Latest Updates
-
LPG Gas: தலைவிரித்தாடும் சிலிண்டர் தட்டுப்பாடு... சிலிண்டர் சீக்கிரம் தீராம இருக்க இப்படி சமையல் பண்ணுங்க...! -
கோதுமை ரவா தோசையும்.. புதினா சட்னியும்..- 10 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 11 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு மனஉளைச்சலான நாளாக இருக்குமாம்...! -
குரு-புதன் உருவாக்கும் சக்தி வாய்ந்த ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
தமிழ்நாட்டில் உள்ள சர்க்கரை நோயை குணப்படுத்தும் 1,300 ஆண்டுகள் பழமையான இந்த கோயில் பற்றி தெரியுமா? -
1 கப் ரவை இருந்தா.. ஈவ்னிங் கண்டிப்பா இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. செமயா இருக்கும்.. -
1 வருடம் கழித்து மீனம் செல்லும் சூரியன்: மார்ச் 15 முதல் இந்த 4 ராசிக்காரங்க எச்சரிக்கையா இருக்கணும்.. -
கல்யாண வீட்டு தஞ்சை வத்தக்குழம்பு - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. டேஸ்ட் அள்ளும்.. -
World Kidney Day 2026: சிறுநீரகங்கள் ஆரோக்கியமா இருக்கணுமா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது...
உங்ககிட்ட இந்த அறிகுறிகள் தெரியுதா? அப்ப உங்களுக்கு நுரையீரல் புற்றுநோய் இருக்க வாய்ப்பிருக்கு... உஷார்..
World Lung Cancer Day 2025: ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 01 ஆம் தேதி உலக நுரையீரல் புற்றுநோய் தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. இந்நாளில் உலகளவில் மிகவும் கொடிய நோயாக கருதப்படும் புற்றுநோய்களுள் ஒன்றான நுரையீரல் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு பிரச்சாரங்கள் ஆங்காங்கு நடத்தப்படும். புற்றுநோய்களிலேயே நுரையீரல் புற்றுநோய் மிகவும் பொதுவான புற்றுநோயாகவும், உலகளவில் புற்றுநோய் இறப்புக்கு முக்கிய காரணமாகவும் உள்ளது.
முக்கியமாக இந்த புற்றுநோய் பெண்களை விட ஆண்களை அதிகமாக பாதிக்கிறது. அதுவும் நுரையீரல் புற்றுநோய் புகைப்பிடிப்பவர்களுக்கு தான் வரும் என்று பலரும் நினைத்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால் இந்த நுரையீரல் புற்றுநோயானது வேறுபல காரணிகளாலும் ஏற்படலாம்.

இப்படிப்பட்ட நுரையீரல் புற்றுநோயை ஆரம்பத்திலேயே கண்டறிந்தால், சிகிச்சை அளித்து குணப்படுத்திவிடலாம். இந்த நுரையீரல் புற்றுநோய் குறித்தும், அதன் முக்கிய அறிகுறிகளைப் பற்றியும் டாக்டர் கார்த்திகேயன் தனது சமூகவலைத்தள பக்கத்தில் பகிர்ந்து கொண்டார். அது என்னவென்பதை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
அதில் அவர் கூறியதாவது, "நுரையீரல் புற்றுநோய் குறித்து அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம். ஏனெனில் தற்போது அப்படிப்பட்ட சூழலில் நாம் வாழ்ந்து வருகிறோம். காற்று மாசு நிறைந்த சூழலில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். அதனாலேயே நுரையீரல் புற்றுநோய் குறித்து தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம்." என்று கூறினார்.
நுரையீரல் புற்றுநோய் யாருக்கெல்லாம் வரும் வாய்ப்புள்ளது?
மேலும்"நுரையீரல் புற்றுநோய் காற்று மாசு, டீசல் புகை, ஆஸ்பஸ்டாஸ் கூரையின் கீழ் வசிப்பது போன்ற சூழ்நிலைகளில் இருந்தால், அவர்களுக்கு நுரையீரல் புற்றுநோய் வருவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம்." என்று கூறினார்.
அதோடு "இந்த நுரையீரல் புற்றுநோய் புகைப்பிடிப்பவர்கள் அனைவருக்குமே வருவது கிடையாது. அதிலும் மரபணு ஒரு முக்கிய பங்கை வகிக்கிறது. ஆனாலும் புகைப்பிடிப்பவர்களிடையே எந்த அளவிற்கு புற்றுநோய் வருகிறதோ, அதே அளவுக்கு புகைப்பிடிக்காவர்களுக்கும் புற்றுநோய் வரத்தான் செய்கிறது. ஏனெனில் புகைப்பிடிப்பவர்கள் மட்டுமில்லாமல், புகைப்பிடிப்பவர்களுக்கு அருகில் இருந்து அந்த காற்றை சுவாசிக்கும் நபர்களுக்கும், புகைப்பிடிப்பவர்களுக்கு எந்த அளவிற்கு நுரையீரல் புற்றுநோய் வரும் அபாயம் உள்ளதோ, அதே அளவு அருகில் இருப்பவர்களுக்கும் உள்ளது. முக்கியமாக நுரையீரல் புற்றுநோயை ஆரம்ப கட்டத்திலேயே கண்டுபிடித்துவிட்டால், அதற்குரிய சிகிச்சையை மேற்கொண்டு ஓரளவு சீக்கிரம் குணப்படுத்தி விட முடியும்" என்று டாக்டர் கார்த்திகேயன் கூறினார்.
நுரையீரல் புற்றுநோயின் அறிகுறிகள்
மேலும் டாக்டர் கார்த்திகேயன் நுரையீரல் புற்றுநோயின் முக்கிய அறிகுறிகளையும் பட்டியலிட்டார். அந்த அறிகுறிகளாவன:
1. தொடர்ச்சியான தொண்டை வலி
நுரையீரல் புற்றுநோயின் அறிகுறிகளுள் முதன்மையானது தொடர்ச்சியான தொண்டை வலி. இப்படியான வலியை தொடர்ந்து ஒருவர் சந்தித்தால், அவர்கள் உடனே மருத்துவரை அணுகி பரிசோதனை செய்ய வேண்டும்.
2. உணவை விழுங்கும் போது வலி
"உணவை விழுங்கும் போது சந்திக்கும் வலியை டிஸ்பேஜியா என்று அழைப்பர். இது நுரையீரல் புற்றுநோயின் மிகவும் அபாயகரமான அறிகுறியும் கூட. ஏனெனில் நுரையீரல் புற்றுநோய் வளர்ந்து தொண்டைக்குழாய் வரை பாதித்திருந்தால், இப்படியான அறிகுறி தென்படும்" என்று டாக்டர் கார்த்திகேயன் கூறினார்.
3. உடல் வலி
"தொடர்ச்சியான உடல் வலியை ஒருவர் சந்தித்தால், அதுவும் நுரையீரல் புற்றுநோயின் அறிகுறியாகும். ஏனெனில் அந்த புற்றுநோய் செல்கள் வெளியே பரவி, எலும்புகள் வரை பரவி, எலும்புகளை வலுவிழக்க செய்வதால் வரக்கூடிய வலியாகும். குறிப்பாக இரவு நேரங்களில் கடுமையான வலியை சந்திக்க நேரிடும். அதுவும் முதுகு, தோள்பட்டை, கைகள் மற்றும் கழுத்துகளில் அதிக வலி ஏற்பட்டால், உடனடியாக மருத்துவரிடம் செல்ல வேண்டும். ஏனென்றால் சாதாரண வலிக்கும், புற்றுநோய் வலிக்கும் சில வித்தியாசங்கள் நன்கு தெரியும்." என்று டாக்டர் கூறினார்.
4. மார்பு வலி
"சில சமயங்களில் சிலருக்கு மார்பக பகுதியில் நீண்ட நேரம் அசாதாரண வலி இருக்கும். திடீரென்று நுரையீரலை சுற்றி கூர்மையான வலி ஏற்படும். அதோடு சேர்ந்து முதுகு மற்றும் தோள்பட்டைகளிலும் வலிகள் உண்டாகலாம்" என்றும் டாக்டர் கூறினார்.
5. அசாதாரண எடை இழப்பு
"திடீரென்று அசாதாரணமான அளவில் உடல் எடை இழப்பு ஏற்பட்டால், அது நுரையீரல் புற்றுநோயின் அறிகுறியாக இருக்கலாம். காரணமே இல்லாமல் ஒருவர் அதிக அளவு எடை குறைந்தால், அது மிகவும் ஆபத்தானது. புற்றுநோயால் பாதிக்கப்படுபவர்களிடம் இந்த அறிகுறி அவசியம் தெரியும். அதுவும் திடீரென்று 10 சதவீத அளவுகு ஒரே மாதத்திற்குள் உடல் எடை குறைந்தால், உடனே மருத்துவரிடம் சென்று பரிசோதனை செய்ய வேண்டும்" என்று டாக்டர் கூறினார்.
எனவே நண்பர்களே! உங்களுக்கு மேலே கொடுக்கப்பட்டுள்ள அறிகுறிகள் தெரிந்தால், சற்றும் தாமதிக்காமல் உடனே மருத்துவரை அணுகி சிகிச்சை மேற்கொள்ளுங்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications











