Latest Updates
-
இந்த 5 உணவுகள் உங்கள் உடலில் துர்நாற்றத்தை ஏற்படுத்தி சங்கடமாக உணர வைக்குமாம் - பார்த்து சாப்பிடுங்க -
வாஸ்து செடிகள்: கோடை வெயிலில் வீட்டை குளிர்ச்சியாக வைத்து அதிர்ஷ்டத்தை அள்ளுவது எப்படி? -
சிக்கன் பிரியாணியை விட சூப்பரா இருக்கும் ஆம்பூர் ஸ்டைல் சோயா பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க -
சனிபகவானின் வக்ர பெயர்ச்சியால் 138 நாட்களுக்கு ஜெயிக்கிற குதிரையா மாறப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
சீதா நவமி: உங்கள் வீட்டில் இந்த மாற்றங்களைச் செய்தா பணமழை கொட்டுமா? அதிர்ஷ்டம் தரும் வாஸ்து ரகசியம்! -
கோடையில் இந்த கஞ்சியை தினமும் 1 கப் குடிங்க.. உடல் எடையும் குறையும், உடல் சூடும் தணியும்.. -
இன்றைய ராசிபலன் 25 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ராஜயோகம் கூடிவரப்போகுதாம் -
செவ்வாய் மேஷ ராசிக்கு செல்வதால் கோடீஸ்வர யோகத்தை பெறப்போகும் 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
இந்தியாவின் தேசிய காய் என்று அழைக்கப்படும் காய்கறி எது? அதற்கான காரணம் என்ன தெரியுமா? -
ஏப்ரல் இறுதியில் குரு-புதன் சேர்க்கையால் உருவாகும் அரிய ராஜயோகம்: இந்த 3 ராசிகளின் வருமானம் உயரும்!
World Malaria Day 2025: கொடிய மலேரியாவின் அறிகுறிகளை குறைக்க இந்த 2 பானங்களை குடிங்க.. கூறும் டாக்டர்..
World Malaria Day 2025: கொசுக்களின் மூலம் மக்களிடையே டெங்கு, மலேரியா, சிக்குன்குனியா போன்ற ஏராளமான நோய்கள் பரவுகின்றன. சொல்லப்போனால் ஒவ்வொரு ஆண்டும் கொசுக்கடியால் லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்து வருகின்றனர். அதுவும் ஆண்டுதோறும் மலேரியா நோயினால் சுமார் 7 லட்சம் பேர் இறக்கின்றனர்.
உலகளவில் 3.3 பில்லியன் மக்கள் மலேரியாவினால் பாதிக்கப்படுகின்றனர். இந்த மலேரியாவை கண்டறிந்து அதைக் கட்டுப்படுத்துவதற்கான விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 25 ஆம் தேதி உலக மலேரியா தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்த மலேரியா மழைக்காலங்களில் மட்டுமின்றி, கோடைக்காலத்திலும் வேகமாக அதிகரித்து வருகிறது. சொல்லப்போனால் மழைக்காலத்தை விட கோடைக்காலம் கொசுக்களின் இனப்பெருக்கத்திற்கு சாதகமான சூழலை உருவாக்குகிறது. எனவே தான் கோடையில் மலேரியா அதிகம் பரவுகிறது.
உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்தும் இந்த மலேரியா பெண் அனோபிலிஸ் கொசுக்கள் கடிப்பதன் மூலம் மனிதர்களுக்கு பரவுகிறது. இந்த மலேரியா குறிப்பாக வெப்பமண்டல மற்றும் மிதவெப்ப மண்டல பகுதிகளில் அதிகம் பரவுகிறது.
மலேரியாவை உண்டாக்கும் கொசு ஒருவரைக் கடித்தால், அதன் மூலம் கல்லீரலில் கிருமிகள் பெருக்கமடைந்து, இரத்த சிவப்பணுக்களை பாதிக்கும். இரத்த சிவப்பணுக்கள் கிருமிகளால் பாதிக்கப்படுவதால், அது கடுமையான சிக்கல்கள் மற்றும் இறப்பு ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கின்றன. எனவே மலேரியாவால் ஒருவர் பாதிக்கப்பட்டிருந்தால், உடனே மருத்துவரை அணுகி சிகிச்சை பெற வேண்டியது அவசியம்.
அதற்கு முதலில் மலேரியாவின் அறிகுறிகளை தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டும். அதன் பின் மலேரியாவின் அறிகுறிகளைக் குறைக்க முயற்சிக்க வேண்டும். இந்த மலேரியாவின் அறிகுறிகளையும், அந்த அறிகுறிகளைக் குறைக்க உதவும் ஒருசில பானங்களை டாக்டர் சந்தோஷிமா கார்த்திகேயன் தனது இன்ஸ்டா பக்கத்தில் தெரிவித்துள்ளார். இப்போது மலேரியாவின் ஆரம்ப கால எச்சரிக்கை அறிகுறிகளையும், அந்த அறிகுறிகளை குறைக்கும் பானங்களையும் காண்போம்.
மலேரியாவின் ஆரம்ப கால எச்சரிக்கை அறிகுறிகள்
* அளவுக்கு அதிகமாக காய்ச்சல்
* அதிகமான குளிர் மற்றும் நடுக்கம்
* தலைவலி
* மிகுந்த உடல் வலி
* உடல் சோர்வு
* குமட்டல், வாந்தி
* வயிற்றுப்போக்கு
* இரத்த சோகை
* மஞ்சள் காமாலை
மலேரியாவின் அறிகுறிகளைக் குறைக்க உதவும் பானங்கள்
பானம் #1
தேவையான பொருட்கள்:
* இஞ்சி - 1 துண்டு
* துளசி இலைகள் - 10
* தண்ணீர் - 1 டம்ளர்
* தேன் - 1 டீஸ்பூன்
* எலுமிச்சை - பாதி
செய்முறை:
* முதலில் இஞ்சியின் தோலை நீக்கிவிட வேண்டும்.
* பின் ஒரு பாத்திரத்தில் ஒரு டம்ளர் நீரை ஊற்றி, அதில் இஞ்சியைத் தட்டிப் போட்டு அடுப்பில் வைக்க வேண்டும்.
* பின்பு அதில் 10 துளசி இலைகளை சேர்த்து நன்கு கொதிக்க வைக்க வேண்டும்.
* பிறகு அதை இறக்கி வடிகட்டி, அதில் 1 டீஸ்பூன் தேன் மற்றும் பாதி எலுமிச்சையின் சாற்றினை சேர்த்து கலந்து குடிக்க வேண்டும்.
பானம் #2
தேவையான பொருட்கள்:
* பால் - 1 டம்ளர்
* மஞ்சள் தூள் - 2 சிட்டிகை
* தேன் - 1 டீஸ்பூன்
செய்முறை:
* முதலில் ஒரு டம்ளர் பாலை பாத்திரத்தில் ஊற்றி அடுப்பில் வைத்து நன்கு கொதிக்க வைத்து இறக்கிக் கொள்ள வேண்டும்.
* பின் பால் வெதுவெதுப்பான நிலைக்கு வந்ததும், அதில் 2 சிட்டிகை மஞ்சள் தூள் சேர்த்து கலந்து, அத்துடன் 1 டீஸ்பூன் தேன் சேர்த்து கலந்து குடிக்க வேண்டும்.
மேலே கொடுக்கப்பட்டுள்ள 2 பானங்களையும் மலேரியா அறிகுறிகளைக் கொண்டவர்கள் குடித்து வந்தால், அந்த அறிகுறிகள் குறைவதற்கான வாய்ப்புக்கள் இருப்பதாக டாக்டர் சந்தோஷிமா கூறியுள்ளார்.
மலேரியாவை தடுப்பதற்கான சில டிப்ஸ்...
* கொசுக்களால் தான் மலேரியா பரவுகிறது. எனவே கொசுக்கள் உங்கள் வீட்டிற்குள் வராமல் இருக்க கொசு வலைகள், பூச்சிக்கொல்லிகள் மற்றும் எண்ணெய்களைப் பயன்படுத்துங்கள்.
* உங்கள் வீட்டையும் சுற்றியுள்ள பகுதியையும் சுத்தமாக வைத்திருங்கள். வீட்டைச் சுற்றி தண்ணீர் தேங்குவதைத் தடுக்க உடனே நடவடிக்கை எடுங்கள்.
* கொசுக்கள் உங்களை கடிக்காமல் இருக்க வெளிர் நிற, தளர்வான மற்றும் உடல் முழுவதும் மறையக்கூடியவாறான ஆடைகளை அணியுங்கள்.
* முக்கியமாக நீங்கள் மலேரியா பரவும் பகுதிக்குச் சென்றால், மருத்துவரை அணுகி மலேரியாவைத் தடுக்க மருந்துகளை எடுத்துக் கொள்ளுங்கள்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications