Latest Updates
-
இந்த 3 ராசிக்காரங்க கடவுளால் ஆசீர்வதிக்கப்பட்ட அதிர்ஷ்ட ஆன்மாக்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
காய்ந்த பட்டாணி இருந்தா.. இந்த பக்குவத்துல குருமா செய்யுங்க.. சப்பாத்திக்கு வேற லெவல்-ல இருக்கும்.. -
பெண்களின் உடல் பற்றிய ஆச்சரியப்பட வைக்கும் உண்மைகள் - இவ்வளவு ரகசியம் ஒளிஞ்சிருக்கா? -
ஒரே நாளில் நடக்கும் சூரிய-சுக்கிர பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது.. -
புதன் கடக ராசியில் வக்ர பெயர்ச்சி அடைவதால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
சளி, இருமலுக்கு இப்படி கொங்குநாடு ஸ்டைலில் ரசம் வெச்சு சாப்பிடுங்க.. டக்குன்னு சரியாகும்.. -
ஐயங்கார் ஸ்டைல் புளிக்குழம்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சுவை வேற லெவலில் இருக்கும் -
H1N1 Alert: கர்நாடகாவில் பன்றிக் காய்ச்சலால் ஒருவர் பலி - இதன் அறிகுறிகள் என்ன? இது எப்படி பரவுகிறது? -
சில நாடுகள் ஏன் இடதுப்புறத்தில் கார் ஓட்டுகின்றன? சில நாடுகள் ஏன் வலதுப்புறத்தில் கார் ஓட்டுகின்றன தெரியுமா? -
செவ்வாய் பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 45 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க வேலையில் கவனமா இருக்கணும்..
World Liver Day 2024: இந்த பழக்கங்கள் இருந்தா உடனே கைவிடுங்க.. இல்லன்னா கல்லீரல் சீக்கிரம் செயலிழந்துவிடும்..
World Liver Day 2024: நமது உடலில் உள்ள மிகவும் முக்கியமான உறுப்புகளில் கல்லீரலும் ஒன்றாகும். இந்த கல்லீரல் வளர்சிதை மாற்றம், செரிமானம், நச்சுக்களை நீக்குவது, ஊட்டச்சத்துக்களை சேமிப்பது போன்ற 500-க்கும் மேற்பட்ட முக்கியமான பல செயல்பாடுகளை செய்கின்றன.
இப்படிப்பட்ட கல்லீரல் ஆரோக்கியமாக இருந்தால் தான் ஒட்டுமொத்த உடலும் ஆரோக்கியமாக இருக்கும். இந்த கல்லீரல் ஆரோக்கியத்தின் முக்கியத்துவம் மற்றும் கல்லீரல் நோய்க் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 19 ஆம் தேதி உலக கல்லீரல் தினம் அனுசரிக்கப்படுகிறது.

ஆனால் தெரிந்தோ, தெரியாமலோ நமது ஒருசில பழக்கவழக்கங்கள் கல்லீரலை மோசமாக பாதிக்கின்றன. அதுவும் மது அருந்துவது, புகைப்பிடிப்பது என்பன போன்ற கெட்ட பழக்கங்கள் மட்டுமல்லாமல், நமது ஒருசில உணவுப் பழக்கங்களும் கல்லீரலில் பெரிய சேதத்தை ஏற்படுத்துகின்றன. இப்போது எந்த மாதிரியான பழக்கங்கள் கல்லீரலை சேதப்படுத்துகின்றன என்பன குறித்து காண்போம்.
அதிக ஜங்க் உணவுகள்
ஜங்க் உணவுகளில் ட்ரான்ஸ் கொழுப்புக்கள் அதிகமாக காணப்படுகின்றன. ஜங்க் உணவுகள் என்பவை ஃபாஸ்ட் புட், பதப்படுத்தப்பட்ட உணவுகள் மற்றும் பாக்கெட்டில் அடைத்து விற்கப்படும் ரெடிமேட் உணவுப் பொருட்களாகும். இந்த உணவுகளில் உள்ள நச்சுக்கள் நாம் நினைத்து பார்க்க முடியாத அளவில் கல்லீரலில் பெரிய அளவில் சேதத்தை ஏற்படுத்துவதோடு, இரத்த சர்க்கரை அளவையும், கொழுப்புக்களையும் அதிகரித்து, ஒரு கட்டத்தில் கல்லீரல் சிரோசிஸ் அல்லது கல்லீரல் செயலிழப்பு போன்றவற்றை உண்டாக்கக்கூடும்.
அதிக சர்க்கரை
நீங்கள் உணவில் அதிக சர்க்கரையை சேர்த்து சாப்பிடுவீர்களா? அப்படியானால் உடனே அதை நிறுத்துங்கள். பொதுவாக சர்க்கரையானது இனிப்பாக இருந்தாலும், ஒரு விஷப்பொருள். இந்த சர்க்கரையை தொடர்ந்து ஒருவர் நீண்ட காலம் அதிகம் உட்கொண்டு வந்தால், அது ஒரு கட்டத்தில் கல்லீரல் நோய்க்கு வழிவகுக்கும். எனவே சர்க்கரை நிறைந்த உணவுகளை உண்பதை உட்னே நிறுத்துங்கள்.
வலி நிவாரணி மாத்திரைகள்
நீங்கள் அடிக்கடி வலி நிவாரணி மாத்திரைகள், தூக்க மாத்திரைகள், மன இறுக்கத்தை குறைக்கும் மாத்திரைகள் போன்றவற்றை எடுத்தால், அதை உடனே நிறுத்துங்கள். இது தவிர, கொக்கைன், மரிஜூவானா போன்ற போதைப் பொருட்களையும் அதிகம் உட்கொண்டு வந்தால், அது கல்லீரலில் பெரிய சேதத்தை ஏற்படுத்திவிடும்.
உடலுழைப்பில்லாத வாழ்க்கைமுறை
ஒருவர் தினமும் எந்த ஒரு உடற்பயிற்சியிலும் ஈடுபடாமல், உடலுக்கு எந்த ஒரு வேலையும் கொடுக்காமல் சாப்பிடுவது, தூங்குவது, உட்கார்ந்து வேலை செய்வது என்று மட்டுமே உடலுழைப்பில்லாத வாழ்க்கைமுறையை வாழ்நது வந்தால், அது கொழுப்பு கல்லீரல் நோயின் அபாயத்தை அதிகரித்துவிடும். எனவே உங்கள் கல்லீரல் ஆரோக்கியமாக இருக்க விரும்பினால், தினமும் சிறிது நேரமாவது உடற்பயிற்சியில் ஈடுபடுங்கள்.
மன அழுத்தம்
தற்போதைய வேலைப்பளு நிறைந்த வாழ்க்கை முறையினால், 90 சதவீத மக்கள் மன அழுத்தத்துடன் வாழ்ந்து வருகிறார்கள். மன அழுத்தம் அதிகரிக்கும் போது, உடலில் கார்டிசோல் என்னும் ஹார்மோனின் அளவு அதிகரித்து, கண்ட உணவுகளை உட்கொள்ளத் தூண்டுவதோடு, புகைப்பிடிப்பது, மது அருந்துவது போன்றவற்றை செய்யத் தூண்டி, கல்லீரலை மோசமாக சேதப்படுத்தும். எனவே மன அழுத்தமில்லாமல் இருக்க தினமும் யோகா, தியானம் போன்றவற்றில் ஈடுபடுங்கள்.
போதுமான நீர் அருந்தாமை
உடல் ஆரோக்கியமாக இருக்க உடலை நீரேற்றத்துடன் வைத்துக் கொள்ள வேண்டும். உடலை நீரேற்றத்துடன் வைத்துக் கொள்ள தண்ணீரை அதிகம் அருந்த வேண்டும். நீரை அதிகம் அருந்தும் போது, அது கல்லீரலில் எந்த பாதிப்பும் ஏற்படாமல், உடலில் இருந்து நச்சுக்களை வெளியேற்ற உதவுகிறது. எனவே கல்லீரலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள விரும்பினால், தினமும் போதுமான அளவு நீரை அருந்துங்கள்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications