Latest Updates
-
இந்த 5 உணவுகள் உங்கள் உடலில் துர்நாற்றத்தை ஏற்படுத்தி சங்கடமாக உணர வைக்குமாம் - பார்த்து சாப்பிடுங்க -
வாஸ்து செடிகள்: கோடை வெயிலில் வீட்டை குளிர்ச்சியாக வைத்து அதிர்ஷ்டத்தை அள்ளுவது எப்படி? -
சிக்கன் பிரியாணியை விட சூப்பரா இருக்கும் ஆம்பூர் ஸ்டைல் சோயா பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க -
சனிபகவானின் வக்ர பெயர்ச்சியால் 138 நாட்களுக்கு ஜெயிக்கிற குதிரையா மாறப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
சீதா நவமி: உங்கள் வீட்டில் இந்த மாற்றங்களைச் செய்தா பணமழை கொட்டுமா? அதிர்ஷ்டம் தரும் வாஸ்து ரகசியம்! -
கோடையில் இந்த கஞ்சியை தினமும் 1 கப் குடிங்க.. உடல் எடையும் குறையும், உடல் சூடும் தணியும்.. -
இன்றைய ராசிபலன் 25 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ராஜயோகம் கூடிவரப்போகுதாம் -
செவ்வாய் மேஷ ராசிக்கு செல்வதால் கோடீஸ்வர யோகத்தை பெறப்போகும் 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
இந்தியாவின் தேசிய காய் என்று அழைக்கப்படும் காய்கறி எது? அதற்கான காரணம் என்ன தெரியுமா? -
ஏப்ரல் இறுதியில் குரு-புதன் சேர்க்கையால் உருவாகும் அரிய ராஜயோகம்: இந்த 3 ராசிகளின் வருமானம் உயரும்!
தயிரையும், மீனையும் ஒன்னா சாப்பிட்டா வெண்குஷ்டம் வரும் என்பது உண்மையா? டாக்டர் என்ன சொல்றாரு-ன்னு பாருங்க..
World Vitiligo Day 2025: ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 25 ஆம் தேதி விட்டிலிகோ தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. இந்த தினமானது விட்டிலிகோ பிரச்சனை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதை நோக்கமாக கொண்டுள்ளது. விட்டிலிகோ என்பது ஒரு தோல் நோய். இது சருமத்தில் நிறமி இழப்பை ஏற்படுத்தும். புரியும் படி கூற வேண்டுமானால், ஒருவரது தோற்றத்தையே வித்தியாசமாக காண்பிக்கும் அளவிலான ஒருவிதமான சரும பிரச்சனை தான் விட்டிலிகோ.
இந்த விட்டிலிகோவை தான் தமிழில் வெண்குஷ்டம் அல்லது வெண்புள்ளிகள் என்று அழைப்பர். இப்படிப்பட்ட விட்டிலிகோ பிரச்சனை குறித்த ஒருவிதமான மூடநம்பிக்கை காலம் காலமாக மக்கள் மனதில் உள்ளது. அது என்னவென்றால் தயிரையும், மீனையும் ஒன்றாக சாப்பிட்டால் வெண்குஷ்டம் வந்துவிடும் என்பது தான். ஆனால் இது உண்மை தானா என்பது குறித்து டாக்டர் அருண்குமார் தனது சமூகவலைத்தள பக்கத்தில் விரிவாக விளக்கியுள்ளார். வாருங்கள் அது என்னவென்பதைக் காண்போம்.

அதில் அவர் கூறியிருப்பதாவது, "ஆயுர்வேதத்தில் தயிரையும், மீனையும் ஒன்றாக சாப்பிடக்கூடாது என்று கூறப்பட்டுள்ளது. இதற்கு இரண்டு விதமான காரணங்களும் கூறப்படுகின்றன. அதில் ஒன்று தயிர் குளிர்ச்சியான பொருள், மீன் ஒரு அசைவம் மட்டுமின்றி சூடான பொருள். இப்படி குளிர்ச்சியான பொருளையும், சூடான பொருளையும் கலந்து சாப்பிட்டால், அது அஜீரண கோளாறுகளையோ, தோல் பிரச்சனைகளையோ ஏற்படுத்தலாம் என்பது போன்ற கருத்து உள்ளது.
இரண்டாவது, தயிர், மீன் ஆகிய இரண்டுமே புரோட்டீன் நிறைந்தது மற்றும் மிருகங்களிடம் இருந்து பெறக்கூடியது. இப்படி சாப்பிடும் போது அது அஜீரண கோளாறை ஏற்படுத்தலாம். இதுப்போன்ற காரணங்களால் இவ்விரண்டையும் ஒன்றாக சாப்பிடக்கூடாது என்று நம் முன்னோர்களும் கூறியிருக்கலாம்." என்று கூறினார்.
விட்டிலிகோ என்றால் என்ன ?
"அதற்கு முன் விட்டிலிகோ என்றால் என்ன என்பதை ஒவ்வொருவரும் தெரிந்து கொண்டால் தான், உண்மையா இல்லையா என்பது தெரியும். விட்டிலிகோ என்பது ஒரு ஆட்டோ இம்யூன் நோய். அதாவது பொதுவாக நமது சருமத்திற்கு என்று ஒரு நிறம் உள்ளது. இந்த நிறத்திற்கு காரணம் மெலனின் என்னும் நிறமி பொருள். இந்த நிறமியை மெலனோசைட் என்னும் செல்கள் தான் உற்பத்தி செய்கின்றன.
ஆனால் விட்டிலிகோ என்னும் நிலையில், நமது உடலின் நோயெதிர்ப்பு மண்டலம் இந்த மெலனோசைட் செல்களை எதிரியாக கருதி அழித்துவிடும் போது, அந்த அழிக்கப்பட்ட மெலனோசைட் செல்கள் இருந்த பகுதி நிறமிழந்து வெள்ளைத்திட்டுக்களாக காட்சியளிக்கும். இப்படிப்பட்ட சூழ்நிலையில் மீனையோ, தயிரையோ ஒன்றாக உட்கொண்டால், விட்டிலிகோ வருமா என்றால், அதற்கான அறிவியல் ஆதாரங்கள் ஏதும் இல்லை.
சில சமயங்களில் சில வகையான ஆட்டோ இம்யூன் நிலைமைகள் சில வகையான உணவுகளால் தூண்டப்படலாம். பொதுவாக ஆட்டோ இம்யூன் பிரச்சனைகள் உள்ளவர்களை கோதுமை, பால் பொருட்கள், நட்ஸ் போன்றவற்றை அதிகம் உட்கொள்ள வேண்டாம் என்று மருத்துவர்கள் கூறுவார்கள்.
எனவே இதை வைத்து, கற்பனை செய்து தயிரையும், மீனையும் ஒன்றாக உட்கொள்ளக்கூடாது என்று முடிவெடுக்க வேண்டாம். மொத்தத்தில் தயிரையும் மீனையும் ஒன்றாக உட்கொண்டால் விட்டிலிகோ வரும் என்பதில் எந்தவிதமான அறிவியல் உண்மையும் கிடையாது. தாராளமாக இரண்டையும் சேர்த்து சாப்பிடலாம்" என்று டாக்டர் அருண்குமார் கூறியுள்ளார்.
எனவே நண்பர்களே! இதுவரை உங்கள் மனதில் இப்படியொரு கருத்து இருந்தால், அதை தூக்கி எறிந்துவிட்டு, தயிர் சாதத்திற்கு மீன் வறுவலை சைடு டிஷ்ஷாக எடுத்துக் கொள்ளுங்கள்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications