Latest Updates
-
குரு பகவானின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 5 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்ட காத்து வீசும்! -
1 கப் தயிரும், 1 குடைமிளகாயும் இருந்தா.. மதியம் இப்படி குழம்பு வையுங்க.. சாதத்துக்கு அள்ளும்.. -
உங்களுக்கு உடம்பு சூடு பிடிக்கக்கூடாதா? அப்ப ஊட்டச்சத்து நிபுணர் சொல்ற இந்த 4 காய்கறிகளை அடிக்கடி சாப்பிடுங்க! -
1 வருடம் கழித்து மேஷத்தில் உருவாகும் புதாதித்ய ராஜயோகம்: இந்த 3 ராசிக்காரங்க தொழிலில் கொடிகட்டி பறக்கபோறாங்க.! -
தேங்காய் சேர்க்காமலேயே சூப்பரா தேங்காய் சட்னி செய்யலாம் தெரியுமா? எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 20 ஏப்ரல் 2026: இன்று இந்த 3 ராசிக்காரர்களுக்கு மனஅழுத்தம் நிறைந்த நாளாக இருக்குமாம் -
12 ஆண்டுக்கு பின் குருபகவான் கடக ராசிக்கு செல்வதால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் யார் தெரியுமா? -
வல்லாரை கீரையை இந்த மாதிரி சட்னி செஞ்சு பாருங்க - புத்தியும், ஆரோக்கியமும் அதிகமாகும் -
வாஸ்து படி இந்த 5 செடிகள் உங்கள் வீட்டில் இருந்தால் துரதிர்ஷ்டம் உங்கள் வீட்டை விட்டு எப்பவும் போகாதாம் -
முருங்கைக்காய் வாங்குனா இந்த வித்தியாசமான பொரிச்ச குழம்பு செஞ்சு பாருங்க - டேஸ்ட் தாறுமாறா இருக்கும்
இந்த அறிகுறிகள் காலை வேளையில் தெரியுதா? அப்ப கல்லீரல் ஆபத்தில் இருக்கு-ன்னு அர்த்தம்.. உஷார்..
World Liver Day 2024: மனித உடலில் கல்லீரல் மிகப்பெரிய உறுப்பாகும். இந்த கல்லீரலை ஆரோக்கியமாக இருந்தால் தான் உடலின் பிற உறுப்புக்கள் நன்கு வேலை செய்யும். இப்படிப்பட்ட கல்லீரலின் ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 19 ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது.
உடலில் சுமார் 500-க்கும் அதிகமான வேலைகளை செய்யும் கல்லீரலில் பிரச்சனைகள் வருவதற்கான அபாயம் அதிகம் உள்ளது. எனவே ஒவ்வொருவரும் தங்கள் கல்லீரலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள முயற்சிக்க வேண்டும். கல்லீரலில் சிறு பிரச்சனைகள் ஏற்பட்டாலும், அதை உடனே கவனித்து சிகிச்சை பெற வேண்டும்.

சரி, கல்லீரலில் பிரச்சனை இருப்பதை எப்படி அறிவது என்று நீங்கள் கேட்கலாம். கல்லீரலில் ஏதேனும் பிரச்சனை அல்லது நோய் இருந்தால், அது ஒருசில அறிகுறிகளை வெளிக்காட்டும். குறிப்பாக பின்வரும் அறிகுறிகளை ஒருவர் காலையில் சந்தித்தால், கல்லீரல் நோய் உள்ளது என்று அர்த்தம். இப்போது அந்த அறிகுறிகள் என்னவென்பதைக் காண்போம்.
கல்லீரலின் வேலை என்ன?
கல்லீரல் நமது உடலில் சுமார் 500-க்கும் அதிகமான பணிகளை செய்கின்றன. முக்கியமாக செரிமான பாதையில் இருந்து வரும் இரத்தத்தை உடலின் மற்ற உறுப்புகளுக்கு அனுப்பும் முன், அந்த இரத்தத்தை வடிகட்டுகிறது. வளர்சிதை மாற்றம், கிளைகோஜன் சேமிப்பை முறைப்படுத்துதல், உண்ணும் உணவை செரித்து ஆற்றலை உருவாக்கவும், சுரப்பிகளை செயல்பட வைக்கவும், காயங்களை ஆற்றவும், இரத்தத்தை உறைய வைக்க தேவையான புரோட்டீன்களையும், நொதிகளையும் உற்பத்தி செய்யவும் உதவி புரிகிறது. இவ்வளவு பல முக்கியமான வேலைகளை நமது கல்லீரல் தினமும் செய்து வருகிறது. இப்போது கல்லீரலில் பிரச்சனைகள் அல்லது நோய்கள் இருந்தால் தெரியும் அறிகுறிகளைக் காண்போம்.
