரிய வேண்டாம் என்று நினைப்பவர்கள், அதை மறைக்க திரை அமைக்கலாம். அப்படி திரை அமைக்கும் போது துணியானது நமக்குப் பிடித்த டிசைனில் இருந்தால் நல்லது. மேலும் அந்த துணியில் எம்ப்ராய்டரி போட்டு இருந்தால் இன்னும் அழகாக இருக்கும்.

மேலும் கண்ணாடியில் கலர் கலரான மணிகளை வைத்தும் தனது கற்பனைத் திறத்தால் அதன் முனைகளை அலங்கரிக்கலாம் அல்லது ஏதேனும் ஒரு படத்தை வரைந்து அதன் மேல் மணிகளைப் பதிக்கலாம்.

English summary

creative ideas to decorate your plain mirror | கண்ணாடியை எப்படியெல்லாம் அலங்கரிக்கலாம்!!!

Decorating mirror is a wonderful way to make your house appear bright and attractive. They are inexpensive and this decorative item can be used to add a dramatic effect to your room. Decorative mirrors are a fantastic way to add extra effect and utilise the empty wall space gracefully. Artfully decorated mirror can be a great idea for a new interior look.
Story first published: Saturday, June 2, 2012, 10:28 [IST]
Desktop Bottom Promotion