எச்சரிக்கை! இந்த 8 அறிகுறிகள் தெரிஞ்சா.. உடனே டாக்டரை பாருங்க.. அது கணைய புற்றுநோயின் அபாய அறிகுறியாம்!

World Pancreatic Cancer Day 2025: புற்றுநோய் மிகவும் கொடியது என்பதை அறிவோம். அந்த புற்றுநோய்களிலேயே கணைய புற்றுநோய் மிகவும் சவாலான ஒன்றாகும். இந்த வகை புற்றுநோயை ஆரம்பத்திலேயே கண்டறிவது சற்று கடினம். ஒவ்வொரு ஆண்டும் இந்த கணைய புற்றுநோயால் உலகளவில் ஆயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்படுகின்றனர்.

இந்த கணைய புற்றுநோய் குறித்த போதுமான விழிப்புணர்வு இல்லாத காரணத்தினால், பெரும்பாலானோர் மேம்பட்ட நிலையில் மருத்துவரை அணுகி சிகிச்சை பெறுகின்றனர். இப்படிப்பட்ட கணைய புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்த ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மாதத்தில் வரும் 3 ஆவது வியாழக்கிழமை உலக கணைய புற்றுநோய் தினம் அனுசரிக்கப்படுகிறது.

World Pancreatic Cancer Day 2025 Doctor Lists Warning Signs of Pancreatic Cancer

இந்த நாளில் கணைய புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு பிரச்சாரங்கள் ஆங்காங்கு நடத்தப்படும். இன்று உலக கணைய புற்றுநோய் தினம் என்பதால் இந்நாளை முன்னிட்டு, கணைய புற்றுநோய் என்றால் என்ன, அதன் ஆரம்ப கால எச்சரிக்கை அறிகுறிகள் மற்றும் காரணங்கள் என்ன என்பது குறித்து டாக்டர் கார்த்திகேயன் தனது சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்து கொண்டார்.

கணைய புற்றுநோய்

அதில் அவர் கூறியதாவது, "கணையம் என்பது நமது உடல் உள்ளுறுப்புகளில் மிகவும் முக்கியமான உறுப்பாகும். இது நமது அடிவயிற்றுக்கு நேராக பின்புறத்தில் அமைந்துள்ளது. இந்த கணையத்தில் இருந்து தான் நமது உடலுக்கு தேவையான இன்சுலின் மற்றும் குளுக்கானை உற்பத்தி செய்யும் ஹார்மோன்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இது பாதிக்கப்படும் போது தான் சர்க்கரை நோய் வருகிறது.

World Pancreatic Cancer Day 2025 Doctor Lists Warning Signs of Pancreatic Cancer

தற்போது சர்க்கரை நோய் பரவலாக அனைவருக்கும் இருப்பதை அறிவோம். ஆனால் சமீப காலமாக கணைய புற்றுநோயாளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கணையம் என்பது பஞ்சு போன்ற ஒரு உறுப்பு. இதில் புற்றுநோய் வருவது என்பது மிகவும் ஆபத்தானது.

ஏனெனில் கணையத்தில் இருந்து உடலுக்கு வேண்டிய மிகவும் முக்கியமான ஹார்மோன்களும், நொதிகளும் உற்பத்தி செய்யப்படுகின்றன. இந்த கணையத்தை பாதுகாக்கும் விதத்தில் எந்த ஒரு உறை போன்ற அமைப்பும் இல்லை. எனவே இந்த கணையத்தில் வரும் புற்றுநோயை ஆரம்பத்திலேயே கண்டறிந்து சிகிச்சை மேற்கொள்ள வேண்டியது முக்கியம்" என்று டாக்டர் கூறினார்.

கணைய செல்கள்

"கணையத்தில் இரண்டு விதமான முக்கிய செல்கள் உள்ளன. அவை எக்ஸோகிரைன், எண்டோகிரைன் ஆகும்.

* எக்ஸோக்ரைன் - செரிமான மண்டலத்திற்கு தேவையான லைபேஸ், அமைலேஸ் போன்ற நொதிகளை உற்பத்தி செய்யக்கூடிய செல்கள் ஆகும்.
* எண்டோக்ரைன் - க்ளுக்ககான், இன்சுலின் போன்ற ஹார்மோன்களை உற்பத்தி செய்யக்கூடிய செல்கள் ஆகும்.

புற்றுநோய் வரக்கூடிய சாத்தியக்கூறுகள் இரண்டும் ஒரே இடத்தில் இருப்பதால், கணையத்தில் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புக்கள் அதிகம் உள்ளன" என்று டாக்டர் கூறினார்.