உடல் சோர்வு
மிகுந்த உடல் சோர்வு, பலவீனம், ஆற்றல் இல்லாமை போன்ற அறிகுறிகளை ஒருவர் காலை அல்லது பகல் வேளையில் அதிகம் சந்தித்தால், அது கல்லீரல் நோயின் முதன்மையான அறிகுறியாகும். உடல் சோர்வு ஒரு பொதுவான ஆரோக்கிய பிரச்சனையாகும். இது பல நோய்களின் முதன்மையான அறிகுறிகளுள் ஒன்றாக இருக்கலாம். ஆனால் எந்த வேலையும் செய்யாமல் நல்ல ஓய்வை எடுத்த பின்னரும், ஒருவர் இப்படி உடல் சோர்வை சந்தித்தால், கல்லீரலில் ஏதோ கோளாறு உள்ளது என்று அர்த்தம். இந்நிலையில், உடனே மருத்துவரை அணுகி உடலை பரிசோதிக்க வேண்டும்.
அடிவயிற்றில் அசௌகரியம்
அடிவயிற்று பகுதியில் வலி, உப்புசம், வயிறு நிரம்பிய உணர்வு போன்றவற்றை அனுபவித்தால், அது கல்லீரல் நோயின் ஆரம்ப கால எச்சரிக்கை அறிகுறியாகும். நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஹெல்த் (NIH) படி, நாள்பட்ட கல்லீரல் நோயால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு வயிற்று வலி மற்றும் அசௌகரியம் ஒரு மாதத்திற்கும் மேலாக நீடிக்கும். எனவே இப்படியான அசௌகரியத்தை ஒருவர் நீண்ட நாட்களாக அனுபவித்து வந்தால், தாமதிக்காமல் மருத்துவரை அணுகுங்கள்.
மஞ்சள் காமாலை
கல்லீரலில் பிரச்சனை இருந்தால் வெளிப்படும் ஒரு முக்கியமான அறிகுறி தான் மஞ்சள் காமாலை. இந்த மஞ்சள் காமாலை இருந்தால், கண்கள் மற்றும் சருமம் மஞ்சள் நிறத்தில் வெளிப்படத் தொடங்கும். இப்படி மஞ்சள் நிறத்தில் தெரிய காரணம், இரத்தத்தில் பிலிரூபின் அதிகமாக இருப்பது தான். எனவே உஷாராக இருங்கள்.
விவரிக்க முடியாத எடை இழப்பு
திடீரென்று உடல் எடையில் மாற்றம் தெரிகிறதா? அதுவும் காரணம் ஏதும் இல்லாமல் உங்கள் எடை பெருமளவு குறைந்திருப்பதை காண்கிறீர்களா? அப்படியானால் அது கல்லீரல் நோய்க்கான ஆரம்ப அறிகுறியாகும். அதுவும் கல்லீரல் புற்றுநோய் அல்லது மேம்பட்ட சிரோசிஸ் போன்றவை இருந்தால், இம்மாதிரியான அறிகுறியை சந்திக்க நேரிடும். எனவே நீங்கள் முயற்சி ஏதும் செய்யாமல் எடை குறைந்தால், அதை நினைத்து சந்தோஷப்படாமல், உடனே மருத்துவரை அணுகுங்கள்.
குடலியக்க மாற்றம்
திடீரென்று மலச்சிக்கல், வயிற்றுப்போக்கு அல்லது வெளிரிய நிறத்தில் மலம் என குடலியக்கங்களில் ஏற்படும் மாற்றங்கள் கல்லீரலில் உள்ள பிரச்சனையை குறிக்கலாம். அதுவும் ஒருவரது மலத்தின் நிறம், வாசனை மற்றும் நிலைத்தன்மை போன்றவற்றில் ஏற்படும் மாற்றம் கல்லீரல் நோயின் எச்சரிக்கை அறிகுறியாகும். இப்படிப்பட்ட சூழ்நிலையில் சற்றும் தாமதிக்காமல் மருத்துவரிடம் இதுக்குறித்து தெரிவிக்க வேண்டும்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications











