Latest Updates
-
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா?
மூங்கில் செடியை எப்படி பாத்துக்கலாம்!!!

மூங்கில் செடியை எப்படி பாதுகாக்கலாம்?
மூங்கில் செடிக்கு முக்கியமே தண்ணீர் தான். மூங்கில் செடி ஈரப்பதமான சூழலில் நன்கு செழிப்போடு, அதிலும் களிமண்ணில் வளரும். அப்படி களிமண்ணில் மூங்கில் செடியை வைக்கும் முன், தண்ணீரை முன்பே ஊற்றி வைத்துவிட வேண்டும். ஏனென்றால் களிமண் போதிய நீரை மட்டுமே உறிஞ்சும். அப்படி அந்த மண்ணில் செடியை வைத்தப் பின் சுற்றி செங்கற்களை வைக்க வேண்டும். இதனால் நீரானது வெளியில் செல்லாமல் மூங்கில் வளர்வதற்கு ஏற்றவாறு இருக்கும்.
வீட்டில் செல்லப்பிராணிகள் இருந்தால் மூங்கில் செடியை சாப்பிடாமல் பத்திரமாக பார்த்துக் கொள்ளுங்கள். ஏனென்றால் அதில் டாக்ஸிக் ஆசிட் இருக்கிறது, இது விஷதன்மை வாய்ந்தது. இதனால் செல்லப்பிராணிகளை அதற்கு எட்டும் வகையில் வைக்காதீர்கள்.
மூங்கில் செடியை எப்போதும் தண்ணீரிலேயே வையுங்கள். தினமும் அதற்கு தண்ணீர் மாற்றுங்கள். தண்ணீரானது மூங்கிலின் அடியிலிருந்து 1 இன்ச் மேல் வரை இருக்க வேண்டும்.
சிறிய மூங்கில் செடியாய் இருந்தால் நேரடியாக சூரிய ஒளியானது செடியில் படாமல் வைத்திருக்க வேண்டும். அதுவே அதன் வளர்ச்சிக்கு நல்லது.
மூங்கில் செடி ஒரு அடிக்கு மேல் வளர்ந்திருந்தால், அப்போது தினமும் அதன் மேல் 30 45 நிமிடம் சூரிய ஒளி படுமாறு வைக்கலாம்.
மேலும் மாதத்திற்கு ஒரு முறை உரம் போட வேண்டும். ஏனென்றால் அது எப்போதும் நீரில் இருப்பதால் அதை பாக்டீரியா தாக்க வாய்ப்பு இருக்கிறது. ஆகவே மறக்காமல் உரம் போட வேண்டும்.
சில சமயங்களில் மூங்கில் இலையானது மஞ்சள் நிறத்தில் மாறும். அப்படி அது மாறுகிறதென்றால், அது அளவுக்கு அதிகமாக சூரிய ஒளியில் இருப்பதாலும், தண்ணீர் சுத்தமாக இல்லாததாலுமே அதன் நிறம் மாறுகிறது. ஆகவே கவனமாக பார்த்துக் கொள்ளவும்.
மேற்சொன்னவாறு பின்பற்றி பாருங்கள், மூங்கில் செடி நன்கு செழிப்போடு நீண்ட நாட்கள் இருக்கும்.



Click it and Unblock the Notifications