World Pancreatic Cancer Day 2025 Doctor Lists Warning Signs of Pancreatic Cancer

கணைய புற்றுநோயின் எச்சரிக்கை அறிகுறிகள்

"பொதுவாக கணைய புற்றுநோய்களை அவற்றின் அறிகுறிகளைக் கொண்டு மட்டும் கண்டுபிடிப்பது என்பது சற்று கடினம் தான். இருப்பினும் சில அறிகுறிகள் தொடர்ந்தோ அல்லது ஒன்றிணைந்தோ தெரிந்தால், உடனே மருத்துவரை அணுகி பரிசோதனை செய்து, சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். அந்த அறிகுறிகளாவன:

1. குமட்டல் மற்றும் வாந்தி உணர்வு
2. திடீர் எடை இழப்பு
3. சருமம் மஞ்சள் நிறத்தில் மாறுவது
4. பசியின்மை
5. இரத்தம் உறைதல் பிரச்சனைகள்
6. அதீத சோர்வு
7. அடிவயிற்று வலி
8. அடர் நிறத்தில் சிறுநீர் வெளியேறுவது

இந்த 8 அறிகுறிகளும் சேர்ந்து இருந்தால், ஒருவேளை கணைய புற்றுநோய் இருப்பதற்கான வாய்ப்புக்கள் இருக்கலாம்" என்று டாக்டர் கார்த்திகேயன் கூறினார்.

கணைய புற்றுநோய்க்கான காரணங்கள்

கணைய புற்றுநோய்க்கான முக்கிய காரணியே மரபணுக்கள் தான். குடும்பத்தில் யாருக்கேனும் கணைய புற்றுநோய் வந்திருந்தால், அவர்களுக்கு வரலாம். பரம்பரை காரணங்கள் இல்லாமல், உடல் பருமன், புகைப்பிடிப்பது, சர்க்கரை நோய், கெமிக்கல் கலந்த உணவுகளை அதிகம் உட்கொள்வது போன்றவற்றாலும் கணைய புற்றுநோய் உண்டாகலாம் என்று டாக்டர் கூறினார்.

World Pancreatic Cancer Day 2025 Doctor Lists Warning Signs of Pancreatic Cancer

எப்படி கண்டறிவது?

"கணைய புற்றுநோயை கண்டறிய இரத்த பரிசோதனைகள், எம்ஆர்ஐ ஸ்கேன்கள், அல்ட்ரா சவுண்ட் பரிசோதனைகள் மூலம் தெரிந்து கொள்ளலாம். அதுவும் கணைய புற்றுநோய் ஒருவருக்கு எடுத்த எடுப்பிலேயே வந்துவிடாதாம். இது வருவதற்கு மிக நீண்ட காலம் எடுக்கும்.

அதில் பொதுவாக 11.7 வருடம் கணைய புற்றுநோய் வருவதற்கான சாத்தியக்கூறுகள் இருக்கும் காலமாகும். இதை ஸ்டேஜ் 0 என்பர். இக்காலத்தில் புற்றுநோய் வந்திருக்காது. இருப்பினும் சாத்தியக்கூறுகள் இருக்கும். இக்காலத்தில் கணைய புற்றுநோயை கண்டறிவது என்பது கடினம்.

அடுத்து, ஸ்டேஜ் 1 அல்லது 2. இதில் ஸ்டேஜ் 1-ல் ஒரு சிறிய கட்டி தென்படும். அதன் பின் ஸ்டேஜ் 2-ல் நிறைய கட்டிகள் உருவாகியிருக்கும். இது சுமார் 6.8 வருடங்கள் வரை இருக்கும். ஆனால் புற்றுநோய் கட்டிகள் வளரத் தொடங்கிய விட்டால், மின்னல் வேகத்தில் பெரிதாகத் தொடங்கிவிடும்.

World Pancreatic Cancer Day 2025 Doctor Lists Warning Signs of Pancreatic Cancer

கடைசியாக ஸ்டேஜ் 3 மற்றும் ஸ்டேஜ் 4. இதில் ஸ்டேஜ் 3-ல் புற்றுநோய் கட்டிகள் கணையம் முழுவதும் பரவியிருக்கும். ஸ்டேஜ் 4-ல் புற்றுநோய் செல்கள் உடலின் பிற உறுப்புகளுக்கு பரவத் தொடங்கும். இப்படி மற்ற உறுப்புகளுக்கு பரவத் தொடங்கிவிட்டால், சிகிச்சை அளிப்பது என்பது மிகவும் கடினம்.

இந்த ஸ்டேஜ் 3 மற்றும் 4-க்கு வந்துவிட்டால், பின் ஆயுட்காலம் என்பது மிகவும் குறைவு. இந்நிலையில் இருந்து சிகிச்சை மேற்கொண்டாலும், குறுகிய காலம் தான் உயிர்வாழ முடியும். எனவே தான் புற்றுநோயை ஆரம்பத்திலேயே கண்டறிந்து சிகிச்சை பெற வேண்டும். ஆரம்பத்தில் கண்டறியும் போது, அந்த செல்களின் வளர்ச்சியைத் தடுக்க ஹீமோதெரபி, ரேடியோதெரபி போன்ற முறைகள் மேற்கொள்ளலாம்." என்று டாக்டர் கூறினார்.

எனவே நண்பர்களே! உங்களுக்கு மேலே கொடுக்கப்பட்டுள்ள அறிகுறிகள் தெரிந்தால், அவற்றை சாதாரணமாக எடுத்துக் கொள்ளாமல், உடனே மருத்துவரை அணுகி பரிசோதனை செய்து பாருங்கள்.

Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.

Desktop Bottom Promotion