For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வீட்டை அலங்கரிக்க 10 'பளிச்' ஐடியாக்கள்!

By Mayura Akilan
|

Home Decorating ideas
வீட்டை அலங்கரிப்பது சிறந்த கலை. சிறிய வீடோ, பெரிய வீடோ இருக்கும் இடத்திற்கு ஏற்ப சின்ன, சின்னதாய் அலங்கரித்தால் மனத்திற்கு பிடித்த மாதிரி வீடு அழகாகும்.

சுத்தமான வீடு

வீட்டை சுத்தமாக வைத்திருந்தாலே அழகுதான். சின்ன குழந்தைகள் இருந்தால் கண்டதையும் எடுத்து கொட்டி கவிழ்த்து விடுவார்கள். அவ்வப்போது அதை ஒதுக்கி சுத்தம் செய்தால் போதும் வீடு பளிச்தான். அந்தந்த அறைக்கு உரிய பொருட்களை மட்டும் வைத்து கசகச என மற்ற பொருட்களை சேர்த்தாமல் இருந்தாலும் அழகாய் இருக்கும்.

மனம் கவர்ந்த இயற்கை காட்சிகள்

சுவற்றில் படம் வரைவது என்றால் குழந்தைகளுக்கு கொள்ளை இஷ்டம். அதை துடைத்தாலும் போகாது. மனதைக் கவரும் வர்ணங்களும், இயற்கை காட்சிகளும் நிறைந்த பேப்பர்களை ஒட்டலாம்.

குரோட்டன்ஸ் செடிகள்

வீட்டை அழகு படுத்தும் இன்னொரு பொருள் க்ரோட்டன்ஸ் செடி.. என்னதான் செடியில் பூ இருந்து அழகு கொடுத்தாலும், பூக்காத க்ரோட்டன்ஸ் வாங்கி வத்தால் அது ஒரு அழகு தான்.

மீன் தொட்டி வாங்கி வைத்து அதில் கோல்ட் ஃபிஷ் மட்டும் இருந்தால் பார்க்க ரிச் ஆக அழகாய் இருக்கும். பாட் (மண் பானை)பெயிண்டிங்கை வீட்டின் மூலை மற்றும் ஷோ கேஸில் வைத்தாலும் அழகாய் இருக்கும்.

ஆன்மீக ஆலயம்

வீட்டை அழகு படுத்துவதில் பிள்ளையாருக்கு அதிக பங்கு உள்ளது.பிள்ளையார் மட்டும் எந்த வடிவிலும் வேண்டுமென்றாலும் வருவார். அங்கங்கே பிள்ளையார் மார்டன் சிலை இருந்தால் கொள்ளை அழகுதான். ஒரு பெரிய உருளி வாங்கி வைத்து நிறைய பூக்கள் போட்டாலும் அழகாய் இருக்கும்.

எல்லா அறைகளுக்கும் சுவரின் கலருக்கு கான்ட்ராஸ்ட்டான ஸ்க்ரீன் கட்டிவிட்டால் பார்க்க அட்ராக்டிவ் ஆக இருக்கும்.

சுவர்களில் பெரிதாக்கப்பட்ட திருமண ஃபோட்டோ மற்றும் பெயிண்ட்டிங்ஸ் மாட்டலாம். குடும்ப உறவுகளில் ஒரு அட்டாச்மென்ட் ஏற்படும்.

அழகான பர்னிச்சர்கள்

வரவேற்பரையில் எதிரெதிராய் பெரிய சோபாக்களைப் போட்டு வடகிழக்கு மூலையில் சின்னதாய் பவுண்டென் வைத்தால் அழகு அள்ளிக்கொண்டு போகும்.

பாரம்பரியம் மிக்க கலைப் பொருட்கள் மற்றும் கைவினை பொருட்கள் , இந்த காலத்தின் மாடர்ன் ஆர்ட்களையும் அடுக்கும் விதத்தில் அடுக்கினால் பார்க்க நேர்த்தியாக இருக்கும்.

English summary

10 Most Common Home Decorating ideas | வீட்டை அலங்கரிக்க 10 'பளிச்' ஐடியாக்கள்!

Small decorating projects can freshen up your home and be inexpensive. Try one or two of these budget-friendly fixes for an instant update!.
Story first published: Wednesday, May 2, 2012, 18:42 [IST]
Desktop Bottom Promotion